உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னிருவர், சியா இசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்பலாவில் உள்ள இமாம் உசைன் மசூதி

பன்னிருவர்கள் (Twelver) (அரபு மொழி: اثنا عشرية‎, பாரசீக மொழி: شیعه دوازده امامی‎, ) சியா இசுலாமின் ஒரு பிரிவாகும். முகமது நபியின் மருமகனும் கலீபாவுமான அலீக்குப் பின்னர் வந்த 12 இமாம்களை பன்னிருவர்கள் என்பர்.[1]

பன்னிருவர் எனும் சொல் சியா இசுலாமிய சமயத்தின் 12 இமாம்களைக் குறிக்கும். திருக்குர்ஆன் மற்றும் முகமது நபி போன்ற இறைத்தூதர்கள் மற்றும் இறை வாக்காளர்களின் நற்செய்திகள் மற்றும் பன்னிரு இமாம்கள் விளக்கிய நபிமொழிகள் அடிப்படையில் இமாமிய சியா பிரிவு தத்துவங்கள் கொண்டுள்ளது.

முகமது நபிக்கு அடுத்து வந்த இப்பன்னிருவர்கள் இசுலாமிய சமூகத்தின் ஆன்மிகம் மற்றும் அரசியல் பணிகளுக்கு தலைமை தாங்கி நடத்தி செல்லும் அதிகாரம் பெற்றவர்கள் என அறியப்படுகிறது.

பன்னிருவர்களின் இறையியல் கொள்கைகளின் படி, இசுலாமிய சமூகத்தை அறவழியில் வழியில் நடத்திச் செல்வதுடன், சரியத் சட்டங்களை சமூகத்தில் நிலைநாட்டவும், அவற்றை தேவைப்படும் இடத்தில் விளக்கவும் செய்கின்றனர்.

குரானில் உள்ள வேத வாக்கியங்களை விளக்கும் ஆற்றல் படைத்தவர்கள். மேலும் முகமது நபிகள் அருளிய சுன்னாவின் படி இசுலாமிய சமூகத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர்கள்.[2][3][4]

ஈரான், அசர்பைசான், ஈராக், பஹ்ரைன், லெபனான் போன்ற இசுலாமிய நாடுகளில் பன்னிருவர்களைப் பின்பற்றும் சியா பிரிவு இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்தியா,[5][6][7][8][9] பாகிஸ்தன், சவுதி அரேபியா,[10] யேமன், வங்காளதேசம், குவைத், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், நைஜிரியா, எகிப்து, சாட் மற்றும் தான்சானியா போன்ற நாடுகளிலும் சிறுபான்மையினத்தவராக உள்ளனர்.

இசுலாமிய நாடுகளில் ஈரானிய அரசு மட்டும் பன்னிருவர் (சியா இசுலாம்) நெறியை அலுவல் சமயமாக கொண்டுள்ளது.[சான்று தேவை]

பன்னிருவர்கள்

[தொகு]

பன்னிரு இமாம்களின் பெயர்கள்:[11]

  • முதல் இமாம்: அமிருல் மூமினீன் அலீ
  • இரண்டாம் இமாம்: அல் ஹசன் இபின் அலீ இபின் அபி தலிப்
  • மூன்றாம் இமாம்: இமாம் ஹுசைன் பின் அலீ இபின் தலிப்
  • நான்காம் இமாம்: அலீ இபின் அல்-ஹுசைன்
  • ஐந்தாம் இமாம்: முகமது இபின் அலீ
  • ஆறாம் இமாம்: ஜாஃபர் இபின் முகமது
  • ஏழாம் இமாம்: மூசா பின் ஜாஃபர்
  • எட்டாம் இமாம்: அலீ இபின் மூசா
  • ஒன்பதாம் இமாம்: முகமது இபின் அலீ
  • பத்தாம் இமாம்: அலீ இபின் முகமது
  • பதினொன்றாம் இமாம்: அல் ஹசன் இபின் அலீ
  • பனிரெண்டாம் இமாம்: அல் ஜுஜ்ஜாத் முகமது இபின் அல்-ஹசன்

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. இஸ்லாமிய சமயப் பிரிவுகள்
  2. Tabataba'i 1977, ப. 10
  3. Momen 1985, ப. 174
  4. Weiss 2006, ப. 14
  5. "Shia women too can initiate divorce". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. November 6, 2006. பார்க்கப்பட்ட நாள் 2010-06-21.
  6. "Talaq rights proposed for Shia women". Daily News and Analysis, www. dnaindia.com. 5 November 2006. பார்க்கப்பட்ட நாள் 2010-06-21.
  7. "Obama's Overtures". The Tribune. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
  8. "Imperialism and Divide & Rule Policy". Boloji. Archived from the original on 2010-12-13. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
  9. "Ahmadinejad on way, NSA says India to be impacted if Iran 'wronged by others'". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
  10. http://merln.ndu.edu/archive/icg/shiitequestion.pdf பரணிடப்பட்டது 2008-12-17 at the வந்தவழி இயந்திரம் International Crisis Group. The Shiite Question in Saudi Arabia, Middle East Report No. 45, 19 Sep
  11. A Brief Account of the Twelve Successors of the Holy Prophet (S)

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]