உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கம்
Founded2018
Countryஇந்தியா
Key peopleதிருப்பூர் சுப்பிரமணியன், ஆர். பன்னீர்செல்வம்

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கம் (ஆங்கிலம்:Tamilnadu Theatre and Multiplex Owners Association) என்பது தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட வெளியீட்டு அரங்க உரிமையாளர்களின் சங்கமாகும். திரைப்பட வெளியீட்டாளர்களின் உரிமை பாதுகாப்பிற்கும் மற்றும் மேம்பாட்டிற்கும் இச்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.[1] இது 2018 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது.[2] இதன் தலைவராக ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கின் உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியனும், பொதுச் செயலாளராக ரோகிணி திரையரங்கின் உரிமையாளராக ஆர். பன்னீர்செல்வமும், பொருளாளராக டி.என்.சி. மல்டிபிளக்ஸ் உரிமையாளர் டி. சி. இளங்கோவனும் புரவலராக அபிராமி இராமநாதனும் உள்ளனர்.

கவனிக்கப்பட்ட சில அறிவிப்புகள்

[தொகு]
  • திரையரங்கில் வெளிவந்து எட்டு வார இடைவெளியில் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடக் கோரிக்கை.[3]
  • பொன்மகள் வந்தாள் திரைப்படத்தைத் திரையரங்கில் வெளியிடாததல் சூரரைப் போற்று திரைப்படத்தைத் திரையரங்கில் வெளியிடமாட்டோம் என அறிவித்தனர்.[4]
  • சட்ட ஒழுங்கு சிக்கலைத் தவிர்க்க தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தைத் தமிழகத்தில் திரையிடல் நிறுத்தம்.[5]
  • திரையரங்கிற்குப் பராமரிப்புக் கட்டணத்தை அதிகரிக்கவும் ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட், அழகிப் போட்டி போன்றவற்றையும் திரையரங்கில் ஒளிபரப்பவும் அனுமதி கோரல்[6][7]
  • லியோ திரைப்பட முன்னோட்ட வெளியீட்டில் நிகழ்ந்த சம்பவம் காரணமாக இனி, திரையரங்கில் திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை வெளியிடப் போவதில்லை என அறிவிப்பு.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "tntmoa.com முதல்பக்கம்". tntmoa. Archived from the original on 11 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 19 October 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: bot: original URL status unknown (link)
  2. "மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு புதிய சங்கம் !". நக்கீரன். https://www.nakkheeran.in/cinema/cinema-news/new-council-started-muliplex. பார்த்த நாள்: 19 October 2023. 
  3. "முன்னணி நடிகர்களின் சினிமாக்களை 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடி-யில் வெளியிட வேண்டும்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/838767-cinemas-of-leading-actors-1.html. பார்த்த நாள்: 19 October 2023. 
  4. "Tamil Nadu theater owners considering ban on Suriya’s movies". இந்தியன் எக்ஸ்பிரஸ். https://indianexpress.com/article/entertainment/tamil/tamil-nadu-theatres-to-impose-ban-on-suriya-films-6378947/. பார்த்த நாள்: 19 October 2023. 
  5. "Tamil Nadu multiplex owners halt screenings of The Kerala Story; protests, no audience turnout led to decision". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-cinemas-drop-kerala-story-cite-fear-of-damage/articleshow/100058076.cms?from=mdr. பார்த்த நாள்: 19 October 2023. 
  6. "திரையங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும்: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை". தினகரன். https://www.dinakaran.com/fees-theaters-otherstates-allowed-collected-proprietorsassociation-request/. பார்த்த நாள்: 19 October 2023. 
  7. "கிரிக்கெட், கால்பந்து போட்டிகளை திரையிட அனுமதிக்கணும்.... திரையரங்கு உரிமையாளர்". தினமலர். https://cinema.dinamalar.com/tamil-news/114690/cinema/Kollywood/Cricket-and-football-matches-should-be-allowed-to-be-screened....-Theater-owners-association-request-to-Govt.htm. பார்த்த நாள்: 19 October 2023. 
  8. [இனி திரையரங்குகளில் டிரெய்லர்கள் வெளியீடு இல்லை - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு "இனி திரையரங்குகளில் டிரெய்லர்கள் வெளியீடு இல்லை - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு"]. தினத்தந்தி. இனி திரையரங்குகளில் டிரெய்லர்கள் வெளியீடு இல்லை - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு. பார்த்த நாள்: 19 October 2023.