உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கோ தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 1°43′N 110°28′E / 1.717°N 110.467°E / 1.717; 110.467
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கோ தேசியப் பூங்கா
Bako National Park
Taman Negara Bako
Map showing the location of பாக்கோ தேசியப் பூங்கா Bako National Park Taman Negara Bako
Map showing the location of பாக்கோ தேசியப் பூங்கா Bako National Park Taman Negara Bako
அமைவிடம்கூச்சிங் பிரிவு
 சரவாக்
 மலேசியா
அருகாமை நகரம்கூச்சிங்
ஆள்கூறுகள்1°43′N 110°28′E / 1.717°N 110.467°E / 1.717; 110.467
பரப்பளவு27 km2 (10 sq mi)
நிறுவப்பட்டது1957
நிருவாக அமைப்புசரவாக் வனவியல் கழகம்

பாக்கோ தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Bako; ஆங்கிலம்: Bako National Park) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு, கூச்சிங் மாவட்டம், கூச்சிங் மாநகரில் இருந்து கிழக்கே 40 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும்.[1]

1957-இல் நிறுவப்பட்ட இந்தப் பூங்கா, சரவாக்கில் உள்ள பழமையான தேசிய பூங்காவாகும். இது 27.27 சதுர கிலோமீட்டர் (10.53 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[2]

பொது

[தொகு]

சரவாக்கில் உள்ள சிறிய தேசிய பூங்காக்களில் பாக்கோ தேசியப் பூங்காவும் ஒன்றாகும். இந்தப் பூங்கா 1957-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

மில்லியன் கணக்கான ஆண்டுகள் மணல் கற்களின் அரிப்புகளினால்; செங்குத்தான பாறைகள் மற்றும் வெள்ளை மணல் கடற்கரையை உருவாக்கியுள்ளன. செங்குத்தான பாறைகளின் அடிவாரத்தில் ஏற்பட்ட கடல் அலை அரிப்புகளினால், பல பாறைத் தலைப்பகுதிகள் அற்புதமான கடல் வளைவுகளாகவும், வண்ண வடிவங்களாகவும் செதுக்க்கப்பட்டு உள்ளன.[3]

அவற்றில் மிகவும் பிரபலமானது ஒரு நாகப்பாம்பின் தலையைப் போல வடிவம் கொண்ட ஒரு செங்குத்தான பாறை ஆகும். இந்தப் பாறை 2024-இல் சரிந்து விட்டது.[4]

தாவரங்கள்

[தொகு]

போர்னியோவில் காணப்படும் அனைத்து வகையான தாவர உயிரினங்களையும் இந்தப் பூங்கா கொண்டுள்ளது. ஏழு வகையான சுற்றுச்சூழல் அமைப்புகளில் இருந்து 25 வெவ்வேறு வகையான தாவரங்கள் இங்கு உள்ளன.[5]

அவற்றுள் கடற்கரைத் தாவரங்கள், குன்றுத் தாவரங்கள்; சதுப்புநிலக் காட்டுத் தாவரங்கள், புல்வெளித் தாவரங்கள்; கரி சதுப்பு நிலத் தாவரங்கள்; பல்வேறு வகையான மாமிசத் தாவரங்கள்; குட வடிவத் தாவரங்கள்; பலவகையான மரங்கள் மற்றும் பிற தாவர இனங்களும் அடங்கும்.

விலங்கினங்கள்

[தொகு]

பாகோவில் அழிந்துவரும் தும்பிக்கை குரங்குகள் ஏறக்குறைய 150 குரங்குகள் உள்ளன.[6] அவை போர்னியோவைச் சேர்ந்த தும்பிக்கை குரங்குகள் ஆகும். மேலும் சரவாக்கில், தும்பிக்கை குரங்குகளைப் பார்ப்பதற்கான சிறந்த இடம் என்றும் அறியப்படுகிறது.[6]

மற்ற விலங்குகளில் நீண்ட வால் கொண்ட நண்டு உண்ணும் குரங்கு, வெள்ளி நிறக் குரங்குகள், வாழை அணில், போர்னியோ தாடிப் பன்றி, இராட்சச உடும்புகள் மற்றும் நீர்நாய் ஆகியவை அடங்கும்.[7]

பாக்கோ பறவைகள்

[தொகு]

இவை அனைத்தும் பாக்கோ காடுகளிலும்; தெலுக் அசாம் கடற்கரையில் உள்ள பாக்கோ பூங்கா தலைமையகத்திற்கு அருகிலும் உள்ளன. பாக்கோ பல காட்டுப் பல்லிகள் மற்றும் பாம்புகளின் இருப்பிடமாகவும் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்காதவை.

150-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாக்கோ பறவைகளைப் பார்ப்பதற்கு இந்த இடம் ஒரு கண்கவர் இடமாகும். பாக்கோவின் இரவு நேர உயிரினங்களில் பறக்கும் லெமூர், அழுங்கு எனப்படும் எறும்புண்ணிகள், எலி மான்கள், பல்வேறு வகையான பழங்களையும், பூச்சிகளையும் உண்ணும் வெளவால்கள், பெருவிழியுடைய சிறு தேவாங்குகள், பெரிய தேவாங்குகள் மற்றும் ஆசிய மரநாய்கள் ஆகியவை அடங்கும்.

பாக்கோ தேசியப் பூங்காவின் கடற்கரைக் கட்சி

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Batang Ai National Park - Sarawak Forestry Corporation". sarawakforestry.com. 15 November 2020. பார்க்கப்பட்ட நாள் 30 August 2024.
  2. "Higher visitor arrivals in 2017, over RM8 billion earned — Minister". The Borneo Post. 17 July 2018. http://www.theborneopost.com/2018/07/17/higher-visitor-arrivals-in-2017-over-rm8-billion-earned-minister/. 
  3. Ashton, P.S. 1971. The plants and vegetation of Bako National Park. Malayan Nature Journal 24: 151–162.
  4. "24 Days, 15 Cities, 39,000 Kilometres And It Comes Down To This". The Amazing Race Asia. AXN. No. 13, season 1.
  5. Lonely Planet description of Bako National Park, "[1]", retrieved 6 Jun 2011.
  6. Barrett, Rosanne (November 26, 2009). "Monkey Business in Borneo's Rainforest". Time. http://content.time.com/time/travel/article/0,31542,1943082,00.html. 
  7. Lonely Planet description of Bako National Park, "[2]", retrieved 6 Jun 2011.

காணொளி

[தொகு]
  • பாக்கோ தேசியப் பூங்காவின் பிபிசி காணொளி [3]

வெளி இணைப்புகள்

[தொகு]