பவோலி
பவோலி அல்லது படிக்கிணறு (Baoli அல்லது Stepwell) என்பது படிக்கட்டு வடிவக் கிணறுகள் அல்லது குளங்கள் ஆகும். இவை பொதுவாக மேற்கு இந்தியாவிலும், பாக்கித்தான்வரையும் மற்றும் தெற்காசியாவின் மற்ற வறண்ட பகுதியிலும் பரந்து காணப்படுகின்றன.
வறட்சி காலத்தில் மக்களின் தண்ணீர் தேவைக்காக இந்தக் கிணறுகள் அன்றைய மன்னர்களால் உருவாக்கப்பட்டன. இக்கிணறுகளில் நீரை அடைவதற்குப் படிக்கட்டுகள் மூலமாகக் கீழிறங்கி செல்ல வேண்டும், இவை ஓரளவு ஆழமுள்ள கிணறுகளாகவும், அதைச் சுற்றிலும் படிக்கட்டுகளை அமைத்திருக்கிறார்கள். இப்படியான கிணறுகள் குடிநீருக்கென்று தனியாகவும், குளிப்பதற்கென்று தனியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் இப்படிப்பட்ட கிணறுகள் கோயில்கள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டன. சில கிணறுகளின் மேலே வழிப்போக்கர்கள் போன்றோர் தங்கிச் செல்வதற்காக அறைகளும் கட்டப்பட்டிருந்தன.
அமைப்பு
[தொகு]மழைக்காலத்தில் நீரைச் சேமித்துவைக்கும் வகையில் அமைக்கப்பும், கிணற்றில் நீரை அடைவதற்கான படிகள், படிகளில் விசாலமான அறைகள் என மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்தக் கிணறுகள் பெருமளவு செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. இவற்றில் படிக்கட்டுகள் சுமார் 50 அடி ஆழத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த படிக்கட்டுக் கிணறுகள் வட்டம், செவ்வகம், எண் கோணம் போன்ற பல்வேறு வடிவங்களில் கட்டப்பட்டிருக்கின்றன. இவை முகலாய கட்டிடப் பாணியுடன், ஆங்கிலேய கட்டிடப் பாணியும் கொண்டு கட்டப்பட்டவை. இக்கிணறுகள் ஜெனானா எனும் பெண்களுக்கான பகுதியும், மர்தானா எனும் ஆண்களுக்கான பகுதியும் கொண்டதாக உள்ளன.[1]
இப்படியான பெருமைகளைக் கொண்ட இவை, தற்காலத்தில் பேணப்படாமல் குப்பைகள் நிறைந்த இடமாக மாறியுள்ளன. இந்தக் கிணற்றைப் போன்று தில்லி[2] உள்ளிட்ட சில வட மாநிலப் பகுதிகளில் உள்ள கிணறுகள் நன்கு பேணப்படுகின்றன.
இதையும் காண்க
[தொகு]- இராணியின் படிக்கிணறு, குஜராத்
- இராணியின் படிக்கிணறு, இராஜஸ்தான்
- சாந்த் பௌரி, இராஜஸ்தான்
- அடாலஜ் படிக்கிணறு, குஜராத்
மேற்கோ்கள்
[தொகு]- ↑ ந. வினோத் குமார் (6 அக்டோபர் 2017). "கைவிடப்பட்ட வரலாற்றுக் கிணறு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2017.
- ↑ Agrasen ki Baoli gets new lease of life. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, January 2, 2002. Retrieved from http://articles.timesofindia.indiatimes.com/2002-01-03/delhi/27142365_1_baoli-asi-official-groundwater-level பரணிடப்பட்டது 2013-09-26 at the வந்தவழி இயந்திரம்.