நோர்வேயின் பழுப்பு கரடி
நோர்வேயின் பழுப்பு கரடி ( The Brown Bear of Norway ) என்பது பேட்ரிக் கென்னடியால் சேகரிக்கப்பட்ட அயர்லாந்து விசித்திரக் கதையாகும். இது அவரது லெஜண்டரி ஃபிக்சன்ஸ் ஆஃப் தி ஐரிஷ் செல்ட்ஸ் என்ற தொகுப்பில் (1866) வெளிவந்தது. [1] இது பின்னர் ஆண்ட்ரூ லாங்கால் அவரது த லிலாக் ஃபேரி புக் (1910) இல் சேர்க்கப்பட்டது, இருப்பினும் லாங் தனது மூலத்தை வெஸ்ட் ஹைலேண்ட் டேல்ஸ் (பச்சை பள்ளத்தாக்கில் பழுப்பு கரடி ) எனறு தவறாகப் பயன்படுத்தினார். [2]
சுருக்கம்
[தொகு]அயர்லாந்தில் ஒரு அரசன் தன் மகள்களிடம் யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் என்று கேட்டான். மூத்தவள் உல்ஸ்டரின் மன்னனையும், இரண்டாவது மகள் மன்ஸ்டரின் மன்னனையும், இளையவள் நார்வேயின் பழுப்பு கரடியையும் விரும்பினார்கள். அன்று இரவு, இளைய மகள் ஒரு பெரிய மண்டபத்தில் ஒரு அழகான இளவரசனைக் காண்கிறாள். அவன் அவள் முன் மண்டியிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறான். அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். மேலும் ஒரு சூனியக்காரி அவளது மகளை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னை கரடியாக மாற்றியதாக இளவரசன் விளக்கினான். தன்னை திருமணம் செய்து கொண்டு ஐந்து வருட சோதனைகளைத் தாங்கினால் தான் விடுதலை பெறுவதாக தெரிவிக்கிறான்.
அவர்களுக்கு அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஒரு வேட்டைநாய், ஒரு கழுகு, ஒரு மற்றும் ஒரு பெண் மூன்று குழந்தைகளையும் எடுத்துச் செல்கின்றனர். இளவரசி, கடைசி குழந்தையையும் இழந்த பிறகு, தனது குடும்பத்தைப் பார்க்க விரும்புவதாக தனது கணவனிடம் கூறினாள். இரவு படுத்திருக்கும் போது விரும்பும்போது தாய் வீட்டுக்கு செல்லலாம் என்றும், மறுநாள் காலையில் அவள் பழைய படுக்கையில் எழுந்திருப்பாள் என்றும் அவன் அவளிடம் கூறுகிறான். அவள் தன் குடும்பத்தாரிடம் தன் கதையைச் சொன்னாள். மேலும் குழந்தைகளை இழக்க விரும்பவில்லை என்றாலும், அது தன் கணவனின் தவறு அல்ல என்று அவள் உறுதியாக நம்பினாள். அந்த சமயத்தில் ஒரு பெண் வடிவத்தில் வந்த சூனியக்காரி அவன் இரவும் பகலும் ஆணாக இருக்க வேண்டும் என்றால் அவனது கரடி ரோமத்தை எரிக்க வேண்டுமென அறிவுரை கூறுகிறாள். பின்னர் அவள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அவன் கொடுத்த பானத்தை குடிப்பதை நிறுத்திவிட்டு, எழுந்து அவனது ரோமங்களை எரிக்கிறாள். இதனால் வருத்தமடைந்த கரடி மனிதன் இது சூனியக்காரியின் வேலை எனவும், இப்போது தான் அவளது மகளை மணக்கும் கட்டாயத்தில் இருப்பதாகக் கூறுகிறான் .
இளவரசி தன் கணவனை பின்தொடர்கிறாள். இரவானதும், இருவரும் ஒரு சிறிய வீட்டை அடைகின்றனர். அடுப்புக்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை தங்களது மகன் என்றும் கழுகு தூக்கிச் சென்ற மகன் என்றும் அவளிடம் கூறுகிறான். இவ்வாறு ஒவ்வொரு நாளும் தாங்கள் இழந்த குழந்தைகளை மீட்டு தங்கள் சொந்த கோட்டைக்கு புறப்படுகின்றனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ Kennedy, Patrick, ed. (1866), "The Brown Bear of Norway", Legendary Fictions of the Irish Celts, Macmillan and Company, pp. 57–67
- ↑ Lang, Andrew, ed. (1910), "The Brown Bear of Norway", The Lilac Fairy Book, Longmans, Green, and Company, pp. 118–131, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781615360857