உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிப் ஹியூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப் ஹியூஸ்
Phillip Hughes
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிலிப் ஜொயெல் ஹியூஸ்
பிறப்பு(1988-11-30)30 நவம்பர் 1988
மாக்சுவில், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
இறப்பு27 நவம்பர் 2014(2014-11-27) (அகவை 25)
சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
பட்டப்பெயர்ஹியூசி, லிட்டில் டான், ஹியுக் டாக்
உயரம்170 செ.மீ (5 அடி 8 அங்குலம்)[1]
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை-புறத்திருப்பம்
பங்குமுன்வரிசை துடுப்பாட்டக்காரர், பதில் குச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 408)26 பெப்ரவரி 2009 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு18 சூலை 2013 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 198)11 சனவரி 2013 எ. இலங்கை
கடைசி ஒநாப12 அக்டோபர் 2014 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்64
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–2012நியூ சவுத்து வேல்சு புளூசு
2009மிடில்செக்சு
2010ஹாம்ப்சயர்
2011–2012சிட்னி தண்டர்
2012வூஸ்டர்சயர்
2013–2014தெற்கு ஆத்திரேலியா
2012–2014அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்
2013–2014மும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநா முத பஅ
ஆட்டங்கள் 26 25 114 91
ஓட்டங்கள் 1,535 826 9,023 3,639
மட்டையாட்ட சராசரி 32.65 35.91 46.51 47.25
100கள்/50கள் 3/7 2/4 26/46 8/23
அதியுயர் ஓட்டம் 160 138* 243* 202*
வீசிய பந்துகள் 0 0 24 0
வீழ்த்தல்கள் 0 0 0 0
பந்துவீச்சு சராசரி 0 0 0 0
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 0 0 0 0
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15 5 72 30
மூலம்: CricketArchive, 25 நவம்பர் 2014

பிலிப் ஹியூஸ் (Phillip Joel Hughes), (30 நவம்பர் 1988 - 27 நவம்பர் 2014) ஆத்திரேலியத் தேர்வு மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். நியூ சவுத் வேல்சு அணிக்காக ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக ஈராண்டுகள் விளையாடிய பின்னர் இவர் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை 20வது அகவையில் ஆத்திரேலிய அணியில் விளையாடினார்.[2]

இடது கை துடுப்பாட்டக்காரரான ஹியூஸ், ஆத்திரேலியாவுக்காக 26 தேர்வுப் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013 சனவரி 11 இவர் மெல்பேர்னில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடி 112 ஓட்டங்களைப் பெற்று, ஆத்திரேலிய ஒருநாள் போட்டி வரலாற்றில் தான் விளையாடிய முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் பெற்றார்.[3]

25 நவம்பர் 2014 அன்று, சிட்னி துடுப்பாட்டத் திடலில் நடந்த போட்டியின் போது, சோன் அபொட் வீசிய பந்தால் கழுத்தில் தாக்கப்பட்டு, பிலிப்பிற்கு முதுகெலும்பு தமனி சிதைவு ஏற்பட்டு, அது குருதிக்கசிவுக்கு வழிவகுத்தது. அவர் சுயநினைவு திரும்பாமல், 2014 நவம்பர் 27 அன்று தனது 25-ஆவது அகவையில் இறந்தார்.[4][5][6]

இளமைக் காலம்

ஹியூசு ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் மாக்சுவில் என்ற இடத்தில் கிரெக், வர்ஜீனியா ஆகியோருக்கு பிறந்தார். தந்தையார் கிரெக் ஒரு வாழைத்தோட்ட விவசாயி, தாயார் இத்தாலிய வம்சாவளி ஆவார்.[7] சிறு வயதிலேயே மாக்சுவில் ஆர்எஸ்எல் இளைஞர் துடுப்பாட்ட அணியில் சேர்ந்து விளையாடினார்.[7] தனது 17வது அகவையில் சிட்னிக்கு இடம்பெயர்ந்து ஹோம்புஷ் ஆண்கள் உயர்தப் பள்ளியில் உயர் கல்வியைக் கற்ற வேளையில், மேற்கு புறநகர் மாவட்ட துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார்.[8][9] 19-வயதிற்குட்பட்டோருக்கான 2008 ஐசிசி உலகக்கிண்ணப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்காக விளையாடினார்.

