உள்ளடக்கத்துக்குச் செல்

தடுக்கப்பட்ட நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரண்மனை அருங்காட்சியகம்
The Gate of Divine Might, the northern gate. The lower tablet reads "The Palace Museum" (故宫博物院)
தடுக்கப்பட்ட நகர் is located in சீனா
தடுக்கப்பட்ட நகர்
Location within சீனா
நிறுவப்பட்டது1912
அமைவிடம்4 Jingshan Front St, Dongcheng, Beijing, China
வகைஓவியக் காட்சியகம், Imperial Palace, Historic site
வருனர்களின் எண்ணிக்கை
17 million+(2023)[சான்று தேவை]
  • Ranked 1st nationally
மேற்பார்வையாளர்Shan Jixiang (单霁翔)
கட்டிடக்கலை நிபுணர்Kuai Xiang (蒯祥)
வலைத்தளம்http://www.dpm.org.cn

தடுக்கப்பட்ட நகர் (ஆங்கிலம்: Forbidden City; சீனம்: 紫禁城; பின்யின்: Zǐjinchéng) அல்லது பெய்சிங் அரச அரண்மனை (Beijing's Imperial Palace) அல்லது அரண்மனை அருங்காட்சியகம் எனப்படுவது சீன தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள, பழம்பெருமை வாய்ந்த அரண்மனை வளாகமும் சீனாவின் அரசு மாளிகை கட்டிடங்களில் ஒன்றுமாகும். சீன மாண்டரின் மொழியில் கு-காங்க் என அழைக்கப்படும் இது மிங் மற்றும் கிங் பேரரசுகளின் அதிகார மையமாக கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் வரை செயல்பட்டது. ஆட்சி மாற்றம், போர் ஆகியவற்றின் காரணமாக, சீனாவில் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட பண்டைக்கால அரண்மனைகளுள் பெய்சிங் அரண்மனையும் ஒன்றாகும். பெய்ஜிங் நகரின் நடுநாயகமாக விளங்கும் இவ்வரண்மனை சீனாவின் பண்பாட்டை விளக்கும் மரபுச் சின்னமாகும். கி.பி. 1925 முதல் சீன அரண்மனை அருங்காட்சியகமாக [1] விளங்கும் பெய்ஜிங் அரண்மனையின் கட்டிடப்பாணி கிழக்கு ஆசியா மற்றும் பிற கட்டடக்கலைப் பண்பாட்டு வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1987 இல் ஒரு உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[2] 74 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இதுவே உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகம் ஆகும்.

மிங் வம்ச மற்றும் சிங் வம்ச பேரரசர்களின் அரசு மாளிகையாக இருந்த பெய்சிங் அரண்மனை உலகின் பாதுகாக்கப்பட்ட பண்டைய மர கட்டமைப்புகளின் மிகப் பெரிய தொகுப்பாக யுனெஸ்கோ மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது.[3]

இது தற்பொழுது அருங்காட்சியமாக செயல்பட்டுவருகிறது. மொத்தம் 183 ஏக்கர் பரப்பளவில் 980 கட்டிடங்களை கொண்டு அமைந்துள்ள இவ்வளாகம் 1406–1420 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட அரண்மனை அருங்காட்சியகத்தில் மிங், க்யிங் வம்சங்களைச் சார்ந்த பல பழம்பெருமை வாய்ந்த மர வேலைப்பாடுகள் உள்ளன. உலகிலேயே மிக அதிக சிற்பங்களைக் கொண்டுள்ள இங்கு ஆண்டுதோறும் 1.7 கோடி மக்கள் வருகை தருகின்றனர். இதன் ஒருபகுதி தற்பொழுது தைபேயின் தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது.

பெயர்

[தொகு]
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
தடுக்கப்பட்ட நகர்
பேரரசர் அந்தப்புரம்
பெய்சிங் அரண்மனை வளாகம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவுi, ii, iii, iv, vi
உசாத்துணை439
UNESCO regionஆசியா-பசுபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11வது தொடர்)

பேரரசரின் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழையவோ வெளியே செல்லவோ அனுமதியில்லை என்பதால் இப்பெயர்பெற்றது. சீனத்தில் ஜிங் (தடுக்கப்பட்ட) செங் (நகர்).

வரலாறு

[தொகு]

