தாமசு புரூக் பெஞ்சமின்
தாமசு புரூக் பெஞ்சமின் | |
---|---|
பிறப்பு | வாலசி, இங்கிலாந்து | 15 ஏப்ரல் 1929
இறப்பு | 16 ஆகத்து 1995 ஆக்சுபோர்டு, இங்கிலாந்து | (அகவை 66)
தேசியம் | பிரித்தானியர் |
துறை | பாய்ம இயக்கவியல் பகுவியல் (கணிதம்) |
பணியிடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் எசெக்சு பல்கலைக்கழகம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | லிவர்பூல் பல்கலைக்கழகம் யேல் பல்கலைக்கழகம் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | சான் டுவையர் ஆலன் சாம்ப்னீஸ் |
அறியப்படுவது | பெஞ்சமின்-போனா-மாகோனி சமன்பாடு பெஞ்சமின்-ஓனோ சமன்பாடு பெஞ்சமின்-ஃபெயர் நிலையாமை |
தாமசு புரூக் பெஞ்சமின் (Thomas Brooke Benjamin) (15 ஏப்ரல் 1929 – 16 ஆகத்து 1995) என்பவர் ஒரு கணித இயற்பியலாளர் மற்றும் கணித வல்லுநரும் ஆவார்.மேலும் இவர் திரவ இயக்கவியல் மற்றும் கணிதப் பகுப்பாய்வுகளில் பெயர் பெற்றவர். குறிப்பாகத் தொகையற்ற வகையீட்டுச் சமன்பாடுகளின் (nonlinear differential equations) பயன்பாடுகளில் தனிச் சிறப்பு வாய்ந்தவர்.[1]
பிறப்பும் படிப்பும்
[தொகு]இவர் இங்கிலாந்தில் உள்ள வாலிஸி(wallasey) எனும் ஊரில் 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் தேதி பிறந்தார். இவருக்கு 1955 ஆம் ஆண்டு கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தால் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[2][3][4] மேலும் இவர் 1979 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள கணித நிறுவனத்தில் இயற்கை தத்துவ (Natural Philosophy) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[5]
பெஞ்சமின் தமது 66ஆவது அகவையில், 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 16ஆம் தேதி இயற்கை எய்தினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ JulianHunt (2003). "Thomas Brooke Benjamin. 15 April 1929 – 16 August 1995 Elected FRS 1966". Biographical Memoirs of Fellows of the Royal Society 49: 39–67. doi:10.1098/rsbm.2003.0003.
- ↑ கணித மரபியல் திட்டத்தில் தாமசு புரூக் பெஞ்சமின்
- ↑ O'Connor, John J.; Robertson, Edmund F., "தாமசு புரூக் பெஞ்சமின்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- ↑ BENJAMIN, Prof. (Thomas) Brooke. Who's Who. Vol. 2018 (online ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. (subscription required)
- ↑ "Benjamin, (Thomas) Brooke". Oxford Dictionary of National Biography (online). (2004). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/60105. (Subscription or UK public library membership required.)