துர்டுக்
துர்டுக் | |
---|---|
மலைக்கிராமம் | |
இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய துர்டுக் கிராமம் | |
ஆள்கூறுகள்: 34°50′49″N 76°49′37″E / 34.847°N 76.827°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | லே |
வட்டம் | நூப்ரா வட்டம் |
அரசு | |
• வகை | ஊராட்சி |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,371 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | பால்டி, லடாக்கி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்கள்தொகை குறியீட்டு எண் | 913 |
துர்டுக் (Turtuk) இந்தியாவின் வடக்கே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லே மாவட்டம், நூப்ரா வருவாய் வட்டத்தில், லடாக் - பல்திஸ்தான் எல்லையை ஒட்டி பாயும் சியாக் ஆற்றின் கரையில் உள்ள கிராம ஊராட்சி ஆகும்.[1][2][3]
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு வடக்கு நிலப்பகுதியில் உள்ள பல்திஸ்தான் பிரதேசத்தில் இருந்த துர்டுக் மலைக்கிராமத்தில்[4]மலைவாழ் பழங்குடி இசுலாமியர்கள் வாழ்கின்றனர். 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போரில் துர்டுக் கிராமம் இந்திய இராணுவம் கைப்பற்றியதால், தற்போது இக்கிராமம் இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ளது.[5] .[6][7] [8] துர்டுக் கிராம மக்கள் பால்டி மற்றும் லடாக்கி மொழிகள் பேசுகின்றனர்.[9] சுற்றுலாத் தலமான இக்கிராமம் கடல்மட்டத்திலிருந்து 2900 மீட்டர் உயரத்தில் இமயமலையில் உள்ளது.
சியாச்சின் கொடுமுடிக்கு செல்லும் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக துர்டுக் கிராமம் உள்ளது. [10][11] இங்கு அத்திப் பழம், வெள்ளை கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, துர்டுக் கிராமம் 3371 மக்கள்தொகை கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. Archived from the original (PDF) on 2016-09-09. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
- ↑ "The village divided by border".
- ↑ "Turtuk, the village on the India-Pak border, is where the clichés stop and fantasies begin". Archived from the original on 2015-09-08. பார்க்கப்பட்ட நாள் 2019-08-13.
- ↑ "the village that lost its country".
- ↑ "In Ladakh's Turtuk village, life goes on as it has since the 15th century".
- ↑ "Turtuk Diary".
- ↑ "Planning a trip to Ladakh? You just cannot miss these experiences". Archived from the original on 2015-08-23. பார்க்கப்பட்ட நாள் 2019-08-13.
- ↑ https://thewire.in/123835/turtuk-story-of-a-promise-land/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-08-13. பார்க்கப்பட்ட நாள் 2019-08-13.
- ↑ "Siachen Factor".
- ↑ http://thediplomat.com/2014/04/the-siachen-saga/