பத்மினி ராவுட்
பத்மினி ராவுட் | |
---|---|
பத்மினி ராவுட், விலிசிங்ன் 2009 | |
நாடு | இந்தியா |
பிறப்பு | சனவரி 5, 1994 பரம்பஹார், ஒடிசா, இந்தியா |
பட்டம் | சர்வதேச மாஸ்டர் (2015) பெண்கள் கிராண்ட் மாஸ்டர் (2007) |
உச்சத் தரவுகோள் | 2454 (மார்ச் 2015) |
பத்மினி ராவுட் (Padmini Rout பிறப்பு: ஜனவரி 5, 1994) என்பவர் இந்தியாவின் சதுரங்க வீரர் ஆவார், சர்வதேச மாஸ்டர் (2015) பட்டத்தையும் பெண்கள் கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)(2007) பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார். 2008 ஆம் ஆண்டில் 14 வயதிற்குக் கீழ் விளையாடும் உலக பெண்கள் சதுரங்க வாகையாளர் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் (2014, 2015, 2016, 2017) இந்திய பெண்கள் சதுரங்க வாகையாளர் பட்டத்தினை வென்றார். 2007 ஆம் ஆண்டுக்கான பிஜு பட்நாயக் விளையாட்டு விருது மற்றும் 2009 இல் ஏகலைவா விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்[1]
தொழில் வாழ்க்கை
[தொகு]2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில், 13 வயது வயதிற்குக் கீழ் விளையாடும் பெண்கள் பிரிவில் இந்திய சாம்பியன்ஷிப் மற்றும் மற்றும் 12 வயதிற்குக் கீழ் விளையாடும் ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் பட்டங்களை பெற்றுள்ளார்.[2] 2008 ஆம் ஆண்டில் உலக இளைஞர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றார். அடுத்த ஆண்டில் அவர் ஆசிய ஜூனியர் (20 வயதிற்குள்) பெண்கள் சாம்பியன்ஷிப்பில் முதல் இடத்தைப் பிடித்தார்.[3] 2010 இல், இந்திய ஜூனியர் (19 வயதிற்குள்) பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றார்[2] மேலும் ஆசிய சாம்பியன்ஷிப்பையும் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.[4]
இளமை வாழ்க்கை
[தொகு]ஒடிசாவின் பாரம்பஹார் என்ற நகரில் பிறந்துள்ளார். அவரது தந்தையின் விருப்பம் காரணமாக பத்மினி 9 வயதில் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார் (2003). சந்திரசேகர்பூரின் டி.ஏ.வி பப்ளிக் பள்ளியில் பயின்று பின்னர், புவனேஸ்வரிலுள்ள பிஜேபி கல்லூரியில் வணிகப் பட்டத்தைப் பெற்றார். சதுரங்க விளையாட்டு ஒரு அறிவு சார்ந்த விளையாட்டு என்பதால் அது தனது கல்விக்கு உதவும் என நினைத்து விளையாடினார். போட்டிகளில் ஆரம்ப வெற்றிகள் அவரது தொழில் வாழ்க்கைக்கு வழிவகுத்தது. சதுரங்கத்தில் ஒவ்வொரு நாளும் 6-7 மணிநேரத்தை அவர் செலவழித்தார். [சான்று தேவை]
குறிப்புகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பத்மினி ராவுட் rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
- ராவுட் பத்மினி chess games at 365Chess.com