உள்ளடக்கத்துக்குச் செல்

மன்மத லீலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்மத லீலை
மன்மத லீலை திரைப்பட ஒலிநாடாவின் அட்டைப்படம்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புபி. ஆர். கோவிந்தராஜன்
ஜே. துரைசாமி
கதைகே. பாலச்சந்தர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகமல்ஹாசன்
ஆலம்
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
வெளியீடுபெப்ரவரி 27, 1976
நீளம்4434 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மன்மத லீலை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஆலம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கில் மன்மத லீலா என்றும் இந்தியில் மீத்தி மீத்தி பாட்டின் என்றும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

கதை

[தொகு]

திருமணமான பெண்கள் உட்பட பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் மதன். இதையறிந்த அவரது மனைவி ரேகாவுக்கும் மதனுக்கும் பிணக்கு ஏற்படுகிறது. இதனால் கணவனைப் பிரிந்து தந்தையின் வீட்டுக்கு வந்துவிடுகிறாள் ரேகா. ஒரு கட்டத்தில் பெரிய மனிதரான ரேகாவின் தந்தைக்கும் வீட்டு சமையல்காரிக்கும் இடையில் உள்ள தகாத உறவை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இது அவளது தாய்க்குத் தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பதை அறிந்து மேலும் அதிர்ச்சியடைகிறாள். இறுதியில் கணவனை வந்தடைகிறாள். மதன் திருந்தி மனைவியுடன் நல்ல கணவனாக வாழ்கிறான்.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இத்திரைப்படம் மூலம் நடிகர் ராதாரவி தமிழ்த் திரைப்படத் துறையில் அறிமுகமானார். இப்படத்தில் முதல்முறையாக ஒய். ஜி. மகேந்திரன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார்.[2]

பாடல்கள்

[தொகு]

எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். கண்ணதாசன் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார்.

எண். பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் நீளம் (நி:வி)
1 "மனைவி அமைவதெல்லாம்" கண்ணதாசன் கே. ஜே. யேசுதாஸ் 4:29
2 "நாதமெனும் கோயிலிலே" வாணி ஜெயராம் 4:12
3 "ஹலோ மைடியர் ராங் நம்பர்" கே. ஜே. யேசுதாஸ், எல். ஆர். ஈஸ்வரி 4:22
4 "மன்மத லீலை மயக்குது" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:02
5 "நேற்று ஒரு மேனகை" கே. ஜே. யேசுதாஸ் 4:38
6 "சுகம் தானா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 3:56

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'ஹலோ மை டியர் ராங் நம்பர்' பாடலைக் கேட்டால்... ரெண்டு விஷயம் நினைவுக்கு வரும்! ஒய்.விஜயா". ஆனந்த விகடன். 14 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "கமல் சொல்லிக் கொடுத்த கெட்ட வார்த்தை!". குங்குமம். 25 சூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மத_லீலை&oldid=4092735" இலிருந்து மீள்விக்கப்பட்டது