பெர்னார்டு டி விட்டு
பெர்னார்டு டி விட்டு Bernard de Wit | |
---|---|
தேசியம் | நெதர்லாந்து |
துறை | கோட்பாட்டு இயற்பியல் |
பணியிடங்கள் | உட்ரெக்ட்டு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | உட்ரெக்ட்டு பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | பலவீனமான மற்றும் மின்காந்த இடைவினைகளின் சமச்சீர் அம்சங்களுக்கான புலம்-கோட்பாட்டு அணுகுமுறை (1973) |
ஆய்வு நெறியாளர் | மார்ட்டினசு வெல்ட்மேன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | சான் டி போயர் (இயற்பியலாளர்), எரிக் வெர்லிந்தே |
அறியப்படுவது | மீஈர்ப்புத்திறன் |
விருதுகள் | அம்போல்ட்டு பரிசு (1998) ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் |
இணையதளம் [1] |
பெர்னார்டு குய்ரினசு பீட்ரசு யோசப் டி விட்டு (Bernard Quirinus Petrus Joseph de Wit) நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கோட்பாட்டு இயற்பியலாளராவார். 1945 ஆம் ஆண்டு பெர்கன் ஆப் சூம் என்ற நகரத்தில் இவர் பிறந்தார். மீஈர்ப்புத்திறன் மற்றும் துகள் இயற்பியல் பிரிவுகளில் பெர்னார்டு நிபுணத்துவம் பெற்றவராவார்.
நெதர்லாந்தின் உட்ரெக்ட்டு பல்கலைக்கழகத்தில் பெர்னார்டு கோட்பாட்டு இயற்பியலைக் கற்றார். இதே பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு வெற்றியாளரான மார்ட்டினசு வெல்ட்மேன் மேற்பார்வையில் 1973 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டமேற்படிப்புக்குப் பின்னர் பெர்னார்டு சுடோனி புரூக்கு பல்கலைக்கழகம், உட்ரெக்ட்டு பல்கலைக்கழகம், இலெய்தன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சில காலம் பணிபுரிந்த பிறகு 1978 ஆம் ஆண்டில் தேசிய அணு மற்றும் உயர் ஆற்றல் இயற்பியலுக்கான நிறுவனத்தில் ஓர் ஊழியராகச் சேர்ந்தார். அங்கு 1981 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கோட்பாடுக் குழுவின் தலைவரானார். 1984 ஆம் ஆண்டு பெர்னார்டு உட்ரெக்ட்டு பல்கலைக்கழகத்தில் தத்துவார்த்த இயற்பியல் பேராசிரியரானார், அப்போது முதல் தனது வாழ்நாள் முழுவதும் இங்கேயே தொடர்ந்து பணியாற்றினார். இக்காலத்தில் பல முறை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் கோட்பாட்டுப் பிரிவுக்கு ஒரு வருகை தரும் விஞ்ஞானியாக ஆய்வுகளில் ஈடுபட்டார். [1] அதிகாரப்புர்வமாக பெர்னார்டு 2010 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்றாலும் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bernard de Wit's papers authored during sabbatical periods at CERN". INSPIRE HEP. CERN. பார்க்கப்பட்ட நாள் 2019-10-17.