மறைவு

2014 நவம்பர் 25 இல், சிட்னி துடுப்பாட்டத் திடலில் நடைபெற்ற செஃபீல்டு சீல்டு போட்டி ஒன்றில், ஹியூஸ் தலைக்கவசம் அணிந்து 63 ஓட்டம் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருந்தார். சோன் அபொட் வீசிய அதிவேக எகிறி பந்து பிலிப்பின் இடது காதுக்குக் கீழே பாதுகாப்பற்ற கழுத்துப் பகுதியில் தாக்கியதில்[10] படுகாயமடைந்த நிலையில் சிட்னி செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[11] அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தூண்டப்பட்ட உணர்விழந்த நிலையில் வைக்கப்பட்டார்.[12] பிலிப்பின் காயம் ஒரு அரிதான ஆனால் விவரிக்கப்பட்ட விளையாட்டு தொடர்பான மழுங்கிய மூளைக் குருதிநாள நேர்ச்சி[13] என்று அழைக்கப்படும் வலையுருவடிக் குருதிப்பெருக்குக்கு வழிவகுத்தது.[14]

போட்டி உடனடியாகக் கைவிடப்பட்டது. ஏனைய இரண்டு செஃபீல்டு சீல்ட் போட்டிகள் ஆத்திரேலியாவில் பிரிஸ்பேன், மெல்பேர்ண் நகரங்களில் விளையாடப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த நாள் முடிவில் அவையும் கைவிடப்பட்டதாக கிரிக்கெட் ஆத்திரேலியா அறிவித்தது.[15]

வியாழன் அன்று காலை, 27 நவம்பர் 2014 அன்று, பிலிப் தனது 25வது அகவையில், தன்னுடைய பிறந்தநாளை 3 நாளில் கொண்டாடவிருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட காயங்களால் இறந்தார்.[16][17][18][19][20] ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் பிலிப்பின் குடும்பத்தின் சார்பாக ஒரு அறிக்கையைப் படித்தார்.[21]

மே 2015 இல், கிரிக்கெட் ஆத்திரேலியா, பிலிப் இயூசின் மரணம் குறித்து ஒரு சுயாதீன மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது.[22]

பிலிப் ஹியூசின் மறைவு உலகெங்கும் உள்ள துடுப்பாட்ட வீரர்கள், ரசிகர்களை உலுக்கியது. ஆஸ்திரேலிய பிரதமர், டோனி அபோட் இரங்கல் செய்தியை வெளியிட்டார். உலகம் முழுவதும் இருந்து மக்கள் பிலிப் ஹியூசிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக ஊடகத்தில் தங்கள் கிரிக்கெட் மட்டை ஒளிப்படங்களை வெளியிட்டனர்[23].

மறைவுக்குப் பின் நடந்த நிகழ்வுகள்

ஹியூக்ஸ் - நார்த்தாம்டன் -ஜூலை 2009
  • பாக்கிஸ்தான் மற்றும் நியூசிலாந்து எதிரான போட்டியின் 2வது நாள் ஆட்டம் 27ஆம் நவம்பர் அன்று ரத்து செய்யப்பட்டது. போட்டி 1 நாள் நீடிக்கப்பட்டது. அது மீண்டும் தொடங்கியது போது, கையால் எழுதப்பட்ட" பி.ஹெச் " தொப்பியை அனைத்து நியூசிலாந்து வீரர்கள் அணிந்தனர்.
  • மைக்கேல் கிளார்க் விருப்பத்தை ஏற்று, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஹியூக்ஸ் அவரை நினைவுகூரும் வகையில் ஹியூக்ஸ் 'ஒரு நாள் சட்டை எண் 64'க்கு ஓய்வு பெற வழங்க ஒப்புதல் வழங்கியது.
  • ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் முதலில் டிசம்பர் 4 ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா அரங்கில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது ஒத்தி வைக்கப்பட்டு அடிலெய்ட் அரங்கில் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் "13 வது மனிதர் " பிலிப் ஹியூஸ் சேர்க்கப்பட்டார்.
  • பிலிப் ஹியூஸ் 63 (காயம் காரணமாக ஓய்வு) - என்பதற்கு பதிலாக பிலிப் ஹியூஸ் 63 (நாட் அவுட்), என அவரது கடைசி போட்டியின் அட்டவனை திருத்தப்பட்டது.

பன்னாட்டு சதங்கள்

தேர்வு சதங்கள்
பிலிப் இயூசின் தேர்வு சதங்கள்
இல. ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு
[1] 115 2  தென்னாப்பிரிக்கா டர்பன், தென்னாப்பிரிக்கா கிங்சுமீட் 2009
[2] 160 2  தென்னாப்பிரிக்கா டர்பன், தென்னாப்பிரிக்கா கிங்சுமீட் 2009
[3] 126 13  இலங்கை கொழும்பு, இலங்கை சிங்கள அரங்கு 2011
ஒருநாள் பன்னாட்டு சதங்கள்
பிலிப் இயூசின் ஒருநாள் பன்னாட்டு சதங்கள்
இல. ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு
[1] 112 1  இலங்கை மெல்பேர்ண், ஆஸ்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 2013
[2] 138* 5  இலங்கை ஹோபார்ட், ஆஸ்திரேலியா பிளன்ட்ஸ்டோன் 2013

