உள்ளடக்கத்துக்குச் செல்

சல்மான் பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சல்மான் பட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சல்மான் பட்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குஆரம்ப துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 178)செப்டம்பர் 3 2003 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 150)செப்டம்பர் 22 2004 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப சட்டை எண்1
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 33 78 90 149
ஓட்டங்கள் 1,889 2,725 6,232 6,049
மட்டையாட்ட சராசரி 30.46 36.82 41.00 44.47
100கள்/50கள் 3/10 8/14 17/24 19/29
அதியுயர் ஓட்டம் 122 136 290 150*
வீசிய பந்துகள் 137 69 938 535
வீழ்த்தல்கள் 1 0 11 10
பந்துவீச்சு சராசரி 106.00 0 59.36 48.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/36 0/11 4/82 2/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 20/– 33/– 39/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 6 2011
பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் சல்மான் பட்

சல்மான் பட் (Salman Butt, உருது : سلمان بٹ பிறப்பு: அக்டோபர் 7 1984 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார் 2003 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடி வருகின்றார். பின் சூதாட்டப் புகாரில் 2011 ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். இடதுகை மட்டையாளர் மற்றும் வலதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர் பாக்கித்தான் தேசிய அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , லாகூர் ஈகிள்ஸ் , லாகூர் லயன்ஸ் லாகூர் ரெட்ஸ் , பாக்கித்தான் கிரிக்கெட் போர்ட் புளூஸ் , பாக்கித்தான் லெவன் அணி, பன்சாப் ஸ்டாலியன்ஸ் ஆகிய அணிகளுக்காவும் விளையாடியுள்ளார்.

இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டி களில் துவக்க வீரராக களம் இறங்கினார். செப்டம்பர் 3, 2003 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் செப்டம்பர் 22, 2004 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். ஜூலை 16, 2010 இல் தேர்வுப் போட்டிகளின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆகஸ்டு 29, 2010 இல் இவர் சூதாட்டப் புகாரில் சிக்கினார். ஆகஸ்டு 31 இல் இவர் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். பின் ஒருநாள்போட்டித் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார். 10 ஆண்டுகள் துடுப்பாட்டம் விளையாட தடைவிதிக்கப்பட்டது.[1] நவம்பர் ,2011 இல் முகமது ஆமிர் மற்றும் முகமது ஆசிபுடன் இணைந்து 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.[2] சூன் 21, 2012 இல் இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

செப்டம்பர் 2, 2015 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவர்களை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதித்தது.[3][4]

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

தடைக்குப் பிறகு இவர் வாப்தா அணிக்காக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.அந்தத் தொடரில் ஏழு போட்டிகளில் விளையாடிய இவர் 536 ஓட்டங்களை எடுட்தார். அவரின் மட்டையாட்ட சராசரி 107 ஆக இருந்தது. மேலும் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் இவர் முதலிடம் பெற்றார். 2016-17 ஆம் ஆண்டிற்கான குவைத் இ அசாம் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியின் இரண்டு ஆட்டப் பகுதிகளிலும் இவர் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் பெற்று அணி கோப்பை வெல்ல உதவினார்.[5] 2017-18 ஆம் ஆண்டிற்கான தேசிய இருபது20 கோப்பைக்கான தொடரின் ஒருபோட்டியில் கம்ரான் அக்மலுடன் இணைந்து துவக்க இணையாக 209 ஓட்டங்களை எடுத்தனர். இதன்மூலம் இருபது20போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த துவக்க இணை எனும் சாதனை படைத்தது. இதர்கு முன்னதாக ஜோ டென்லி மற்றும் டேனியல் பெல் ட்ரும்மன்ட் ஆகியோர் எடுத்த ஓட்டங்களே சாதனையாக இருந்தது.[6][7][8][9][10]

சர்வதேச போட்டிகள்

[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்

[தொகு]

2003 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . செப்டம்பர் 3 இல் முல்தானில் நடைபெற்ற வாங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் துவக்கவீரராக களம் இறங்கி 14 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து மகமூத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 2 நான்குகளும் அடங்கும்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 34 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்தார்.இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 1 இலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பின் 2010 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. ஆகஸ்டு 26, இலண்டனில் நடைபெற்ற நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 58 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்து சுவானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 45 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்து மீண்டும் சுவானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[11]

ஒருநாள் போட்டிகள்

[தொகு]

