உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Untitled

[தொகு]

மகிழ்ச்சியான செய்தி. மறக்காமல், வரும் வார முதற்பக்கக் கட்டுரையாக இட வேண்டும்--ரவி 10:21, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

venky என்ற ஒலிப்பு வர வெங்க்கி என்று கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. தமிழில் ங்க் என்று வராது. தற்போது அதிகம் பார்க்கப்படும் கட்டுரையாக இருக்கும் என்பதால் வெங்கி என்றே மாற்றி எழுத வேண்டுகிறேன்.--ரவி 18:00, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

ரவியின் கருத்துடன் உடன்படுகிறேன். வெங்கி என்பதே பரவலாக எழுதப்படும் முறையும் கூட அல்லவா.--சிவக்குமார் \பேச்சு 18:22, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
இப்படித்தான் சிறுகச் சிறுக தமிழ் ஒலிப்பொழுக்கத்தைச் சிதைக்கிறார்கள். வெங்கி என்று எழுதி Vengi

என்று படித்தால் எனக்கு ஒரு சிக்கலும் இல்லை. ஆனால் எப்படி -ங்க்- என்பது சேர்ந்து வராது என்று நீங்கள் கூறுகிறீர்களோ அதே போல -ங்கி- என்பது ஒருபோதும் தமிழில் -nky- என்று ஒலிக்காது. ஒலிப்பை முதன்மைப் படுத்தினால் வெங்க்கி என்று எழுதுவதே "சரி". ஓபன், விகி என்றும் இடங்களில் ப, கி என்னும் எழுத்துகளைத் தமிழ் மரபுக்கு மாறாக வலித்தும், பாபு, காந்தி, பாரதி என்னும் பெயர்களில் வரும் முதல் வல்லின எழுத்தைத் தமிழ் மரபுக்கு மாறாக மெலிந்து ஒலித்தலும் என்று பலவாறு தமிழைச் சிதைக்கிறார்கள். கல்கி என்பதை kalgi என்றுதான் ஒலித்தல் வேண்டும். (பல்கி, நல்கு, நல்கினான், சொல்கிறேன், மல்கு ஆகிய சொற்களைப் பாருங்கள்) என்னும் கல்க்கி என்று எழுதினால் ஒலிப்பு சரியாக இருக்கும், ஆனால் தமிழ்ச்சொற்களில் -ல்க்-என்று இரண்டு மெய்யெழுத்துகள் சேர்ந்து வருவதில்லை. வரக்கூடாது என்று விதி இருப்பதாகத் தெரியவில்லை (அறிந்தவர்கள் தெரிவிக்கவும்), எனினும் அது தமிழ் மரபு அல்ல. Kalki என்னும் ஒலிப்பு வேண்டும் எனில் கல்க்கி என்றுதான் எழுதுதல் வேண்டும். எனவே வெங்க்கி என்று எழுதுவதே நல்லது. வெங்கட்ராமன் என்று ஒரு பயனர் மாற்றி எழுதியுள்ளார். அதில்வரும் -ட்ரா- என்பதும் தமிழில் வழக்கம் இல்லைதானே, ஆனால் ஒலிப்புக்காக அப்படி எழுதுகிறோம் அல்லவா, அதுபோல எனக்கருத வேண்டும். தமிழில் -ங்க்- வராது. ஆனால் இது தமிழல்ல, ஆனால் தமிழெழுத்துகளில் ஒலிப்பைக் காட்டுகிறோம், அவ்வளவுதான். புரிந்து கொள்ள வேண்டுகிறேன். நாம் வெங்கி என்று எழுதுவதால் வரும் கேடுகள் கூடுதல் (Venky என்று ககரத்தை வலித்து ஒலித்து தமிழ் ஒலிப்பொழுக்கத்தைக் கெடுப்பதால்) (ஆனால் வெங்கி என்பதை Vengi என்று ஒலிப்பதாயின் ஒரு தவறும் இல்லை).--செல்வா 19:34, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

வெங்க்கி = vengky அல்லவா? சரியோ தவறோ ங்க் போடும் பழக்கம் ரேங்க், பாங்க், பிங்க் என்று பல இடங்களில் உள்ளது. வெங்க்கி என்று காண்பது முதல் முறை--ரவி 19:45, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

எடுத்துக்காட்டுகளுக்கு நன்றி.--செல்வா 21:31, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

இளமை கல்வி

[தொகு]

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்ததை மறுத்துள்ளார் இங்குஆங்கில விக்கியில் திருத்தியுள்ளார்கள்.--மணியன் 06:06, 14 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

அதனை நீக்கியுள்ளேன்.--Kanags \பேச்சு 07:19, 14 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]