மேற்கோள்கள்

  1. "Phillip Hughes". cricket.com.au. Cricket Australia. Archived from the original on 2013-06-02. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2014.
  2. "Boofa goes from bushie to Blue". Fox Sports News. 22 நவம்பர் 2007. http://www.foxsports.com.au/story/0,8659,22800278-23212,00.html. பார்த்த நாள்: 4 டிசம்பர் 2007. 
  3. "Remembering Phillip Hughes: His greatest batting performances". The Daily Telegraph (Australia). 27 November 2014. https://www.foxsports.com.au/cricket/remembering-phillip-hughes-his-greatest-batting-performances/news-story/661a6cca2f95388f8b2c2d9526157437. 
  4. "Phillip Hughes: Doctors reveal condition 'incredibly rare' with only one other case resulting from cricket ball ever reported". ABC News. 27 November 2014. http://www.abc.net.au/news/2014-11-27/phillip-hughes-doctors-say-injury-extremely-rare/5923282. 
  5. "South Australian batsman Phil Hughes in critical condition after being hit by bouncer in Shield game at the SCG". Australian Broadcasting Corporation. 25 November 2014. http://www.abc.net.au/news/2014-11-25/test-aspirant-phil-hughes-knocked-out-in-shield-match/5916844. 
  6. "Phillip Hughes dead: Australian cricketer dies after bouncer at SCG". The Sydney Morning Herald. 27 November 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  7. 7.0 7.1 Victoria warned to beware the Macksville Express, டெய்லி டெலிகிராப்
  8. Katich predicts big career for Hughes, FoxSports.com.au
  9. Western Suburbs District Cricket Club – Phillip Hughes பரணிடப்பட்டது 2014-10-24 at the வந்தவழி இயந்திரம், Cricketnsw.com.au
  10. Matthew Benns; Taylor Auerbach; Andrew Carswell (28 November 2014). "Phillip Hughes dies: How his last day on the pitch unfolded". Herald Sun (Melbourne, VIC). https://www.heraldsun.com.au/news/phillip-hughes-dies-how-his-last-day-on-the-pitch-unfolded/news-story/8b9f31b466ca68e07e61d40153a3bca2. 
  11. Phillip Hughes: Doctors reveal condition 'incredibly rare' with only one other case resulting from cricket ball ever reported
  12. "Phillip Hughes dies from head injury sustained in Sheffield Shield match". ABC News (Australia). 27 November 2014. http://www.abc.net.au/news/2014-11-27/phil-hughes-dead/5919204. 
  13. Cuellar, T.A.; Lottenberg, L.; Moore, F.A. (2014). "Blunt cerebrovascular injury in rugby and other contact sports: case report and review of the literature". World Journal of Emergency Surgery 9 (36): 64. doi:10.1186/1749-7922-9-36. பப்மெட்:24872841. 
  14. "Phillip Hughes: Doctors reveal condition 'incredibly rare' with only one other case resulting from cricket ball ever reported". ABC News (Australia). 27 November 2014. http://www.abc.net.au/news/2014-11-27/phillip-hughes-doctors-say-injury-extremely-rare/5923282. 
  15. "Phillip Hughes injury: Cricket Australia decides to abandon Sheffield Shield matches". Fox Sports. AAP. 26 November 2014. https://www.foxsports.com.au/cricket/domestic-cricket/phillip-hughes-injury-cricket-australia-decides-to-abandon-sheffield-shield-matches/news-story/679ae9113c2d2e50098440f25855e642. 
  16. http://www.smh.com.au/sport/cricket/phillip-hughes-dead-australian-cricketer-dies-after-bouncer-at-scg-20141127-11vcpt.html
  17. உலகை உலுக்கிய பிலிப் ஹியூஸின் மரணம்
  18. Phil Hughes dead at 25 பரணிடப்பட்டது 17 திசம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம், news.com.au, 27 November 2014. Retrieved 27 November 2014
  19. "Phil Hughes: Australian batsman dies, aged 25". BBC Sport. 27 November 2014. பார்க்கப்பட்ட நாள் 27 November 2014.
  20. "Phillip Hughes obituary: a very modern batsman who was heading for greatness". The Guardian. 27 November 2014. பார்க்கப்பட்ட நாள் 27 November 2014.
  21. "Clarke goes above and beyond", இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 27 November 2014; retrieved 27 November 2014.
  22. "Phillip Hughes's death to be subject of independent review, Cricket Australia announces". ABC News. 14 May 2015. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.
  23. Phillip Hughes: Fans and players post cricket bat photos on Twitter

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்_ஹியூஸ்&oldid=4051691" இலிருந்து மீள்விக்கப்பட்டது