செப்டம்பர் 22, 2004 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். துவக்க வீரராக கள்ம் இறங்கிய இவர் தனது முதல் போட்டியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் பிராட்ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி எழு இலக்குகளில் வெற்றி பெற்றது.[12] துவக்க வீரராக களம் இறங்குவதில் கடும் போட்டி நிலவியதால் இவருக்கு அணியில் வாய்ப்பு இடம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற வாகையாளர் கோப்பைத் தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓட்டங்கள் அடித்தார். நவம்பர் 13, 2004 இல் இந்தியத் துடுப்பாட்ட அனிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 292 ஓட்டங்களை எதிர்த்து விளையாடினார். இவர் சோயிப் மாலிக் மற்றும் இன்சமாம் உல் ஹக் ஆகியோருடன் இணைந்து 113 ஓட்டங்கள் எடுத்தார். காயம் காரணமாக 7 ஓவர்கள் மீதமிருக்கும் போது இந்தப் போட்டியில் இருந்து விலகினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 108* ஓட்டங்கள் எடுத்தார்.[13] 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் தேர்வானார். ஜூன் 19, தர்மசாலாவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 85 பந்துகளைச் சந்தித்த இவர் 74 ஓட்டங்களை எடுத்து ரவீந்திர ஜடேஜாவினால் ரன் அவுட் ஆக்கப்பட்டார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 3 இலக்குகளில் வெற்றி பெற்றது.

பன்னாட்டு இருபது20

[தொகு]

2007 ஆம் ஆண்டில் செப்டம்பர் 2, நைரோபியில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரன தொடரின் நான்காவது ஆவது பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 27 பந்துகளில் 33 ஓட்டங்களில் எடுத்து அஷ்ரபுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அனி 30 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[14] 2010 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சூலை 6, 2010 இல் பிர்மிங்ஹாம் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது பன்னாட்டு இருபது20போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் 21 பந்துகளைச் சந்தித்த இவர் 31 ஓட்டங்களை எடுத்து ஓ கீஃபே பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[15]

சான்றுகள்

[தொகு]
  1. "Match-fixer pockets £150k as he rigs England Test at Lord's". News of the World. பார்க்கப்பட்ட நாள் 2 October 2010.
  2. "Pakistan cricketers guilty of betting sca". BBC News. 1 November 2011. http://www.bbc.co.uk/news/uk-15538516. பார்த்த நாள்: 1 November 2011. 
  3. Amir, Asif, Butt free to play all cricket from September 2
  4. "ICC confirms sanctions against Asif and Butt will expire on 1 September 2015". Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Butt ton secures WAPDA's maiden title". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 December 2016.
  6. "27th Match, National T20 Cup at Rawalpindi, Nov 24 2017 | Match Summary | ESPNCricinfo". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2017-11-26.
  7. "Salman Butt, Kamran Akmal set opening record in Pakistan’s National T20 Cup" (in en). hindustantimes.com/. 2017-11-24. http://www.hindustantimes.com/cricket/salman-butt-kamran-akmal-create-batting-record-in-pakistan-s-national-t20-cup/story-fUzuhtHP1b92Ldt8IVqMKM.html. 
  8. "Kamran Akmal, Salman Butt create record for highest T20 partnership for opening wicket" (in en-US). The Indian Express. 2017-11-24. http://indianexpress.com/article/sports/cricket/kamran-akmal-salman-butt-create-record-for-highest-t20-partnership-for-opening-wicket-4952395/. 
  9. "Kamran Akmal, Butt blitz record opening stand in Lahore win". ESPNcricinfo. http://www.espncricinfo.com/story/_/id/21536116/kamran-akmal,-butt-blitz-record-opening-stand-lahore-win. 
  10. "Records | Twenty20 matches | Partnership records | Highest partnership for the first wicket | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/305253.html. 
  11. "4th Test, Pakistan tour of England at London, Aug 26-29 2010 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-26
  12. "Full Scorecard of Pakistan vs West Indies, ICC Champions Trophy (ICC KnockOut), 2nd SF - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
  13. "Inzamam and Salman Butt sink India!!". YouTube. 28 March 2007. பார்க்கப்பட்ட நாள் 6 February 2011.
  14. "Full Scorecard of Bangladesh vs Pakistan, Twenty20 Quadrangular (Kenya), 4th Match - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
  15. "Full Scorecard of Australia vs Pakistan 2nd T20I 2010 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மான்_பட்&oldid=3902686" இலிருந்து மீள்விக்கப்பட்டது