உள்ளடக்கத்துக்குச் செல்

சூது கவ்வும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூது கவ்வும்
சூது கவ்வும் சுவரொட்டி
இயக்கம்நலன் குமரசாமி
தயாரிப்புசீ. வீ. குமார்
திரைக்கதைநலன் குமாரசாமி
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புவிஜய் சேதுபதி
சஞ்சிதா ஷெட்டி
அசோக் செல்வன்
ஒளிப்பதிவுதினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்புலியோ ஜான் பால்
கலையகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடுமே 1, 2013 (2013 -05-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சூது கவ்வும் (நாளைய இயக்குநர்) எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நலன் குமாரசாமி என்பவரது இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படம் 2013 ஆம் ஆண்டு மே 1 அன்று வெளிவந்தது.

நடிகர்கள்

[தொகு]

கதைச் சுருக்கம்

[தொகு]

தனக்கென ஒரு கொள்கை வைத்துக் கொண்டு சின்னச் சின்ன கடத்தல் வேலைகளைச் செய்து வருபவர் விஜய் சேதுபதி. அவருடன் 3 இளைஞர்களும் சேர்கிறார்கள். ஒருநாள் ஒரு அமைச்சரின் மகனைக் கடத்த ஒப்புக் கொள்கிறார்கள். அதில் ஒரு திருப்பமாக, கடத்தப்பட்ட அமைச்சர் மகனே இவர்களுடன் பங்காளியாகிறான். ஆனால் கடத்தல் வேன் விபத்துக்குள்ளாகிறது. கடத்தல் திட்டம் கவிழ்ந்துவிடுகிறது. இந்தக் கும்பலைப் பிடிக்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி வருகிறார். அவர் துரத்த, இந்த கடத்தல் கும்பல் ஓட நகைச்சுவை விறுவிறுப்பும் கலந்த முடிவுடன் படம் முடிவுறுகிறது.

மறுதயாரிப்புகள்

[தொகு]

இந்தத் திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மறுதயாரிப்பு செய்யப்படுகின்றது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூது_கவ்வும்&oldid=4143228" இலிருந்து மீள்விக்கப்பட்டது