உள்ளடக்கத்துக்குச் செல்

பாகான் ஆஜாம்

ஆள்கூறுகள்: 5°26′35.4″N 100°22′48.3″E / 5.443167°N 100.380083°E / 5.443167; 100.380083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகான் ஆஜாம்
சிறு நகரம்
பினாங்கு
பாகான் ஆஜாம்
பாகான் ஆஜாம்
Map
ஆள்கூறுகள்: 5°26′35.4″N 100°22′48.3″E / 5.443167°N 100.380083°E / 5.443167; 100.380083
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்வட செபராங் பிறை மாவட்டம்
அரசு
 • உள்ளூராட்சிசெபராங் பிறை நகராண்மைக் கழகம்
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை)
மலேசிய அஞ்சல் குறியீடு
13000
மலேசியத் தொலைபேசி எண்கள்+604
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்P
இணையதளம்http://www.mbsp.gov.my

பாகான் ஆஜாம் (ஆங்கிலம்: Bagan Ajam; (மலாய் Bagan Ajam) என்பது மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில்; பட்டர்வொர்த் நகரத்திற்கு அருகில்; மலேசியாவின் வடக்கு-தெற்கு விரவுச்சாலையை ஒட்டிய ஒரு சிறிய நகரம் ஆகும்.[1]

இந்த நகரம் காலைச் சந்தைக்கு மிகவும் பிரபலமானது. குறிப்பாக வார இறுதி நாட்களில் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் அந்தச் சந்தைக்கு வருவது வழக்கம்.

பந்தாய் பாகான் ஆஜாம் (Pantai Bagan Ajam) என்பது உள்ளூர் மக்களிடையே பிரபலமான ஒரு கடற்கரையாகும். அழகிய கடல்கரை கொண்ட சிறுநகரம். மலேசியாவின் வடக்கு - தெற்கு விரவுச்சாலையைப் பயன்படுத்துபவர்கள், இந்த நகரத்தில் சற்று நேரம் ஓய்வு எடுத்துச் செல்வது வழக்கமாகும்.

பொது

[தொகு]

பட்டர்வொர்த் வெளிவட்டச் சாலை

[தொகு]
பாகான் ஆஜாம் கடலடி சுரங்கப் பாதை

பாகான் ஆஜாம் நகரமும்; பட்டர்வொர்த் நகரமும்; பட்டர்வொர்த் வெளிவட்டச் சாலையின் கட்டுமானத்தினால் (Butterworth Outer Ring Road) பெரும் மாற்றங்களைச் சந்தித்து உள்ளன.

பட்டர்வொர்த் வெளிவட்டச் சாலை 2006-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. வெளிவட்டச் சாலையில் ஓய்வு மற்றும் சேவைப் பகுதிகள் அமைந்து உள்ளன. அத்துடன், இந்த வெளிவட்டச் சாலை மலாக்கா நீரிணைக்கு மிக அருகில், கடல்கரையை ஒட்டினால் போல அமைக்கப்பட்டு உள்ளது. அதனால்தான் பலரையும் இந்த இடம் மிகையாகக் கவர்கிறது.

இங்கு வரும் பயணிகள் கடல் காட்சியைப் பார்க்கலாம். கடலில் சரக்குக் கப்பல்கள் செல்வதையும் பார்க்கவும் முடியும். பாகான் ஆஜாம் 15 சுங்கச் சாவடிகளைக் கொண்டுள்ளது.[2]

பாகான் ஆஜாம் நகரம் பட்டர்வொர்த் நகரில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும்; ஈப்போ மாநகரில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பட்டர்வொர்த் இராணுவ விமான நிலையம் (RMAF Butterworth Air Base) இங்குதான் உள்ளது.

மலேசியாவின் முதல் கடலடி சுரங்கப்பாதை

[தொகு]

மலேசியாவின் முதல் கடலுக்கடிச் சுரங்கப் பாதையும் (Penang Undersea Tunnel) இங்கு அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. 7.2 கி.மீ. நீளம் கொண்ட இந்த பினாங்கு கடலடி சுரங்கப்பாதை, பினாங்கு தீவிற்குச் செல்வதற்கான நேரத்தைப் பெரிய அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016-ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கின.[3] பினாங்கு அரசாங்கத்தால் முதல் பாலத்தின் போக்குவரத்தைக் குறைக்கவும் மற்றும் தீவில் உள்ள மற்ற நெரிசலான இடங்களில் போக்குவரத்தைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டது.

ஆனால் சில பல காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் அண்மைய காலத்தில் கட்டுமானங்கள் தொடர்கின்றன. 2025-ஆம் ஆண்டு வாக்கில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bagan Ajam is a township in Seberang Perai Utara. Bagan Ajam is traditionally reached from Butterworth through Jalan Bagan Ajam. Today, the Butterworth Outer Ring Road (BORR) goes right across Bagan Ajam". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
  2. "Pantai Batu Ferringhi, Bagan Ajam jadi tumpuan pelancong". www.astroawani.com. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
  3. Safini, Shamsul Munir (2018-09-08). "Butterworth airbase to stay, says Affendi". NST Online.
  4. "The undersea tunnel and roads project was mooted by the Penang government to alleviate traffic on the first bridge and to cut down traffic at other congested corridors on the island". Archived from the original on 23 March 2022. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகான்_ஆஜாம்&oldid=3998970" இலிருந்து மீள்விக்கப்பட்டது