உள்ளடக்கத்துக்குச் செல்

செ. மாதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செ. மாதவன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஆகத்து 1933
சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
அரசியல் கட்சிதிமுக,
அதிமுக
வேலைஅரசியல்
சமயம்இந்து

செ. மாதவன் (20 ஆகத்து 1933 - 3 ஏப்ரல் 2018) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் 1933 ஆகத்து 20 அன்று செல்லையா பிள்ளை என்பவருக்கு மகனாக சிங்கம்புணரியில் பிறந்தவர்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

1962 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருக்கோஷ்டியூர் தொகுதியில் (தற்போது நீக்கப்பட்ட தொகுதி) திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின்னர், மாற்றியமைக்கப்பட்ட திருப்பத்தூர் தொகுதியில் 1967, மற்றும் 1971 ஆகிய ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார். இந்த மூன்று முறையும் தி.மு.க. சார்பில் அவர் போட்டியிட்டு வென்றார். அண்ணாதுரை அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும், 1967 -1976 ஆண்டுகளில் மு. கருணாநிதி அமைச்சரவைகளில் சட்டம், கூட்டுறவுத் துறை, தொழில் துறை அமைச்சராக மாதவன் பணியாற்றினார்.[1]

1982 ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி அஇஅதிமுகவில் சேர்ந்தார். அதைத்தொடர்ந்து 1984 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4][5] 1990-96ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் அஇஅதிமுகவின் பொருளாளராக இருந்தார். எம்.ஜி.ஆர் இறந்தபிறகு இரண்டாக பிளவுபட்ட அ.தி.மு.கவில் சானகி அணியில் இணைந்தார்.[6]

1996ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் மீண்டும் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு. திமுகவில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்தார்.[7]

வகித்த பதவிகள்

[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1962 திருக்கோஷ்டியூர் திமுக
1967 திருப்பத்தூர், சிவகங்கை திமுக
1971 திருப்பத்தூர், சிவகங்கை திமுக
1984 திருப்பத்தூர், சிவகங்கை அஇஅதிமுக

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காலமானார் முன்னாள் அமைச்சர் செ. மாதவன்". செய்தி. தினமணி. 4 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
  3. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
  4. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2016-07-20.
  5. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  6. "முன்னாள் அமைச்சர் செ.மாதவன் மரணம்". செய்தி. மாலை மலர். 4 ஏப்ரல் 2018. Archived from the original on 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. "முன்னாள் அமைச்சர் செ மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு". செய்தி. ஒன் இந்தியா. 4 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2018. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._மாதவன்&oldid=3943636" இலிருந்து மீள்விக்கப்பட்டது