சூரிய ஒளி
Appearance
சூரிய ஒளி (sunlight) என்பது சூரியனில் இருந்து வெளிப்படும் மின்காந்தக் கதிர்வீச்சின் ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு தெரியும் ஒளிக்கதிர்கள், அகச்சிவப்பு, மற்றும் புற ஊதா ஒளிக்கதிர்கள் ஆகியவற்றின் கலவையாகும். சூரிய ஒளி பூமியை அடைய 8.3 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. ஆனால், சூரியனின் கருவில் இருந்து ஆற்றல் அதன் பரப்பிற்கு வந்து அங்கிருந்து ஒளியாக வீசுவதற்கு 10000 முதல் 170000 ஆண்டுகள் வரை ஆகலாம்.[1]
இவ்வுலகில் பல உயிரினங்களுக்கு இன்றியமையாததாக இருக்கும் ஒளிச்சேர்க்கை நிகழ்வுக்குச் சூரிய ஒளி மிகவும் அவசியமான ஒன்றாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ NASA: The 8-minute travel time to Earth by sunlight hides a thousand-year journey that actually began in the core. NASA, sunearthday.nasa.gov. http://sunearthday.nasa.gov/2007/locations/ttt_sunlight.php. பார்த்த நாள்: 2012-02-12.