ஜம்மு காஷ்மீர் ஆளுநர்களின் பட்டியல்
ஜம்மு காஷ்மீர் ஆளுநர் | |
---|---|
வாழுமிடம் | |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | கரண் சிங் (1965–1967) |
இறுதியாக | சத்யபால் மாலிக் (2018–2019) |
இணையதளம் | http://jkrajbhawan.nic.in |
1965-க்கு முன்
[தொகு]இந்தியா விடுதலையடைந்தபின் ஜம்மு காஷ்மீர் மகாராஜாவாக ஹரி சிங் ஆட்சி பொறுப்பின் கீழ் காஷ்மீர் 17 நவம்பர் 1952 வரையில் இருந்தது. மேலும் அதுவரை அவர் மகன் கரண் சிங் 20 ஜூன், 1949 முதல் தற்காலிகமாக ஆட்சிக் காவலாராகப் பொறுப்பேற்றிருந்தார். அதன்பின் 17 நவம்பர், 1952 முதல் 30 மார்ச், 1965 வரை மாநிலத்தின் தலைமை பொறுப்பையும் கரன் சிங்கே 'சத்ரிரியாசத்' என்ற பதவியின் மூலம் பொறுப்பேற்றிருந்தார். 31 அக்டோபர் 2019 வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஆளுநர்கள் பொறுப்பு வகித்தனர்.
2019 முதல்
[தொகு]2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், 31 அக்டோபர் 2019 முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மற்றுல் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் கிரீஷ் சந்திர முர்மு பதவியேற்றார்.[1][2]
ஜம்மு காஷ்மீர் ஆளுநர்கள்
[தொகு]வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | கரண் சிங் | 30 மார்ச் 1965 | 15 மே 1967 |
2 | பக்வான் சகாய் | 15 மே 1967 | 3 சூலை 1973 |
3 | லட்சுமி காந்த் ஜா | 3 சூலை 1973 | 22 பெப்ரவரி 1981 |
4 | பிராஜ் குமார் நேரு | 22 பெப்ரவரி1981 | 26 ஏப்ரல் 1984 |
5 | ஜக்மோகன் | 26 ஏப்ரல் 1984 | சூலை 1989 |
6 | கே.வி. கிருஷ்ண ராவ் | சூலை 1989 | 19 ஜனவரி 1990 |
7 | ஜக்மோகன் | 19 ஜனவரி 1990 | 26 மே 1990 |
8 | கிரிஷ் சந்திர சக்சேனா | 26 மே 1990 | 12 மார்ச் 1993 |
9 | கே.வி. கிருஷ்ண ராவ் | 12 மார்ச் 1993 | 2 மே 1998 |
10 | கிரீஷ் சந்திர சக்சேனா | 2 மே 1998 | 4 சூன் 2003 |
11 | எஸ்.கே. சின்கா | 4 சூன் 2003 | 25 சூன் 2008 |
12 | நரேந்திர நாத் வோரா | 25 சூன் 2008 | 23 ஆகத்து 2018 |
13 | சத்யபால் மாலிக் | 23 ஆகத்து 2018[3] | 30 அக்டோபர் 2019 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ President's rule revoked in J&K, 2 Union Territories created
- ↑ Union Territories of Jammu and Kashmir, Ladakh come into existence
- ↑ "Satya Pal Malik sworn in as Jammu and Kashmir governor". The Economic Times. 23 August 2018. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/satya-pal-malik-sworn-in-as-jammu-and-kashmir-governor/articleshow/65512757.cms.