உள்ளடக்கத்துக்குச் செல்

சந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°20′24″N 82°28′12″E / 25.34000°N 82.47000°E / 25.34000; 82.47000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாது ரவிதாஸ் நகர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்
संत रविदास नगर ज़िला
சந்து ரவிதாஸ் நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மிர்சாப்பூர் கோட்டம்
தலைமையகம்கியான்பூர்
பரப்பு1,015 km2 (392 sq mi)
மக்கட்தொகை1,578,213 (2011)
படிப்பறிவு68.97%
பாலின விகிதம்955
வட்டங்கள்3
மக்களவைத்தொகுதிகள்பதோயி மக்களவைத் தொகுதி
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 2
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சந்து ரவிதாஸ் நகர் மாவட்டம் (Sant Ravidas Nagar District) (இந்தி|संत रविदास नगर ज़िला), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் கியான்பூர் ஆகும். இது மிர்சாபூர் கோட்டத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]
ஹரிஹரநாத் கோயில், கியான்பூர் நகரம்

சந்து ரவிதாஸ் நகர் மாவட்டம் 30 சூன் 1994 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் 65-வது மாவட்டமாக துவக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாவட்டங்களில் குறைந்த பரப்பளவு கொண்டது இம்மாவட்டம். இம்மாவட்டத்தின் முன்னாள் பெயர் பதோகி ஆகும். மாயாவதி உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த போது பதோகி மாவட்டத்தின் பெயரை சந்து ரவிதாஸ் நகர் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்மாவட்டம் முன்னர் வாரணாசி மாவட்டத்தின் பகுதியாக இருந்தது.

அமைவிடம்

[தொகு]

சந்து ரவிதாஸ் மாவட்டத்தின் வடக்கில் ஜவுன்பூர் மாவட்டம் கிழக்கில் வாரணாசி மாவட்டம், தெற்கில் மிர்சாபூர் மாவட்டம், மேற்கில் அலகாபாத் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தென்மேற்கில் கங்கை ஆறு, வருணா ஆறு மற்றும் மோர்வா ஆறுகள் பாய்கிறது.

தில்லி - கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 2 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.

மாவட்ட நிர்வாகம் & அரசியல்

[தொகு]

இம்மாவட்டம் ஔராய், கியான்பூர் மற்றும் பதோயி என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது. மேலும் பதோயி, சூரியவான், கியான்பூர், தீக், அப்ஹோலி, ஔராய் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது. [1] 1075 கிராமங்களும், 489 கிராமப் பஞ்சாயத்துகளும், ஒன்பது காவல் நிலையங்களும் உடையது.

பதோயி மக்களவைத் தொகுதி இம்மாவட்டத்தில் உள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,578,213 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 85.47% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 14.53% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 16.58% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 807,099 ஆண்களும் மற்றும் 771,114 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 955 பெண்கள் வீதம் உள்ளனர். 1,015 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1,555 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 68.97 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.47% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 56.03% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 258,583 ஆக உள்ளது. [2]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,368,291 (86.70 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 203,887 (12.92 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்

[தொகு]

உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]