பூஜா சோப்ரா
பூஜா சோப்ரா | |
---|---|
2016 ஆம் ஆண்டுத் திரைப்படத் திருவிழாவின் போது சோப்ரா | |
பிறப்பு | 3 மே 1986 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
இனம் | இந்தியன் |
உயரம் | 1.82மீ [1] |
அழகுப் போட்டி வாகையாளர் | |
தலைமுடி வண்ணம் | கருப்பு |
முக்கிய போட்டி(கள்) | பெமினா மிஸ் இந்தியா உலக அழகி 2009 |
வலைத்தளம் | |
[1] |
பூஜா சோப்ரா (Pooja Chopra) (பிறப்பு மே 3. 1986) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மிஸ் பெமினா பட்டம் (அழகுப் போட்டி) பெற்றவர். 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியின் காலிறுதிப் போட்டிவரை சென்றார். மேலும் காரண அழகியல் (பியூட்டி வித் எ பர்போஸ்) எனும் விருதினை ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டின் உலக அழகிப் போட்டியில் பெற்றார்.[2][3] இவர் ஒரே ஆண்டில் எட்டிற்கும் அதிகமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுளார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]பூஜா சோப்ரா மே 3. 1986 இல் கொல்கத்தாவில் பிறந்தார். இவர் இரண்டாவது பெண்குழந்தையாக இருந்ததனால் இவரது தந்தை இவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். தனது தாய் நீரா சோப்ராதான் தனது முன்மாதிரி எனக் கூறியுள்ளார். இவரின் தந்தை இவரை ஏற்றுக்கொள்ள மறுத்த உடன் பிறந்து இருபது நாட்களே ஆன பூஜா சோப்ராவையும் , ஏழு வயதான சுர்பாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். பின் இவரது தந்தை, இரு மகன்கள் உள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.[4] பூஜா சோப்ரா பிறந்த மூன்று நாட்கள் வரை எந்த உறவினரும் மருத்துவமனைக்கு வந்து பார்க்கவில்லை என்றும் இவரின் படுக்கைக்கு எதிரில் இருந்த ஒழுங்கணித் தலைவரின் மனைவி தான் பூஜாவிற்கான ஆடைகளைக் கொடுத்ததாகவும் இவரின் தாய் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.[4] இவரது குடும்பம் மும்பை சென்றது. அங்கு தனது பாட்டி வீட்டில் வளர்ந்தார். பின் இவர் புனே, மகாராட்டிரத்தில் தங்கினார்.[5]
தொழில் வாழ்க்கை
[தொகு]2009- 2012
[தொகு]பூஜா சோப்ரா 2009 ஆம் ஆண்டின் பெமினா மிஸ் இந்தியா பட்டம் (அழகுப் போட்டி) பெற்றார். இந்தப் போட்டியானது பெப்ரவரி 17, 2009 இல் கொல்கத்தாவில் நடைபெற்றது. மேலும் இவர் மிஸ் பெர்ஃபெக்ட் 10, மிஸ் கேட்வாக், மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் (புன்னகை அழகி) , தல்வாகர்ஸ் சிறந்த உடல்வாகு பட்டம் போன்ற பல போட்டிகளில் வென்றுள்ளார். இந்த வெற்றிகளின் மூலம் 2009 ஆம் ஆண்டின் பெமினா இந்திய அழகி போட்டிக்கான போட்டியில் இவர் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.[6]
டிசம்பர் 12, 2009 உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் விமானப் படிக்கட்டில் ஏறும் போது கணுக்காலில் முறிவு ஏற்பட்டது. மருத்துவர்கள் மூன்று வாரம் முழுவதுமாக ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால் சோப்ரா அந்த போட்டியில் கலந்துகொண்டார். உலக அழகித் தேர்வுக்குழு நிறுவனத்தின் அதிகாரியான ஜூலியா மார்லீ , சோப்ராவை நடனப் பிரிவில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்.[7] மொத்தம் இருந்த நூற்றுப் பன்னிரண்டு போட்டியாளர்களில் பதினாறு நபர்கள் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றனர். அதில் சோப்ராவும் ஒருவர்.
இவரின் முதல் தமிழ்த் திரைப்படம் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த பொன்னர் சங்கர் (திரைப்படம்) ஆகும்.[8] இதில் இளவரசி முத்தாயி வேடத்தில் தியாகராஜனுடன் இணைந்து நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்திற்கான கதையினை எழுதியவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆவார். இந்தத் திரைப்படத்தை இயகியவர் தியாகராஜன்.[9] இதில் பிரசாந்த் விஜயகுமார் , பொன்வண்ணன் , பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். இதற்கு முன்பாக ஃபேஷன் மற்றும் ஹீரோயின் (நடிகை) எனும் பாலிவுட் திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.[10]
சான்றுகள்
[தொகு]- ↑ http://dnewscafe.com/pooja-chopra-height-weight-figure-age-biography-wikifilmfigure/
- ↑ "2009 – India". Beautywithapurpose.com. 24 February 2012. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.
- ↑ "Welcome". Miss World. Archived from the original on 14 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 "My husband threw us out: Neera Chopra - Times of India", The Times of India, பார்க்கப்பட்ட நாள் 2018-04-12
- ↑ "Pooja Chopra". Archived from the original on 2014-07-27. பார்க்கப்பட்ட நாள் 2018-04-12.
- ↑ "Exclusive biography of #PoojaChopra and on her life.", FilmiBeat (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-12
- ↑ Business Standard (19 December 2009). "Global highlights of the week". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.
{{cite web}}
:|author=
has generic name (help) - ↑ "Archived copy". Archived from the original on 19 சனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச்சு 2011.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Ponnar Shankar sold to Martin Productions". Kollytalk.com. 15 August 2010. Archived from the original on 6 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Former Miss India Pooja Chopra became an actress for her mother". Archived from the original on 7 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 April 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பூஜா சோப்ரா
- மிஸ் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் பரணிடப்பட்டது 2013-05-15 at the வந்தவழி இயந்திரம்
- மிஸ் இந்தியா புரொஃபைல் பரணிடப்பட்டது 2013-05-15 at the வந்தவழி இயந்திரம்
- மிஸ் பெமினா 2009 பரணிடப்பட்டது 2012-03-15 at the வந்தவழி இயந்திரம்