சிமாஜி அப்பா
சிமாஜி அப்பா | |
---|---|
பிறப்பு | 1707 இந்தியா |
இறப்பு | 1740 இந்தியா |
பணி | மராத்தா இராணுவத்தின் தளபதி |
அறியப்படுவது | சிறந்த போர்வீரரும் முதலாம் பாஜி ராவின் தம்பியும் ஆவார் |
பெற்றோர் | பாலாஜி விஸ்வநாத்(தந்தை) |
வாழ்க்கைத் துணை | இரக்மாபாய் அன்னபூர்ணாபாய் |
பிள்ளைகள் | சதாசிவராவ் பாவ் |
உறவினர்கள் | பாஜிராவ்(சகோதரர்) பியூபாய் ஜோஷி (சகோதரி) |
சிமாஜி அப்பா (Chimaji Appa) அல்லது பாவ் என்று அழைக்கப்படும் சிமாஜி பல்லால் (Chimaji Ballal) (1707–1740), பாலாஜி விஸ்வநாத் பட்டின் மகனும், மராட்டியப் பேரரசின் பாஜிராவ் பேஷ்வாவின் தம்பியுமாவார். [1] சிமாஜி ஒரு திறமையான இராணுவத் தளபதியாக இருந்தார், அவர் இந்தியாவின் மேற்கு கடற்கரையை போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து விடுவித்தார். சிமாஜியின் தொழில் வாழ்க்கையின் மிக உயர்ந்த அம்சம் போர்த்துகீசியர்களின் பிடியிலிருந்து வசாய் கோட்டையை கைப்பற்றியதாகும். இவர் மராட்டிய சாம்ராஜ்யத்திற்கான மூலோபாயத்தை இயக்குவதாக அறியப்பட்டார். மேலும் பாஜிராவின் அனைத்து போர்களையும் இவரே திட்டமிடுவார். [2]
போர்த்துகீசியர்களுக்கு எதிராக மராத்தியப் போர்
[தொகு]சிமாஜி அப்பா தனது ஆற்றலை மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி குவித்தார். போர்த்துக்கல்லின் வட இந்திய மாகாண அரசாங்கத்தின் தலைநகராக இருந்ததால், வசாய் கோட்டையை (முன்பு [[பசீன் கோட்டை) போர்த்துகீசியர்களிடமிருந்து கைப்பற்றி மராட்டிய சாம்ராஜ்யத்துடன் இணைத்தார். [3]
பெலாப்பூர் கோட்டையை கைப்பற்றுதல்
[தொகு]1733 ஆம் ஆண்டில், சிமாஜி அப்பா தலைமையிலான மராத்தியர்கள், சர்தார் சங்கர்புவா சிந்தியாவுடன் போர்த்துகீசியர்களிடமிருந்து பெலாப்பூர் கோட்டையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர்.
குடும்பம்
[தொகு]சிமாஜி இரக்மாபாய் (பெத்தே குடும்பம்) என்பவரை மணந்தார். அகமது ஷா துரானிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க மூன்றாம் பானிபட் போரில் மராட்டிய படைகளை வழிநடத்திய சதாசிவராவ் பாவ் என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு மகன் இவர்களுக்கு இருந்தார். சதாசிவராவ் பிறந்த சிறிது காலத்திலேயே இரக்மாபாய் இறந்தார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ https://www.esamskriti.com/e/History/Indian-History/The-Extraordinary-Exploits-of-CHIMAJI-APPA--1.aspx
- ↑ https://twitter.com/aparanjape/status/1074664517227896832
- ↑ https://www.dnaindia.com/analysis/column-how-chimaji-appa-defeated-the-portugese-2288187