உள்ளடக்கத்துக்குச் செல்

சலோமி (இயேசுவின் சீடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சலோமி
Greek fresco of St Salome
நறுமண தைலங்களை எடுத்துவந்தவர், மருத்துவச்சி
இறப்பு1ஆம் நூற்றாண்டு
ஏற்கும் சபை/சமயங்கள்Roman Catholicism
Eastern Catholicism
Eastern Orthodoxy
திருவிழா24 ஏப்ரல் (Roman Catholic)
22 October (Roman Catholic)
3 ஆகஸ்ட் (Eastern Orthodox, Eastern Catholic & Lutheran Church–Missouri Synod)
Sunday of the Myrrhbearers (Eastern Orthodox & Eastern Catholic)
சித்தரிக்கப்படும் வகைநறும் புகைக் கலம்

புதிய ஏற்பாட்டில், சலோமி என்பவர் இயேசுவைப் பின்பற்றிய பெண் சீடராவார். இவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது நிகழ்விடத்தில் இருந்தவர்களுள் ஒருவராகவும் இயேசுவின் கல்லறை காலியாக இருப்பதைக் கண்ட பெண்களுள் ஒருவராகவும் மாற்கு நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் நியமன நற்செய்திகளில் பெயரின்றிக் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற பெண்களுடன் இவர் அடையாளம் காணப்படுகிறார். குறிப்பாக, பன்னிரண்டு திருத்தூதர்களில் இருவரான யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரின் தாயாகவும் செபதேயுவின் மனைவியாகவும் அடிக்கடி அடையாளம் காணப்படுகிறார்.[1] இடைக்கால பாரம்பரியத்தில், சலோமி ( மேரி சலோமி) தூய அன்னாவின் மகள்களான மூன்று மேரிகளில் ஒருவராகக் கருதப்பட்டார், எனவே இவர் இயேசுவின் தாயான மரியாவின் ஒன்றுவிட்ட சகோதரியாவார்.[2]

நியமன நற்செய்திகளில்

[தொகு]

மாற்கு நற்செய்தி 15:40–41 ல், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது நிகழ்விடத்தில் இருந்த பெண்களுள் ஒருவராக சலோமி பெயரிடப்பட்டுள்ளார், "பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு மற்றும் யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர். இயேசு கலிலேயாவில் இருந்த போது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கே இருந்தார்கள்."

மத்தேயு 27:56 இன் பகுதி இவ்வாறு கூறுகிறது: "அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் தாயான மரியாவும் செபதேயுவின் பிள்ளைகளுடைய தாயும் இருந்தார்கள்." கத்தோலிக்க என்சைக்ளோபீடியா (1913) மாற்கு 15:40 இன் சலோமி மத்தேயுவில் உள்ள செபதேயின் மகன்களின் தாயுடன் ஒத்தவராக இருக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கிறது; மத்தேயு 20:20 இல் சலோமி தனது மகன்களை பரதீஸில் இயேசுவுடன் அமர்வதற்கு அனுமதிக்கும்படி அவரிடம் மன்றாடுகிறார்.

பிற நற்செய்திகளில்

[தொகு]

தொடக்கக்காலக் கிறிஸ்தவ நூல்களில், "சலோமி" பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன. யாக்கோபு என்ற பெயருடன் இணைக்கப்பட்ட குழந்தை பருவ நற்செய்தியொன்றில் சலோமி குறிப்பிடப்பட்டுள்ளார், யாக்கோபு நற்செய்தி ch. XIV:

"14 மருத்துவச்சி குகையிலிருந்து வெளியே சென்றாள், சலோமி அவளைச் சந்தித்தாள். 15 மருத்துவச்சி அவளிடம், "சலோமி, சலோமி, நான் பார்த்த ஒரு வியக்கத்தக்க விஷயத்தைச் சொல்கிறேன். 16 ஒரு கன்னிப்பெண் பெற்றெடுத்தாள், இது இயற்கைக்கு எதிரானது." 17 அதற்கு சலோமி, "என் கடவுளாகிய இறைவன் வாழ்பவர், இந்த விஷயத்தில் எனக்கு ஒரு குறிப்பிட்ட ஆதாரம் கிடைக்காத வரை, ஒரு கன்னிப்பெண் பெற்றெடுத்தாள் என்று நான் நம்பமாட்டேன்" என்றாள்.
18 பிறகு சலோமி உள்ளே சென்றாள், மருத்துவச்சி, "மரியா, உன்னைக் காட்டு, உன்னைப் பற்றி ஒரு பெரிய சர்ச்சை எழுந்துள்ளது" என்றாள். 19 சலோமி அவளை விரலால் சோதித்தாள். 20 ஆனால் சலோமியின் கை சுருங்கிப்போனது, அவள் கசப்புடன் முணுமுணுத்து, 21: என் அக்கிரமத்தினிமித்தம் எனக்குக் கேடு! ஏனெனில், வாழும் கடவுளை நான் சோதித்தேன், என் கை கீழேவிழ தயாராக உள்ளது."

மருத்துவச்சிக்குப் பிறகு, அற்புதப் பிறப்புக்கு சாட்சியாக இருந்த முதல் நபர் சலோமி என்பதும், இயேசுவை கிறிஸ்து என்று அங்கீகரிப்பதும், அவளை சீடரான சலோமியுடன் இணைக்கும் சூழ்நிலைகள். உயர் இடைக்காலத்தில், இந்த சலோமி பெரும்பாலும் (ஆனால் எப்போதும் இல்லை) மேற்கில் மேரி சலோமியுடன் அடையாளம் காணப்பட்டார், எனவே அவர் நம்பிக்கையுள்ள மருத்துவச்சியாகக் கருதப்பட்டார். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Topical Bible: Salome including Smith's Bible Dictionary, ATS Bible Dictionary, Easton's Bible Dictionary and International Standard Bible Encyclopedia
  2. "NETBible:Salome". Archived from the original on 1 September 2009.
  3. G Schiller, Iconography of Christian Art, Vol. I,1971 (English translation from German), Lund Humphries, London, p.62, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85331-270-2