உள்ளடக்கத்துக்குச் செல்

புனே நகர்புற தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனே நகரபுற வட்டம்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் புனே நகர்புற வருவாய் வட்டம்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் புனே நகர்புற வருவாய் வட்டம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே மாவட்டம்
தலைமையிடம்புனே
மக்கள்தொகை
 (2011)
 • தாலுக்கா31,24,458
 • நகர்ப்புறம்
31,24,458
புனே மாவட்டத்தின் 14 வருவாய் வட்டங்கள்

புனே நகர்புற தாலுக்கா (Pune City taluka) (மராத்தி: पुणे शहर तालुका), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் 14 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] தலைமையிடம் புனே நகரம் ஆகும்.

புனே மாநகராட்சியின் அதிகார எல்லையே, புனே தாலுக்காவின் அதிகார வரம்பாகும். மேலும் புனே மாநகராட்சியின் பரப்பளவு புனே நகரபுற தாலுக்காவிற்குள்ளே அடங்கும்.

புனே நகர்புற தாலுகாவைச் சுற்றிலும் ஹவேலி தாலுகாவின் பகுதிகள் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புனே நகர்புற வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 31,24,458 ஆகும். அதில் ஆண்கள் 1,603,675 மற்றும் 1,520,783 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 948 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3,37,062 உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.56% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 2,481,627 (79.43%), பௌத்தர்கள் 1,23,179 (3.94%) இசுலாமியர் 3,44,571 (11.03%), சமணர்கள் 76,441 (2.45%), கிறித்தவர்கள் 67,808 (2.17%) மற்றும் பிறர் 0.98 ஆகவுள்ளனர். இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]


வார்ப்புரு:புனே மாவட்டம்