உள்ளடக்கத்துக்குச் செல்

மனித உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித உயிரியல் (Human biology) என்பது உயிரியல் பார்வையில் மனிதர்கள் மற்றும் மக்கள்தொகை பற்றிய ஓர் அறிவியல் ஆய்வு ஆகும். பரிணாமம், மரபியல், சூழலியல், உடற்கூறியல் மற்றும் உடலியல், வளர்ச்சி, மானுடவியல் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட மனித உயிரினத்தின் அனைத்து அம்சங்களையும் இத்துறை ஆய்வு செய்கிறது.[1] மனித உயிரியலைப் பற்றிய ஆழமான புரிதல் இதனுடன் நெருங்கிய தொடர்பிலுள்ளவர்களான மருத்துவம் படிப்பவர்கள், மருத்துவர்கள், உடல் சிகிச்சை நிபுணர்கள், மருந்தாளுநர்கள், பல் மருத்துவர்கள், கண் பார்வை நிபுணர்கள் அல்லது இத்துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு உதவியாக இருக்கும். 20 ஆம் நூற்றாண்டு வரை, உயிரியலைத் தவிர்த்து இதுபோன்ற ஒரு தனி பிரிவு இல்லை. மனித உயிரியல் என்ற இதழின் நிறுவனரான இரேமண்டு பியர்ல் என்பவரே முதன் முதலில் மனித உயிரியல் என்ற சொல்லை உச்சரித்தார்.[2]

மனித உயிரியல் என்ற சொல் மனித உடலின் அனைத்து உயிரியல் அம்சங்களையும் விவரிக்கும் பெரிய உள்ளடக்கங்கொண்ட ஒரு சொல்லாகும். பொதுவாக மனித உடல் பாலூட்டிகளுக்கான ஒரு வகை உயிரினமாகப் பயன்படுத்துகிறது. மேலும் இந்தச் சூழலில் இது பல இளங்கலைப் பல்கலைக்கழகப் பட்டங்கள் மற்றும் தொகுதிகளுக்கு அடிப்படையாகவும் உள்ளது.[3][4]

மனித உயிரியலின் பெரும்பாலான அம்சங்கள் ஒரே மாதிரியானவை அல்லது பொதுவான பாலூட்டிகளின் உயிரியலுக்கு மிகவும் ஒத்தவையாகும். குறிப்பாக சில உதாரணங்கள்:

  • மனிதனும் உடலின் வெப்பநிலையை சீராக நிர்வகிக்கிறான்.
  • மனிதனும் அகச்சட்டத்தைக் (வன்கூடு) கொண்டுள்ளான்.
  • மனிதனும் சுற்றோட்டத் தொகுதியைக் கொண்டுள்ளான்.
  • மனிதனும் நரம்புத் தொகுதியைக் கொண்டு புலணுனர் தகவல் கடத்தல் மற்றும் தசைச்செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றைக் கொண்டுள்ளான்.
  • மனிதனும் இனப்பெருக்க மண்டலத்தைக் கொண்டு தனது குட்டி ஒன்றிற்கு உயிர் கொடுத்து பால் சுரந்து உணவளிக்கிறான்.
  • மனிதனும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளான்.
  • மனிதனிலும் கழிவு மண்டலம் செயல்படுகிறது.

வரலாறு

[தொகு]

ஒருங்கிணைக்கப்பட்ட மனித உயிரியல் பற்றிய ஆய்வு 1920 ஆம் ஆண்டுகளில் தொடங்கியது. சார்லசு டார்வினின் கோட்பாடுகளால் இந்த ஆய்வு தூண்டப்பட்டது. பல விஞ்ஞானிகளால் மீண்டும் கருத்தாக்கப்பட்டது. குழந்தை வளர்ச்சி மற்றும் மரபியல் போன்ற மனித பண்புக்கூறுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இதனால் மனித உயிரியல் ஆய்வு உருவாக்கப்பட்டது.

