சிலந்தி (திரைப்படம்)
சிலந்தி | |
---|---|
இயக்கம் | ஆதிராஜ் |
இசை | நீல் முகர்ஜி |
நடிப்பு | முன்னா மோனிகா ரியாஸ் கான் |
ஒளிப்பதிவு | போசியா பாத்திமா |
வெளியீடு | 9 மே 2008 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிலந்தி (Silandhi) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.[1] அறிமுக இயக்குநர் ஆதிராஜ் இயக்கிய இப்படத்தில் முன்னா, மோனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மேலும் ரியாஸ் கான் துணை வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பின்னர் தெலுங்கில் எர்ர குலாபி என்றும், இந்தியில் ஜால் - தி நெட் என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மேலும் இப்படமானது கன்னடத்தில் விஜய் ராகவேந்திரா, ஹரிப்பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரணதந்திரா என்ற பெயரில் 2014 இல் இயக்குனரால் மறு ஆக்கம் செய்யப்பட்டது.இது திரைப்படம் ஐ நோ வாட் யூ டிட் லாஸ்ட் சம்மர் என்ற ஆங்கில திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது.[2]
சுருக்கம்
[தொகு]இந்த படம் புது ஜோடிகளான மகேஷ் ( முன்னா ), மோனிகா ( மோனிகா ) ஆகியோரைப் பற்றியது. திருமணத்திற்குப் பின் தேனிலவுக்கு அவர்கள் தனிமையான இடத்தில் உள்ள வீட்டிற்குச் செல்கின்றனர். அந்த வில்லாவில் இயற்கைக்கு மாறான சில விஷயங்கள் நடக்கின்றன.
நடிகர்கள்
[தொகு]- முன்னா மகேஷாக
- மோனிகா மோனிகாவாக
- ரியாஸ் கான் காவல் அதிகாரியாக
- சந்துரு
- நெல்லை சிவா
- கணேஷ் பாபு
- ஜெகன்
குறிப்புகள்
[தொகு]- ↑ "Silanthi is an erotic thriller, says director - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ https://bangaloremirror.indiatimes.com/entertainment/reviews/movie-review-ranatantra/amp_articleshow/51461778.cms