கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தருக்கஉள்ளீடுகளை எடுத்து, செயற்படுத்தி, தர்க்க ரீதியிலான விடையை அல்லது வெளியீடுடைத் தருவதே தர்க்க படலை ஆகும். ஒரு தருக்க படலையின் வெளியீட்டை இன்னொரு தருக்க படலையின் உள்ளீடாக பயன்படுத்த முடியும். இவ்வாறு பல தர்க்க படலைகளை இணைத்து சிக்கலான தர்க்க செயற்பாடுகளை நிகழ்த்த முடியும். நிலைமாற்றியில் இருந்து கணினி வரை பல கருவிகள் தர்க்க செயற்பாடுகளையே அடிப்படையாக கொண்டவை.
உம், அல்லது, இல்லை ஆகியவை அடிப்படை தருக்க படலைகள் ஆகும்.
தருக்கப்படலைகள் பின்வரும் சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
உண்மை அட்டவணை என்பது கொடுக்கப்படும் உள்ளீடுகளை எவ்வாறு வெளியிடும் என அறிந்து கொள்ள உதவ கூடிய குறுக்கு அட்டவணை ஆகும். மேலும் ஒரு குறிபிட்ட வெளியீட்டினை வடிவமைக்க உதவும். இதனை செய்ய Karanaugh maps, Quine-McCluskey, heuristic போன்ற முறைகள் கையாளபடுகின்றன.