பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம்
KC02 | கொமுட்டர் Batu Kentonmen Komuter Station | ||||||||||||||||
பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம் (2022) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | ஈப்போ சாலை, 51200 கோலாலம்பூர் | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°11′53.1″N 101°40′52.2″E / 3.198083°N 101.681167°E | |||||||||||||||
உரிமம் | தொடருந்து சொத்துரிமை | |||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் ரேபிட் ரெயில் (MRT) | |||||||||||||||
தடங்கள் | சிரம்பான் மேற்கு கடற்கரை | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | KC02 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | KC02 சூலை 2010 | |||||||||||||||
முந்தைய பெயர்கள் | Kent | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Batu Cantonment Komuter Station; மலாய்: Stesen Batu Kentonmen Komuter) என்பது மலேசியா, கோலாலம்பூர், ஈப்போ சாலையின் 4.5-ஆவது மைலில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.[1]
ஈப்போ சாலை என்பது கோலாலம்பூரில் உள்ள ஒரு பெரிய சாலை; மற்றும் புறநகர் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள முதன்மை சாலையாகும்.
வரலாறு
[தொகு]முன்பு இந்த இடத்தில் ஓர் இராணுவத் தடுப்பு மையம்; மற்றும் ஓர் இராணுவ ஆயுதக் கிடங்கு மையம்; என இரு இராணுவ மையங்கள் இருந்தன. அதனால் இந்த இடத்திற்குப் பத்து கென்டன்மன் (மலாய்: Batu Kentomen) என்று பெயர் பெயரிடப்பட்டது.
1905-ஆம் ஆண்டில், இதே இடத்தில் முதன்முதலாக ஒரு தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. அதற்கு பத்து கென்டன்மன் தொடருந்து நிலையம் என்று பெயரிடப்பட்டது. பின்னர் 2010-ஆம் ஆண்டில் அந்த நிலையம், கொமுட்டர் தொடருந்து நிலையமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர், அந்த நிலையத்திற்கு பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையம் என புதிய பெயர் வைக்கப்பட்டது.
போக்குவரத்து சேவைகள்
[தொகு]இந்த நிலையம் இங்குள்ள பல குடியிருப்புப் பகுதிகளுக்கு போக்க்குவரத்து வசதிகளை வழங்கும் நிலையமாக கட்டப்பட்டது. அருகிலுள்ள இராணுவத் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்பு நடைபாதைகள் கட்டப்பட்டு உள்ளன.[2]
இராணுவ ஊழியர்கள், கொமுட்டர் நிலையத்தை வசதியாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த நடைபாதைகள் உதவுகின்றன.
நடைபாதை வழித்தடங்களை இணைப்பதற்கும்; மற்றும் பயணச் சீட்டு அலுவலகத்திற்குச் செல்லும் பாதைகளை இணைப்பதற்கும்; மின்தூக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையம் ஊனமுற்றோருக்கான நட்புறவு நிலையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் முக்கிய தளங்கள் உலோக கூரைகளால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
பெயர்
[தொகு]பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் காலத்திலும்; மற்றும் 1980-ஆம் ஆண்டுகள் வரையிலும்; பத்து கென்டன்மன் நிலையம் என்பது கென்ட் நிலையம் என்று அறியப்பட்டது.[3]
இணைப்புகள்
[தொகு]புத்ராஜெயாவழித்தடத்தின், கென்டன்மன் எம்ஆர்டி நிலையம் (Kentonmen MRT Station) நடந்து செல்லும் தூரத்தில் தான், பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையமும் உள்ளது. ஆனாலும், கென்டன்மன் எம்ஆர்டி நிலையமும்; பத்து கென்டன்மன் கொமுட்டர் நிலையமும் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைக்கப்படவில்லை.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "The Batu Kentonmen KTM Komuter Station is a KTM Komuter train station forms part of Seremban Line KTM Komuter train services. The Station opened and electrified on July 2010". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.
- ↑ "It is integrated with the adjacent military base, as sheltered walkways are built allowing military staff convenient use of the station. Slightly off platform, a line from the main line branches of into the camp". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 1 April 2024.
- ↑ "The KTM Klang Valley rail network circa 1985". பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.
மேலும் காண்க
[தொகு]- சிரம்பான் வழித்தடம்
- செந்தூல் கொமுட்டர் நிலையம்
- பத்துமலை கொமுட்டர் நிலையம்
- கிள்ளான் துறைமுக வழித்தடம்
- புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம்