பான் இயூ தெங்
Appearance
பான் இயூ தெங் Fan Yew Teng | |
---|---|
பிறப்பு | 12 மே 1942 கம்பார், பேராக், மலேசியா |
இறப்பு | திசம்பர் 7, 2010 பாங்காக், தாய்லாந்து | (அகவை 68)
பணி | அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | நோயிலின் ஹேசர் Noeleen Heyzer |
பிள்ளைகள் | 2 பெண்கள் |
பான் இயூ தெங் (Fan Yew Teng, மே 12, 1942 – டிசம்பர் 7, 2010) மலேசியாவைச் சேர்ந்த ஒரு மனித உரிமை போராட்டவாதி. சமூக நீதிக்கும், இன ஒற்றுமைக்கும் போராடியவர். அவர் ஒரு சீனராக இருந்தாலும் சீன மொழியுடன் தமிழ் மொழியின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர்.[1]
சீன, தமிழ் மொழிப் பள்ளிகளை மலேசிய அரசாங்கம் பாரபட்சம் இல்லாமல் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்.[2]
மலேசியாவில் இனவாத அரசியலை வெறுத்தவர். மலேசிய அரசாங்கத்தின் கொள்கைகளைக் குறை கூறியதற்காக சிறைவாசம் அனுபவித்தவர். அதனால் தான் பெற வேண்டிய அனைத்துச் சலுகைகளையும் இழந்த ஒரு தன்னலமில்லாத அரசியல்வாதி. மலேசிய மக்களின் நினைவில் வாழும் ஒரு மாமனிதர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kile, J. (2014-02-05). "Fan Yew Teng". Moral Heroes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
- ↑ Fan, Yew Teng (1989). "Author biography". The UMNO Drama: Power Struggles in Malaysia (PDF). Kuala Lumpur: Egret Publications. பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.