உள்ளடக்கத்துக்குச் செல்

புதுவாழ்வு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுவாழ்வு என்னும் காப்பியம் இன்பவாணன் என்ற புனைபெயர் கொண்ட ஞா.தாவீது செபஞானம் என்பவரால் உருவாக்கப்பட்ட நூல் ஆகும். இந்நூல் 1977ஆம் ஆண்டு பாளையங்கோட்டை, கதிரவன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.

நூலின் இயல்பு

[தொகு]

கிறித்தவ சமயப் பின்னணி இருந்தாலும், சமயத்திற்கு அப்பாற்பட்டு வாழ்வியல் சார்ந்த இலக்கியமாகப் புதுவாழ்வு மலர்ந்துள்ளது. முகிலன், செல்வி, இன்பம் இம்மூவரிடையே நிகழும் வாழ்வியல் சிக்கலை மையமாகக் கொண்டு இக்காப்பியம் பாடப்பட்டுள்ளது.

பல சந்தங்களில் பாடப்பட்டுள்ள இக்காப்பியம் சிலப்பதிகாரத்தின் கருப்பொருளை நவீன காலத்துக்கு ஏற்றாற்போல எடுத்துரைப்பதாக உள்ளது.

மனிதன் தவறு செய்வது இயல்பு. ஆயினும் தவற்றினை உணர்ந்து தக்க நேரத்தில் திருந்திவிடின் உலகத் துன்பமெல்லாம் ஓய்ந்திடும் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் நூலை அமைத்திருக்கிறார் ஆசிரியர்.

ஆதாரம்

[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).