உள்ளடக்கத்துக்குச் செல்

சதின் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதின் தாசு
பிறப்பு1941
பாரிபதா, மயூர்பஞ்சு மாவட்டம், ஒரிசா, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விசர் ஜே.ஜே. கலைப்பள்ளி, மும்பை
அறியப்படுவதுஓவியம், சிற்பம்
வாழ்க்கைத்
துணை
வர்ஷா தாசு
விருதுகள்பத்ம பூசண்

சதின் தாசு (Jatin Das, திசம்பர் 1941) என்பவர் ஓவியர், சிற்பக் கலைஞர், கவிஞர் என அறியப்படுபவர். இந்திய நடுவணரசின் பத்ம பூசண் விருதைப் பெற்றவர்.[1]

கலைப் பணிகள்

[தொகு]

ஒரிசா மாநிலம் மயூர்பஞ்ச் என்னும் ஊரில் பிறந்த சதின் தாசு மும்பை சர். ஜே. ஜே. கலைப் பள்ளியில் ஓவியம் கற்றுக்கொண்டார். 68 ஓவியக் கண்காட்சிகளை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தினார். உலகத்தில் உள்ள பல கலை சிற்பக் கல்லூரிகளிலும் அருங்காட்சிகளிலும் சென்று சொற்பொழிவுகளை ஆற்றினார்.

1987-88 கால கட்டத்தில் இரசியாவில் நடந்த இந்தியத் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு வடகிழக்கு மாநிலங்களின் கைவினைப் பொருள்கள் வாரியத்தில் ஆலோசகராக இருந்தார். இது போன்ற பல கலைப் பண்பாட்டு அமைப்புகளில் கௌரவ பதவிகளில் பொறுப்பு வகித்தார்.

சதின் தாசு மும்பை திரை நடிகைநந்திதா தாசின் தந்தை ஆவார். தற்பொழுது புதுதில்லியில் இவர் வாழ்ந்து வருகிறார்.

விருதுகள்

[தொகு]
  • பத்மபூசண் விருது (2012)
  • பாரத் நிர்மாண் விருது (2007)
  • உத்கலா விருது (2006)

சான்றாவணம்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-26. பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதின்_தாசு&oldid=3552806" இலிருந்து மீள்விக்கப்பட்டது