உள்ளடக்கத்துக்குச் செல்

சுமதி மொரார்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமதி மொரார்ஜி
பிறப்புஜமுனா
(1909-03-13)13 மார்ச்சு 1909
மும்பை, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு27 சூன் 1998(1998-06-27) (அகவை 89)
அறியப்படுவதுசிந்தியா நீராவி கப்பல் நிறுவனம்
வாழ்க்கைத்
துணை
சாந்தி குமார் நரோத்தம் மொரார்ஜி
விருதுகள்பத்ம விபூசண் (1971)
குறிப்புகள்

சுமதி மொரார்ஜி (Sumati Morarjee) இவர் ஓர் இந்திய கப்பலின் முதல் பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார். (பிறப்பு:1909 மார்ச் 13: [2] இறப்பு:1998 சூன் 27 [3] ), கப்பல் உரிமையாளர்களின் அமைப்பிற்கு தலைமை தாங்கிய உலகின் முதல் பெண்மணி என்ற பெருமைக்கும் உரியவராவார். இந்திய தேசிய நீராவி கப்பல் உரிமையாளர்கள் சங்கம் என்பது (பின்னர் இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் என மறுபெயரிடப்பட்டது) இது பாரம்பரியமாக ஒரு ஆண்களின் கோட்டையாக இருந்து வந்தது. [4] 1971 ஆம் ஆண்டில் தனது இவரது சேவையை கௌரவிக்கும் விதமாக இந்தியாவின் இரண்டாவது கௌரவமான பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டுள்ளது. [5]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவர் மதுராதாசு கோகுல்தாசு மற்றும் அவரது மனைவி பிரேமாபாய் ஆகியோருக்கு ஒரு பணக்காரக் குடும்பத்தில் மும்பையில் பிறந்தார். பிருந்தாவனத்தில் கிருட்டிணருடன் தொடர்புடைய புனித நதியான ஜமுனாவின் பெயர் சுமதிக்குச் சூட்டப்பட்டது. இந்தியாவில் அக்கால பழக்கவழக்கங்களின்படி, ஒரு இளம் பெண்ணாக இருந்தபோதே, சிந்தியா நீராவி கப்பல் நிறுவனத்தின் நிறுவனர் நரோத்தம் மொரார்ஜியின் ஒரே மகனான சாந்தி குமார் நரோத்தம் மொரார்ஜி என்பவரை மணந்தார், பின்னர் இது இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமாக வளர்ந்தது. [6]

சிந்தியா நீராவி கப்பல் நிறுவனம்

[தொகு]

இவர் 1923 இல் தனது 20ஆவது வயதில் நிறுவனத்தின் நிர்வாகத்தில் சேர்க்கப்பட்டார். சுமதி ஆரம்பத்தில் நிறுவனத்தின் அடிமட்டத்திலிருந்து ஒரு சில கப்பல்களைப் பிரித்து படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டார். பின்னர், 1946 வாக்கில் நிறுவனத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை நிர்வகித்தார். இவர் ஏற்கனவே இயக்குநர்கள் குழுவில் இருந்ததால் கப்பல் வர்த்தகத்தில் இவரது நிபுணத்துவம் பல ஆண்டுகளாய் நீடித்தது. இவரது சாதனையின் காரணமாக, இவர் 1956 ஆம் ஆண்டில் இந்திய தேசிய நீராவி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1965 ஆம் ஆண்டிலும் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மேற்பார்வையின் கீழ் தான் நிறுவனம் 43 கப்பல்களின் மொத்தமாக 552,000 டன் எடையை எட்டியது. [7]

கடனில் மூழ்கிய சிந்தியா நீராவி வழிசெலுத்தலை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் வரை 1979 முதல் 1987 வரை இவர் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். பின்னர் அவர் 1992 வரை நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மகாத்மா காந்தியின் செல்வாக்கு

[தொகு]

சுமதி மகாத்மா காந்தியுடன் தொடர்ந்து நட்புடன் இருந்தார். இருவரும் பல சந்தர்ப்பங்களில் சந்தித்துக் கொண்டனர். அவர்களின் பரிமாற்றம் செய்தித்தாள் அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டது. 1942 மற்றும் 1946 க்கு இடையில், காந்தியுடன் சுதந்திரத்திற்கான் இயக்கத்தில் மறைமுகப் பணியில் ஈடுபட்டார். [8]

சாதனைகள்

[தொகு]
  • சுமதி மும்பையின் ஜூஹுவில் உள்ள வித்யா கேந்திரப் பள்ளியை நிறுவனார்.
  • 1965 ஆம் ஆண்டில் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் (இஸ்கான்) நிறுவனர் ஆச்சார்யா சுவாமி பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதாவுக்கு ஒரு வழி பத்தியை வழங்கினார். [9]
  • இவர் 1970 இல் இலண்டனின் உலக கப்பல் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் நரோத்தம் மொரார்ஜி கப்பல் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார்.
  • இந்தியப் பிரிவினையின் போது பாக்கித்தானில் இருந்து சிந்திகளை அழைத்து வருவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
  • நவீன இந்திய கப்பல் நிறுவனங்களுக்கு ஒரு மாதிரியை நிறுவ இவர் உதவியதுடன், வணிக மதிப்புகளை மட்டுமல்ல, இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் கருத்துகளையும் பரப்ப உதவினார்.

இறப்பு

[தொகு]

அவர் 27 ஜூன் 1998 அன்று தனது 89 வயதில் இதய அடைப்புக் காரணமாக இறந்தார்.

குறிப்புகள்

[தொகு]
  1.   Satyaraja Dasa. "Passage from India: Sumati Morarjee and Prabhupada's Journey West | Back to Godhead". Btg.krishna.com. Archived from the original on 2013-11-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
  2. The Radical Humanist. Maniben Kara. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.
  3. Fairplay. Fairplay Publications Limited. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.
  4. "Sumati Morarjee, mother of Indian shipping, dies at 91". http://www.rediff.com/money/1998/jun/29sumati.htm. பார்த்த நாள்: 21 June 2012. 
  5. Ministry of Communications and Information Technology. "List of Padma Vibhushan Awardees". பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.
  6. "Excerpts - Prem Rawat's Divine Incarnation Explanatio". NY Times. 8 April 1973. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.
  7. "SHIPPING BOSS TO OPEN NEW SERVICE". The Straits Times: p. 8. 22 November 1971. http://newspapers.nl.sg/Digitised/Article/straitstimes19711122.2.43.aspx. பார்த்த நாள்: 21 June 2012. 
  8. "Gandhi: a photographic exhibition". nZine.co.nz. 2002-09-27. Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-04. பார்க்கப்பட்ட நாள் 2020-01-24.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமதி_மொரார்ஜி&oldid=3555089" இலிருந்து மீள்விக்கப்பட்டது