உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுக்குரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொதுக்குரல்
உருவாக்குனர்மொசில்லா அறக்கட்டளை
தொடக்க வெளியீடுசூன் 19, 2017; 7 ஆண்டுகள் முன்னர் (2017-06-19)
கொள்கலம்github.com/common-voice/common-voice
கிடைக்கும் மொழிபன்மொழியாமை (கிடைக்கும் மொழிகளின் பட்டியல்)
உரிமம்Creative Commons CC0
இணையத்தளம்commonvoice.mozilla.org

பொதுக்குரல் அல்லது காமன் வாய்சு (Common Voice) என்பது பேச்சுணரி மென்பொருளுக்கான கட்டற்றத் தரவுத்தளத்தை உருவாக்க மொசில்லா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட கூட்டு வழித்திட்டமாகும். ஒலிவாங்கி மூலம் மாதிரி சொற்றொடர்களைப் பதிவுசெய்து மற்ற பயனர்களின் பதிவுகளை மதிப்பாய்வு செய்யும் தன்னார்வலர்களால் இத்திட்டம் ஆதரிக்கப்படுகிறது. படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் பொது உரிமைப் பரப்பு (CC0) உரிமத்தின் கீழ் கிடைக்கும் குரல் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட சொற்றொடர்கள் சேகரிக்கப்படுகின்றன. [1] மென்பொருள் மேம்பாட்டாளர்கள் குரல்-க்கு-உரை பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் அல்லது செலவுகள் எதுவும் இல்லாமல் தரவுத்தளத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை இந்த உரிமம் உறுதி செய்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mozilla Common Voice". commonvoice.mozilla.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுக்குரல்&oldid=4153124" இலிருந்து மீள்விக்கப்பட்டது