பீமிலி கடற்கரை
பீமிலி கடற்கரை Bheemili Beach | |
---|---|
பீமிலியில் உள்ள கோசுதானி நதி | |
அமைவிடம் | விசாகப்பட்டினம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 17°31′57″N 83°16′20″E / 17.5324°N 83.2721°E |
இயக்குபவர் | VUDA |
பீமிலி கடற்கரை (Bheemili Beach) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் காணப்படும் ஒரு கடற்கரையாகும். கோசுதானி நதியில் இருந்து தோன்றும் இக்கடற்கரை விசாகப்பட்டினத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இக்கடற்கரையானது பிரித்தானியா மற்றும் டச்சுக்காரர்களின் ஆட்சிப்பகுதியைப் பிரதிபலிக்கிறது.
வரலாறு
[தொகு]பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் டச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே வியாபாரத்திற்காகத் தங்கள் துறைமுகங்களை இங்கு வைத்திருந்தன.[1]
சுற்றுலா வளர்ச்சி
[தொகு]உலக அளவில் சுற்றுலாத்துறையை விரிவாக்க விசாகப்பட்டினம் நகர்புற வளர்ச்சித் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக விசாகப்பட்டினம் – பீமிலி கடற்கரை சாலையில் ஒரு கடற்கரைப் பூங்காவை அமைத்தது. கடற்கரை நீளத்திற்கும் சுற்றுலா வசதிகளும் பல மேம்பாட்டுத் திட்டங்களையும் செயற்படுத்தி வருகிறது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bheemili beach overview". visitvizag. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
- ↑ "Beach Park on Visakha-Bheemili Beach Road". Visakhapatnam Urban Development Authority. Archived from the original on 17 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Vizag-Bheemili beach corridor project". The Hindu (Hyderabad). 2 April 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/rs-4588-crore-sanctioned-for-vizagbheemili-beach-corridor-project/article4572335.ece. பார்த்த நாள்: 30 June 2014.