உள்ளடக்கத்துக்குச் செல்

பால் மேக்னசு கிராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால் மேக்னசு கிராசு (Paul Magnus Gross, Sr ) ஓர் அமெரிக்கா வேதியியலாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்நாட்டின் வட கரோலினா மாநிலத்திலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இவர் பணிபுரிந்தார்.

கல்வி

[தொகு]

கிராசு 1916 ஆம் ஆண்டு நியூயார்க்கின் சிட்டி கல்லூரியில் அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார். மேலும் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களை முறையே 1917 மற்றும் 1919 ஆம் ஆண்டுகளில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

வாழ்க்கை

[தொகு]

1919 ஆம் ஆண்டு , டியூக் பல்கலைக்கழகத்தில் வேதியியல் உதவி பேராசிரியராக (1919-1920) கிராசு தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கிராசு விரைவாகவே முழு பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார் மற்றும் 1921 முதல் 1948 ஆம் ஆண்டு வரை வேதியியல் துறையின் தலைவராக பணியாற்றினார்.

1947 ஆம் ஆண்டு பட்டதாரி பள்ளியின் தலைவராகவும் (1947-1952), அப்பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் (1952-1958), கல்வி பிரிவில் துணைத் தலைவர் (1949-1960) பதவிகளிலும் இருந்தார். [1][2]

நிர்வாக கருத்துகளில் கிராசின் தலையீடு 1960 ஆம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவர் ஏ. ஓலிசு ஈடன், கிராசு இருவருக்கிடையிலான மோதல்களுக்கு வழிவகுத்தது. இது கிராசு-ஈடன் விவகாரம் [3] என்றும் அறியப்பட்டது. டியூக் பல்கலைக்கழகம் ஒரு பிராந்தியப் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டுமா அல்லது தேசிய பல்கலைக்கழகமாக மாற வேண்டுமா, ஆராய்ச்சி அல்லது கற்பித்தல் மீதான முக்கியத்துவம் நிறுவனத்தில் எந்த அளவிற்கு அறியப்பட வேண்டும் என்பது தொட்டர்பான விவாதமாகவே இக்கருத்து வேறுபாடு பெரும்பாலும் இருந்தது. ஒரு ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக தேசிய தகுதியை நோக்கிய விரைவான வளர்ச்சிக்கு கிராசு மொத்தமாக அழுத்தம் கொடுத்தார். இதன் விளைவாக டியூக் பல்கலைக்கழகம் பின்னர் முன்னேற்றம் கண்டது. பல்கலைக்கழகத் தலைவர் பதவியில் இருந்து ஈடன் விலகினார். மோதலின் விளைவாக கிராசும் அவரது நிர்வாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார். [1] கிராசு ஓக் ரிட்சு அணுக்கரு ஆய்வு நிறுவனத்தை கிராசு நிறுவினார். பின்னர் இது ஓக் ரிட்சு இணைப்புப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1949 ஆம் ஆன்டுவரை இந்நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார். குடியரசுத் தலைவர் ஆரி எசு. டிரூமன் 1950 ஆம் ஆண்டு தேசிய அறிவியல் அறக்கட்டளை வாரியத்திற்கு கிராசை நியமித்தார், 12 ஆண்டுகள் இங்கு கிராசு பதவி வகித்தார். 1962 ஆம் ஆண்டு அமெரிக்கன் அறிவியல் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக கிராசு பணியாற்றினார். [1]

இறப்பு

[தொகு]

கிராசு 1986 ஆம் ஆண்டு மே மாதம் 4 அன்று வட கரோலினாவின் டர்காமில் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]