திவ்யா அகர்வால்
திவ்யா அகர்வால் | |
---|---|
2018இல் திவ்யா அகர்வால் | |
தேசியம் | இந்தியர் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2017–தற்போது வரை |
தொலைக்காட்சி |
|
திவ்யா அகர்வால் (Divya Agarwal) (பிறப்பு 4 திசம்பர் 1992) [1] ஓர் இந்திய தொலைக்காட்சி நடிகையும், மாதிரி நடிகையும், நடனக் கலைஞரும் ஆவார், இவர் எம்டிவி இந்தியாவின் பலஉண்மைநிலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அறியப்படுகிறார். இவர் எம்டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா 10-ன் இரண்டாவது வெற்றியாளரும், ஏஸ் ஆஃப் ஸ்பேஸ் ' 1-ன் வெற்றியாளரும் ஆவார். இவர் திகில் வலைத் தொடரான ராகினி எம்எம்எஸ்: ரிட்டர்ன்ஸ் 2 என்பதில் அறிமுகமானார். இவர் பல இசைத் தொகுப்புகளில் தோன்றியுள்ளார். ரோடிஸ்: ரியல் ஹீரோஸ் மற்றும் எம்டிவி ஏஸ் குவாரைன்டைன் உள்ளிட்ட மேலும் உண்மைநிலை நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார் அல்லது ஆதரித்தார். தற்போது பிக் பாஸ் ஓடிடியில் போட்டியாளராக உள்ளார்.
பின்னணியும் ஆரம்ப காலத் தொழில்
[தொகு]திவ்யா அகர்வால் பத்திரிகைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் டெரன்ஸ் லூயிஸ் நடன அகாதமியிலிருந்து நடனம் கற்றார்.[2] பின்னர், 'எலிவேட் நடன நிறுவனம் என்ற தனது சொந்த நடன நிறுவனத்தைத் திறந்தார். இலியானா டி குரூஸ், சன்னி லியோன், ஷில்பா ஷெட்டி போன்ற பல நடிகைகளுக்கு இவர் நடன இயக்குநராக இருந்துள்ளார்.[3] 2010 இல், இவரும் ஒரு பாக்கித்தானிய நடன இயக்குநரும் ஐபிஎல் 2010க்கு நடன அமைப்பில் பணியாற்றினார்கள்.
இவர் பல அழகுப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 2015ஆம் ஆண்டில், இவர் "மிஸ் நவி மும்பை" பட்டத்தை வென்றார்.[4] 2016 ஆம் ஆண்டில், இவர் இந்திய இளவரசி அழகிப் போட்டியின் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார் இவர் 'மிஸ் சுற்றுலா சர்வதேச'த்தையும் வென்றார்.[3]
தொழில்
[தொகு]இவர், 2017 இல் எம்டிவி இந்தியாவின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா 10 இல் பங்கேற்றபோது புகழ் பெற்றார். அதில் இவர் பிரியங்க் சர்மாவுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[5][6]
2018ஆம் ஆண்டில், எம்டிவி இந்தியாவின் டேட் டு ரிமம்பர் நிகழ்ச்சியில் இவர் வழிகாட்டியாக செயல்பட்டார்.[7] மார்ச் 2018 இல், அகர்வால் ஸ்ப்ளிட்ஸ்வில்லா 10 போட்டியாளர் பசீர் அலியுடன் ஆன் ரோட் வித் ரோடீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.[8] அக்டோபரில், எம்டிவி இந்தியாவின் ஏஸ் ஆஃப் ஸ்பேஸ் 1 இல் பங்கேற்றார். அதில் இவர் வெற்றியாளராக உருவெடுத்தார்.[9][10]
சொந்த வாழ்க்கை
[தொகு]2017 ஆம் ஆண்டில், எம்டிவி ஸ்பிலிட்ஸ்வில்லா 10 இல் நடிகரும் வடிவழகருமன பிரியங்க் சர்மாவை சந்தித்தார். அங்கு இவர்கள் இருவரும் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் இவர்கள் தொடர்பிலிருந்தனர். அகர்வால் பிக் பாஸ் 11 இல் சர்மாவுடன் சேர்ந்து சென்றார். 2018 இல், இவர் நடிகரும் முன்னாள் எம்டிவி ரோடீஸ் போட்டியாளருமான வருண் சூட்டை சந்தித்தார். இவர்கள் ரோடீஸ்: ரியல் ஹீரோஸ் மற்றும் எம்டிவி ஏஸ் ஆஃப் ஸ்பேஸில் ஒன்றாக வேலை செய்தனர். ஏஸ் ஆஃப் ஸ்பேஸைத் தொடர்ந்து, இவரும் வருண் சூட்டும் தாங்கள் தொடர்பிலிருப்பதை உறுதி செய்தனர்.[11]
அக்டோபர் 28, 2020 அன்று, திவ்யாவின் தந்தை கோவிட் -19 சிக்கல்களால் இறந்தார்.[12]
ஊடக கருத்து
[தொகு]அகர்வால் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் 20 பேர் அடங்கிய இந்திய தொலைக்காட்சிப் பட்டியலில் 2019 ஆம் ஆண்டின் ஆறாவது இடத்திலும்,[13] 2020 ஆம் ஆண்டில் பத்தொன்பதாம் இடத்திலும் பட்டியலிடப்பட்டார்.[14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Service, Tribune News. "The Year Ahead". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
- ↑ TEDx talks (15 May 2018). Bullying Public Figure – Divya Agarwal – TEDxMMUSadopurAmbala – via YouTube.
