மாடல மறையோன்
Appearance
மாடலன் என்னும் பெயர் கொண்ட மறையோன் ஒருவனைச் சிலப்பதிகாரம் மாடல மறையவன் என்று குறிப்பிடுகிறது. [1] இவன் மறை ஓதுபவன். தலைச்செங்கானம் என்னும் ஊரினன். குமரித் துறையில் நீராடிவிட்டுத் தன் ஊருக்குத் திரும்பும்போது மதுரைப் புறஞ்சேரியில் கவுந்தியடிகளைக் காண வருகிறான். அவனைக் கண்டு கோவலன் வணங்குகிறான். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்
- ↑
தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து,
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை
மா மறை முதல்வன் மாடலன் என்போன்
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து,
தமர்முதல் பெயர்வோன், தாழ் பொழில் ஆங்கண்,
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க,
கவுந்தி இடவயின் புகுந்தோன் தன்னை
கோவலன் சென்று சேவடி வணங்க