மங்கோலிய யுவான் வம்சத்தின் ஆட்சியின் போது இம்பீரியல் நகரத்தில் இந்த அரண்மனை அமைக்கப்பட்டது. பின்பு மிங் வம்சம் ஆட்சிக்கு வந்தபோது பேரரசர் ஹோங்வு பெய்ஜிங்கில் இருந்து தலைநகரை நான்ஜிங்கிற்கு மாற்றினார். இவருக்குப் பின் இவரது மகன் ச்சூ டி பேரரசரான பிறகு மீண்டும் பெய்ஜிங்கைத் தலைநகரமாகக் கொண்டார்.[4] தடை செய்யப்பட்ட இதன் கட்டுமானப்பணி 1406-ல் மீண்டும் யாங் லீ என்ற மிங் பேரரசினால் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப்பணி 1420ம் ஆண்டில் ஆண்டில் முடிவுற்றது. 15 ஆண்டுகள் நீடித்த இதன் கட்டுமானப்பணியில், ஒரு மில்லியன் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தென்மேற்குச் சீனாவின் காடுகளில் காணப்படும் பின்யின் (சீன: 楠木; பின்யின்: nánmù)எனப்படும் விலைமதிப்பற்ற மரங்கள் பயன்படுத்தப்படது. பெய்ஜிங் அருகில் உள்ள கற்சுரங்கங்களில் இருந்து பளிங்கு கற்கள் கொண்டு வரப்பட்டன.[5] முக்கிய அறைகளின் தரைதளங்கள் "தங்க செங்கற்கள்" ("golden bricks":Chinese: 金砖; pinyin: jīnzhuān)கொண்டு அமைக்கப்பட்டன. சிறப்பாக சுசுஹோ பகுதியில் இருந்து செங்கற்கள் வரவழைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன.[6]

1420 இலிருந்து 1644 வரை மிங் வம்சத்தின் ஆசனமாக இருந்தது. 1644 ஏப்ரலில் லீ சிசேங் என்பவரின் தலைமையிலான கலகப்படை இதனை கைப்பற்றியது. அவர் தன்னை சுன் வம்ச பேரரசராக அறிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் தடுக்கப்பட்ட நகரின் பகுதிகள் தீக்கிரையாகின. ஆனால், மிங் வம்ச தளபதியான வூ சங்குய் அணி மற்றும் மான்சு பகுதி அணியின் கூட்டுப்படைகள் அவரை தோற்கடித்ததது. பின் அரண்மனையில் சீனம், மான்சு ஆகிய இரு மொழிகளும் அறிவிப்புப் பலகைகளில் பயன்படலாயின.

மிங் வம்சத்தில் காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது சிங் வம்சம் இறுதி வரையில் சீன ஏகாதிபத்திய அரசின் அரண்மனையாக இருந்து வந்தது. முதலில் பேரரசரும் அரச குடும்பத்தினரும் வாழும் இடமாக இருந்தது. பின்பு சிங் வமிச காலத்தில் அரசு விவகாரஙகளைக் கவனிக்கும் அரச மாளிகையாகவும் மாறியது. கிட்டத்தட்ட 500 ஆண்டுகளக, 24 சீனப் பேரரசர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இங்கு அடுத்தடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

1860 இல் இரண்டாம் அபினிப் போரில் ஆங்கிலோ-பிரஞ்சு படையினர் தடுக்கப்பட்ட நகரிரைக் கைப்பற்றினர். 1900 இல் குத்துச்சண்டை வீரர்கள் கலகத்தின்போது பேரரசி டோவகர் சிக்சி தடுக்கப்பட்ட நகரிரைவிட்டு வெளியேறினார். சீனாவின் அரசியல் மையமாக 24 பேரரசர்களின்-14 மிங் வம்சம், 10 க்யிங் வம்சம்-காலத்திற்கு விளங்கிய தடுக்கப்பட்ட நகர், 1912 ஆம் ஆண்டு சீனா குடியரசானப்பின் தன் சிறப்பை இழந்தது. பூயி, அதன் கடைசி பேரரசர் ஆவார்.

ஏராளமான புதையல்களையும், இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்நகரம் 1924ம் ஆண்டு வரை சீன பேரரசர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. சீனக் குடியரசின் கீழ் வந்தபிறகே இது மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. இன்று உலகின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக மரபுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.[7]

அமைப்பு

[தொகு]

சீனாவின் பண்டைகால அரசு மாளிகை கட்டிடங்கள் பொதுவாக நடு கோட்டின் இரு பக்கங்களும் ஒரே மாதிரி அமைவு என்ற முறையில் கட்டப்பட்டன. நடு பகுதியிலுள்ள கட்டிடங்கள் மிக கம்பீரமானதாகவும் ஒளியமைப்புடையதாகவும் இருக்கின்றன. இரு பக்கங்களிலுள்ள கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் சிறிதாகவும் எளிமையாகவும் கட்டப்பட்டன. 7,20,000 ஆயிரம் சதுர மீட்டர் ((7,800,000 sq ft)பரப்பில் கட்டப்பட்டுள்ள பெய்ஜிங் அரண்மையில் 980 கட்டடங்கள், 9 ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள் உள்ளன.[8] அரண்மனையைச் சுற்றிலும், பல மீட்டர் உயரமான சிவப்பு நிறச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவரின் நீளம் 3400 மீட்டராகும்.[9][10]

மன்னர் மற்றும் அவரது குடும்பங்களுக்கான அரண்மனைகள், அரசவைகள், நிருவாக அலுவலகங்கள், நீதிமன்றங்கள்,மருத்துவமனைகள், இராணுவக் கிடங்குகள், சேமிப்பு கிடங்குகள், கருவூலம் மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் எதிரிகள் நுழையாதவாறு இவற்றைச் சுற்றி பத்து மீட்டர் உயரத்துக்கு மதில் சுவர்களும், ஆறு மீட்டர் ஆழமுள்ள அகழியும் கட்டப்பட்டுள்ளன.

