புட்பவனம் சுகந்தவன ஈசுவரசுவாமி கோயில்
Appearance
புட்பவனம் சுகந்தவன ஈசுவரசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் வேதாரண்யத்திற்கு வடக்கில் 10 கிமீ தொலைவிலும், கள்ளிமேடுக்குத் தென்கிழக்கில் 4 கிமீ தொலைவிலும், நாலுவேதபதிக்குத் தெற்கில் 6 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
[தொகு]மணமிக்க புட்பவனத்தில் உள்ளதால் இங்குள்ள மூலவர் சுகந்தவன ஈசுவரசுவாமி ஆவார். இறைவி தேன்மொழியாள் என்றும் மதுரபாஷினி என்றும் அழைக்கப்படுகிறார்.[1]
சிறப்பு
[தொகு]இராமர் சீதையைத் தேடிச் சென்றபோது வேதாரண்யம் செல்லும் வழியில் இங்குள்ள சுகந்தவனநாதரை வணங்கிவிட்டுச் சென்றதைத் தல புராணம் மூலமாக அறியமுடிகிறது.[1]