பேச்சு:மஞ்சள் முள்ளங்கி
கேரட்டா கரட்டா என்று எப்படியும் அடுத்த உரையாடல் தொடங்கும் முன் :) இப்போதைக்கு கரட் என்றே இருக்கட்டும். கேரட் பக்கத்தில் இருந்து வழி மாற்றுவோம். இந்த முடிவில்லாத இலங்கை X தமிழக வழக்குப் பிரச்சினைக்கு விரைவில் ஒரு தெளிவான கொள்கை வழிகாட்டல் கொண்டு வருவது நல்லது. potatoவை உருளைக்கிழங்கு என்று மொழிபெயர்த்து பிரச்சினையை முடித்து வைத்த மாதிரி carrotஐயும் மொழிபெயர்க்கும் வழிகளை ஆராயலாம் :)--ரவி 21:16, 30 நவம்பர் 2007 (UTC)
- கரட் தமிழகத்துக்கு அறிமுகமானது எப்போது என்று அறிவது உதவியாயிருக்கும். ஏதாவது சொற்கள் பயன்பட்டு வழக்கொழிந்து போயிருக்கலாம். கோபி 21:20, 30 நவம்பர் 2007 (UTC)
- மஞ்சள் முள்ளங்கி கரட் ஒன்றா ??? --Natkeeran 19:24, 7 மார்ச் 2009 (UTC)
- இப்பெயரை நான் இடவில்லை. இதுவே முதன் முறையாகக் கேள்விப்படுகின்றேன். முள்ளங்கியும் காரட்டும் ஒத்த இனமா என்றும் அறியேன். தமிழ்நாட்டில் காரட் என்றுதான் கூறக் கேட்டிருக்கின்றேன். காரட் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் எப்பொழுது அறிமுகமாகியது என்று அறியேன்.--செல்வா 19:42, 7 மார்ச் 2009 (UTC)
- மஞ்சள் முள்ளங்கி கரட் ஒன்றா ??? --Natkeeran 19:24, 7 மார்ச் 2009 (UTC)
ஆம் மஞ்சள் முள்ளங்கி ஆங்கிலச் சொல்லான Carrotன் நேரடி தமிழாக்கம் தான் . தமிழ் சித்த நூல்களில் மஞ்சள் முள்ளங்கி என்றே குறிப்பிட்டுள்ளது. நமது "செம்"மொழியில் ஆங்கிலச் சொற்களின் புழக்கம் அதிகமாக உள்ளது, இந்தி, கன்னடம் போன்ற செம்மொழியல்லாத மொழிகளில் இந்த அடிப்படைச் சொற்களுக்கான ஆங்கில மோகம் குறைவு. தமிழில் காய்கறியின் பெயர்களுக்கு சரியான தமிழ் சொற்களின் பயன்பாடே இல்லை. மஞ்சள் முள்ளங்கிக்கு உதாரணமாக காண்க www.sakthifoundation.org/glossary.pdf; http://books.google.co.in/books?id=KHua3-_qTcYC&pg=PA109&lpg=PA109&dq=manjal+mullangi&source=bl&ots=XZizorJMCT&sig=HK_mJ-_PU_1AOxl6V6fqsOMNsOE&hl=en&ei=Ftu9S8nlD5G2rAfh06TFCQ&sa=X&oi=book_result&ct=result&resnum=7&ved=0CBgQ6AEwBg#v=onepage&q=manjal%20mullangi&f=false;
நான் தூயத் தமிழ் சொற்களை இந்த இணையதளத்தில் திரட்டி வருகிறேன் http://www.tamildict.tk
இந்த ஒலிபெயர்ப்பு சொல் (Carrot) கட்டுரை தூய சொல்லான மஞ்சள் முள்ளங்கி கட்டுரையுடன் சேர்க்கப்பட வேண்டும்.
ராஜ் (தொழில்நுட்பம்) 8-4-2010
- University of madras , tamil lexicon இல் உள்ள மஞ்சள் முள்ளங்கியையும் காண்க. -- இராஜ்குமார் 13:55, 8 ஏப்ரல் 2010 (UTC)
காய்கறிகளின் தமிழ் சொற்கள் :பல்வேறு இடங்களிருந்தி திரட்டி உள்ளேன்.
-ராஜ் (தொழில்நுட்பம்) 8-4-2010
A - வரிசை
AMARANTH - முளைக்கீரை
ARTICHOKE - கூனைப்பூ
ASPARAGUS - தண்ணீர்விட்டான் கிழங்கு
B - வரிசை
BEANS - அவரை
BEET ROOT - செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு
BITTER GOURD - பாகல், பாகற்காய்
BLACK-EYED PEAS - தட்டைப்பயறு
BOTTLE GOURD - சுரைக்காய்
BROCCOLI - பச்சைப் பூக்கோசு
BRUSSELS SPROUTS - களைக்கோசு
C - வரிசை
CABBAGE - முட்டைக்கோசு, முட்டைக்கோவா
CARROT - மஞ்சள் முள்ளங்கி
CAULIFLOWER - பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா
CELERY - சிவரிக்கீரை
CILANTRO - கொத்தமல்லி
CLUSTER BEANS - கொத்தவரை
COLLARD GREENS - சீமை பரட்டைக்கீரை
COLOCASIA - சேப்பங்கிழங்கு
CORIANDER - கொத்தமல்லி
D - வரிசை
DRUM STICK - முருங்கைக்காய்
E - வரிசை
ELEPHANT YAM - கருணைக்கிழங்கு
F - வரிசை
FRENCH BEANS - நாரில்லா அவரை
G - வரிசை
H - வரிசை
I - வரிசை
J - வரிசை
K - வரிசை
KALE - பரட்டைக்கீரை
KING YAM - ராசவள்ளிக்கிழங்கு
L - வரிசை
LADY'S FINGER - வெண்டைக்காய்
LEEK - இராகூச்சிட்டம்
LETTUCE - இலைக்கோசு
LOTUS ROOT - தாமரைக்கிழங்கு
M - வரிசை
N - வரிசை
O - வரிசை
OLIVE - சைதூண், இடலை
P - வரிசை
PARSLEY - வேர்க்கோசு
PLANTAIN - வாழைக்காய்
POTATO - உருளைக்கிழங்கு
Q - வரிசை
R - வரிசை
RED CARROT - செம்மஞ்சள் முள்ளங்கி
RIDGE GOURD - பீர்க்கங்காய்
S - வரிசை
SNAKE GOURD - புடல், புடலங்காய்
SPRING ONION - வெங்காயத்தடல்
SQUASH GOURD - சீமைப்பூசனி(க்காய்)
SWEET POTATO - வத்தாளக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு
T - வரிசை
TAPIOCA - மரவள்ளி(க்கிழங்கு)
U - வரிசை
V - வரிசை
W - வரிசை
X - வரிசை
Y - வரிசை
YAM - சேனைக்கிழங்கு
Z - வரிசை
ZUCCHINI - சீமைச் சுரைக்காய்