மதில்கள் மற்றும் நுழைவுவாயில்கள்

[தொகு]

தடுக்கப்பட்ட நகர் 7.9 மீட்டர் (26 அடி) உயர நகர மதிலும், 6 மீட்டர் (20 அடி) ஆழ 52 மீட்டர் (171 அடி) அகல அகழியும் கொண்டுள்ளது. மதிலுக்கு ஒன்றாக 4 நுழைவுவாயில்கள். தெற்கு நுழைவுவாயில் முக்கிய நுழைவுவாயில் ஆகும்.

மண்டபங்கள்

[தொகு]

மாளிகையின் மண்டபம், பேரரசர் அரசு விவகாரங்களை கையாளும் இடமாகும். சீன அரசு மாளிகைகள் அளவில் மிக பெரியவை, உச்சிப் பகுதி முழுவதும் பொன் நிற ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கவனமாக தீட்டப்பட்ட பல வண்ண ஓவியங்கள், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள், வெண் பளிங்குக்கற்களால் ஆன தரை, தடுப்பு சுவர், தூண்கள், புறப்பகுதிகளிலுள்ள சிறுசிறு கட்டிடங்கள் ஆகியவை கண்ணுக்கு ஒரு விருந்தாக விளங்குகின்றன.

முன் பகுதி

[தொகு]

அரண்மனை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[10] முற்பகுதி, பேரரசர் ஆணைகளை பிறப்பித்தல் முதலான அரசு விவகாரங்களை கையாளும் இடமும், மாபெரும் அரசு விழா நடைபெறும் இடமும் ஆகும்.[11] இப்பகுதியில், தைஹொ மண்டபம், சுங்ஹொ மண்டபம், மற்றும் பௌஹொ மண்டபம் ஆகியன காணப்படுகின்றன. இந்த கட்டிடங்கள் அனைத்தும் வெண் பளிங்குக்கற்களால் 8 மீட்டர் உயரமுடைய அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டுள்ளன.

பிற்பகுதி

[தொகு]

அரண்மனையின் பிற்பகுதியில், பேரரசர், பேரரசிகள், பேரரசரின் காமக்கிழதியர்கள் வாழும் இடங்கள் உள்ளன. இதனை அந்தப்புரம் எனலாம்.[10][11] இந்த பகுதியில், சியன்சிங் மாளிகை, குன்நிங் மாளிகை, யுஹுவா பூங்கா ஆகியவை இடம்பெறுகின்றன. கட்டிடங்களில், பூங்கா, நூலகம், ஓய்வகம், முதலியவையும் அடங்கும். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக முற்றங்கள் உள்ளன.

சுற்றுப்புறம்

[தொகு]

தடுக்கப்பட்ட நகர் மூன்று பக்கம் பூங்காக்களைக் கொண்டுள்ளது. வடக்கில் செயற்கை மலை கொண்ட சிங்ஸான் பூங்கா உள்ளது. வடமேற்கில் பெய்ஹை பூங்கா உள்ளது. மேற்கில் சோங்னான்ஹை பூங்கா உள்ளது. தெற்கில் அரச குடும்ப மூதாதையர் கோயில் மற்றும் அரச கோயில் உள்ளன. இதற்கடுத்து தியானன்மென் சதுக்கம் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Palace Museum. "Forbidden City restoration project website". Retrieved 2007-05-03.
  2. The Forbidden City was listed as the "Imperial Palace of the Ming and Qing Dynasties" (Official Document). In 2004, Mukden Palace in Shenyang was added as an extension item to the property, which then became known as "Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang": "UNESCO World Heritage List: Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang". Retrieved 2007-05-04.
  3. "UNESCO World Heritage List: Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang". UNESCO. Retrieved 2007-05-04.
  4. p. 18, Yu, Zhuoyun (1984). Palaces of the Forbidden City. New York: Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-53721-7.
  5. China Central Television, The Palace Museum (2005). Gugong: "I. Building the Forbidden City" (Documentary). China: CCTV.
  6. p. 15, Yang, Xiagui; Li, Shaobai (photography); Chen, Huang (translation) (2003). The Invisible Palace. Beijing: Foreign Language Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-119-03432-4.
  7. http://whc.unesco.org/en/list/439
  8. "故宫到底有多少间房 (How many rooms in the Forbidden City)" (in Chinese). Singtao Net. 2006-09-27. Retrieved 2007-07-05
  9. China Central Television, The Palace Museum (2005). Gugong: "II. Ridgeline of a Prosperous Age" (Documentary). China: CCTV.
  10. 10.0 10.1 10.2 Yu, Zhuoyun (1984). Palaces of the Forbidden City. New York: Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-53721-7.
  11. 11.0 11.1 The Palace Museum. "太和殿 (Hall of Supreme Harmony)" (in Chinese). Retrieved 2007-07-25.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Forbidden City
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Palace Museum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.