வழக்கமான மனித குணங்கள்

[தொகு]

மனிதர்கள் மற்ற பாலூட்டிகளிலிருந்து கணிசமாக வேறுபடும் அம்சங்களே மனித உயிரியலின் முக்கிய அம்சங்களாகும்.[5]

மனிதனின் தலையில் மிகப் பெரிய மூளை உள்ளது. அது விலங்கின் மூளையை விட அளவில் மிகப் பெரியதாகும். இந்த பெரிய மூளை, சிக்கலான மொழிகளின் வளர்ச்சி மற்றும் சிக்கலான கருவிகளை உருவாக்கி பயன்படுத்தும் திறன் உள்ளிட்ட பல தனித்துவமான பண்புகளை செயல்படுத்தியுள்ளது..[6][7]

நிமிர்ந்து நிற்றல் மற்றும் இரு கால் இயக்கம் ஆகியவை மனிதர்களுக்குத் தனித்தன்மை வாய்ந்தவை அல்ல என்றாலும் மனிதர்கள் மட்டுமே இந்த இடப்பெயர்ச்சி முறையைப் பிரத்தியேகமாக நம்பியிருக்கும் ஒரே இனமாகும்.[8] இதற்காக இடுப்பு மற்றும் தொடை எலும்பின் மூட்டு மற்றும் தலையின் மூட்டு உள்ளிட்ட எலும்புக்கூட்டின் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற பாலூட்டிகளுடன் ஒப்பிடுகையில், மனிதர்கள் மிக நீண்ட காலம் வாழ்கிறார்கள்.[9] ஏறக்குறைய 80 வயது என்பது வளர்ந்த நாடுகளில் சராசரியாக இறக்கும் வயதாகும்.[10] பாலின முதிர்ச்சியுடன் கூடிய பாலூட்டிகளின் மிக நீண்ட குழந்தைப் பருவத்தையும் மனிதர்கள் பெற்றுள்ளனர். இப்பருவம் சராசரியாக 12 முதல் 16 ஆண்டுகள் வரை உள்ளது.

மனிதர்களுக்கு உரோமங்கள் இல்லை. எஞ்சியிருக்கும் சிறிதளவு உரோமமும் மெல்லிய கூந்தல் ஆகவும், சிலருக்கு மிகவும் வளர்ச்சியடையக்கூடியதாகவும் இருக்கிறது. குளிர்ச்சியிலிருந்து பாதுகாப்பு என்ற அடிப்படையில், தலை, அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் முடிகள் காணப்படுகின்றன என்பதை தவிர்த்தால் மனிதர்கள் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருக்கிறார்கள். இந்த வளர்ச்சிக்கான காரணம் இன்னும் விவாதிக்கப்படுகிறது

மனிதக் கண்கள் பொருட்களை நிறத்தில் பார்க்க முடியும், ஆனால் குறைந்த ஒளி நிலைகளுக்கு ஏற்றதாக அவை இல்லை. வாசனை மற்றும் சுவை உணர்வுகள் உள்ளன, ஆனால் அவை மற்ற பாலூட்டிகளின் பரவலானதை விட ஒப்பீட்டளவில் தாழ்ந்தவையாகும். மனித செவித்திறன் திறமையானது ஆனால் வேறு சில பாலூட்டிகளின் கூர்மை இல்லை. இதேபோல், மனிதனின் தொடுதல் உணர்வு, குறிப்பாக திறமையான பணிகளைச் செய்யும் கைகளில் நன்கு வளர்ந்திருக்கிறது, ஆனால் உணர்திறன் மற்ற விலங்குகளை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளது, குறிப்பாக பூனைகள் போன்ற உணர்வு முட்கள் இல்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sara Stinson, Barry Bogin, Dennis O'Rourke. Human Biology: An Evolutionary and Biocultural Perspective. Publisher John Wiley & Sons, 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1118108043. Page 4-5.
  2. "Human Biology - Definition, History and Major". Biology Dictionary (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-05-26. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
  3. "BSc Human Biology". Birmingham University. Archived from the original on 27 January 2022. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
  4. "SK299 Human biology". The Open University. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
  5. "The traits that make human beings unique". BBC. பார்க்கப்பட்ட நாள் 27 February 2020.
  6. "What makes humans special?". London School of Economics and Political Science. 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
  7. "We are humans". Australian Museum. 2021. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
  8. Harcourt-Smith, W.H.E. (2010). "The First Hominins and the Origins of Bipedalism.". Evo Edu Outreach 3 3 (3): 333–340. doi:10.1007/s12052-010-0257-6. 
  9. "The tricks that help some animals live for centuries". BBC. 31 March 2017. பார்க்கப்பட்ட நாள் 28 February 2021.
  10. "Life expectancy for men and women". WorldData.info. 2018. பார்க்கப்பட்ட நாள் 28 February 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_உயிரியல்&oldid=4054294" இலிருந்து மீள்விக்கப்பட்டது