ஜெயம் ரவி
ஜெயம் ரவி | |
---|---|
இயற் பெயர் | ரவி மோகன் |
பிறப்பு | செப்டம்பர் 10, 1980 திருமங்கலம், தமிழ்நாடு, இந்தியா |
குறிப்பிடத்தக்க படங்கள் | ஜெயம் (2003) எம். குமரன் தா/பெ மகாலஷ்மி (2004) உனக்கும் எனக்கும் (2006) |
இரவி மோகன் (Jayam Ravi, பிறப்பு:10 செப்டெம்பர் 1980) ஜெயம் இரவி என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்படுபவர்), தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகராவார். மூத்த திரைப்பட படத்தொகுப்பாளர் ஏ. மோகனின் மகனாவார். இரவி ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்காக ஒரு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதும் , ஒரு தென்னிந்திய பிலிம்பேர் விருதும் , மூன்று தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். ஜெயம் திரைப்படத்தின் வெற்றி, அந்தத் தலைப்பே அவரது மேடைப் பெயரின் முன்னொட்டாக மாறியது. இவருடைய அண்ணன் இயக்கிய எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி , உனக்கும் எனக்கும் , சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஆரம்பகால வாழ்க்கையும், குடும்பமும்
[தொகு]மோகன் இரவி என்ற இயற்பெயர் கொண்ட ஜெயம் இரவி மதுரை மதுரை திருமங்கலத்தில் பிறந்தார்.[1][1] இவரது தந்தை மோகன் தமிழ் இராவுத்தர்,[2] இவரது தாயார் ஆந்திராவைச் சேர்ந்தவர். இவரது மூத்த சகோதரர் மோகன் இராஜா ஒரு திரைப்பட இயக்குநராவார். மோகன் இராஜாவின் பெரும்பாலான படங்களில் இரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது சகோதரி ரோஜா என்பவர் பல் மருத்துவராவார். இரவி சென்னையிலும் ஹைதராபாத்திலும் வளர்ந்தார். சென்னை அசோக் நகரிலுள்ள ஜவஹர் வித்தியாலயாவில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பரதநாட்டிய நடனக் கலைஞர் நளினி பாலகிருஷ்ணனிடம் நடனத்தைக் கற்றுக் கொண்டு தனது 12 வயதில் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். சென்னை இலயோலா கல்லூரியில் கட்புலத் தொடர்பாடல் பட்டம் பெற்ற பிறகு, திரைப்படத் துறையில் நுழைய முடிவு செய்தார். மும்பையிலுள்ள கிஷோர் நமித் கபூர் நிறுவனத்தில் நடிப்புப் பயிற்சி பெற்றார்.[3][4] நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு, கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் (2001) படத்தில் சுரேஷ் கிருஷ்ணா உதவி இயக்குநராக இரவி பணியாற்றியிருந்தார்.
திரை வரலாறு
[தொகு]ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஜெயம் இரவி 2009 சூன் 4 அன்று பிரபல தொலைக்காட்சித் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.[5] இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஆரவ்.[6] டிக் டிக் டிக் திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்தார், ஜெயம் இரவியும் ஆர்த்தியும் 2024 இல் பிரிந்தனர்.[7][8][9]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | உடன் நடித்தவர்கள் | இயக்குனர் | பாத்திரப் பெயர் | குறிப்பு |
---|---|---|---|---|---|
2018 | டிக் டிக் டிக் (2018 திரைப்படம்) | சக்தி சௌந்தர்ராஜன் | எம். வாசுதேவன் | ||
2015 | பூலோகம் | த்ரிஷா, பிரகாஷ் ராஜ் | என். கல்யாணகிருஷ்ணன் | பூலோகம் | |
தனி ஒருவன் | அரவிந்த்சாமி, நயன்தாரா | மோகன் ராஜா | மித்திரன் | ||
ரோமியோ ஜூலியட் | ஹன்சிகா மோட்வானி | கார்த்திக் | |||
2014 | பூலோகம் | பூலோகம் | |||
2014 | நிமிர்ந்து நில் | அமலா பால் | சமுத்திரக்கனி | ||
2014 | நினைத்தது யாரோ | கௌரவத் தோற்றம் | |||
2013 | ஆதிபகவன் | நீத்து சந்திரா | அமீர் | ||
2011 | எங்கேயும் காதல் | ஹன்சிகா மோட்வானி | பிரபுதேவா | கமல் | |
2010 | தில்லாலங்கடி | தமன்னா | ராஜா | கிருஷ்ணா | தெலுங்கு திரைப்பட மறு உருவாக்கம் |
2009 | பேராண்மை | ஜனநாதன் | |||
2008 | தாம் தூம் | கங்கனா ரனாத் | ஜீவா | கௌதம் | |
2008 | சந்தோஷ் சுப்பிரமணியம் | ஜெனிலியா | ராஜா | சந்தோஷ் | பொம்மரில்லு தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
2007 | தீபாவளி | பாவனா | எழில் | பில்லு | |
2006 | சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் | த்ரிஷா | எம். ராஜா | சந்தோஷ் | தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
2006 | இதயத் திருடன் | காம்னா ஜெத்மலானி | சரண் | மஹேஷ் | |
2005 | மழை | ஷ்ரியா | ராஜ்குமார் | அர்ஜீன் | தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
2005 | தாஸ் | ரேணுகா மேனன் | பாபு யோகேஷ்வரன் | அந்தோணி தாஸ் | |
2004 | எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி | அசின் | எம். ராஜா | குமரன் | |
2003 | ஜெயம் | சதா | எம். ராஜா | ரவி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 T, Manigandan K. "HBD Jayam Ravi: ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ் படம் எது தெரியுமா?". Tamil Hindustan Times. Archived from the original on 17 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-17.
- ↑ "Lovable Madurai People". Ananda Vikatan (Chennai, India). 14 September 2011 இம் மூலத்தில் இருந்து 8 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140408231532/http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=10297&r_frm=search.
- ↑ "Jayam Ravi talks to his fans". Sify. 9 September 2008. Archived from the original on 8 November 2013. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
- ↑ "'Jayam' Ravi meets fans on". Sify. Archived from the original on 9 December 2013. பார்க்கப்பட்ட நாள் 18 October 2011.
- ↑ "Wedding bells for Ravi". The Hindu இம் மூலத்தில் இருந்து 30 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170730033113/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/wedding-bells-for-ravi/article3021174.ece.
- ↑ "Jayam Ravi's advice to his sons: Don't make girls cry". India Today.
- ↑ "Jayam Ravi's advice to his sons: Don't make girls cry". India Today.
- ↑ "Ponniyin Selvan Actor Jayam Ravi Announces Divorce From Aarti: "Decision Was Not Made Out Of Haste..."". NDTV (in ஆங்கிலம்). 9 September 2024. பார்க்கப்பட்ட நாள் 10 September 2024.
- ↑ "Jayam Ravi's Son Aarav To Turn Real Relationship Into Reel One For Tik Tik Tik". Desimartini இம் மூலத்தில் இருந்து 4 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170804174109/http://www.desimartini.com/news/tamil/jayam-ravis-son-aarav-to-turn-real-relationship-into-reel-one-for-tik-tik-tik/article39477.htm.