- ↑ 3.0 3.1 "Who is Divya Agarwal? Here's all about Bigg Boss 11 contestant Priyank Sharma's ex-girlfriend". 7 December 2017. https://www.indiatvnews.com/entertainment/tv-who-is-divya-agarwal-heres-all-about-bigg-boss-11-contestant-priyank-sharmas-ex-girlfriend-415723."Who is Divya Agarwal? Here's all about Bigg Boss 11 contestant Priyank Sharma's ex-girlfriend". India TV. 7 December 2017.
- ↑ "Divya Agarwal wins Miss Navi Mumbai 2015 beauty pageant". 10 June 2015 இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201031044931/https://www.nmtv.tv/divya-agarwal-wins-miss-navi-mumbai-2015-beauty-pageant-5/.
- ↑ "MTV Splitsvilla X: Priyank Sharma, Divya Agarwal Lose Love Battle To Baseer Ali, Naina Singh". 11 December 2017. https://www.news18.com/news/movies/mtv-splitsvilla-x-priyank-sharma-divya-agarwal-lose-love-battle-to-baseer-ali-naina-singh-1600139.html.
- ↑ "Splitsvilla 10 Contestants List : The Most Loved Game Show Ever". 18 August 2020. https://www.indiatimes.com/lifestyle/splitsvilla-10-contestants-520612.html.
- ↑ Kameshwari, A. (18 January 2018). "Divya Agarwal recalls her Date To Remember with ex-boyfriend Priyank Sharma". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/entertainment/television/divya-agarwal-recalls-her-date-to-remember-with-priyank-sharma-bigg-boss-11-5028179/.
- ↑ "Baseer Ali and Divya Agarwal share their experience of hosting Roadies". இந்தியா டுடே. 22 May 2018. https://www.indiatoday.in/television/video/splitsvilla-x-s-baseer-ali-and-divya-agarwal-share-their-experience-of-hosting-on-road-with-roadies-1238865-2018-05-22.
- ↑ "MTV Ace of Space: Divya Agarwal is the WINNER of Vikas Gupta's show!". ABP News. 1 January 2019 இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190407072715/https://www.abplive.in/television/mtv-ace-of-space-divya-agarwal-is-the-winner-of-vikas-guptas-show-887181.
- ↑ "Ace of Space grand finale LIVE updates: Divya Agarwal is the winner of the show". இந்தியா டுடே. 31 December 2018. https://www.indiatoday.in/television/top-stories/story/ace-of-space-grand-finale-live-updates-top-four-finalists-compete-to-be-the-winner-1420633-2018-12-31.
- ↑ Keshri, Shweta (31 December 2018). "Ace of Space winner Divya Agarwal confirms dating Varun Sood". இந்தியா டுடே. https://www.indiatoday.in/television/reality-tv/story/ace-of-space-winner-divya-agarwal-confirms-dating-varun-sood-1420759-2018-12-31.
- ↑ "Divya Agarwal's father dies due to COVID-19". DNA India. 28 October 2020. பார்க்கப்பட்ட நாள் 28 October 2020.
- ↑ "Hina Khan tops Times Most Desirable Women of 2019 list for second time, Jennifer Winget follows". தி எகனாமிக் டைம்ஸ். 5 September 2019. https://economictimes.indiatimes.com/magazines/panache/hina-khan-tops-times-most-desirable-women-of-2019-list-for-second-time-jennifer-winget-follows/articleshow/77925823.cms.
- ↑ "Meet The Times 20 Most Desirable Women on Television 2020 - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-05.