உள்ளடக்கத்துக்குச் செல்

கோலா சுங்கை பாரு

ஆள்கூறுகள்: 2°21′N 102°02′E / 2.350°N 102.033°E / 2.350; 102.033
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலா சுங்கை பாரு
Kuala Sungai Baru
மலாக்கா
கோலா சுங்கை பாரு
கோலா சுங்கை பாரு
Map
கோலா சுங்கை பாரு is located in மலேசியா
கோலா சுங்கை பாரு
      கோலா சுங்கை பாரு
ஆள்கூறுகள்: 2°21′N 102°02′E / 2.350°N 102.033°E / 2.350; 102.033
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்அலோர் காஜா
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள்
78200[1]
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 (0)6387-0000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்M
இணையதளம்www.mphtj.gov.my

கோலா சுங்கை பாரு (மலாய்; ஆங்கிலம்: Kuala Sungai Baru; சீனம்:瓜拉双溪巴鲁) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில், மலாக்கா மாநகரத்திற்கு வடக்கே உள்ள ஒரு சிறிய நகரமாகும். இந்த நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்டிக்சன் நகரத்தின் எல்லையில் உள்ளது.

கோலா லிங்கி, பெங்காலான் பாலாக் ஆகிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த நகரத்தில் மீன்பிடித்தல் முக்கியப் பொருளாதார நடவடிக்கையாக உள்ளது. மற்றும் இந்த நகரம் மஸ்ஜித் தானாநகரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[2]

கல்வி

[தொகு]
படம் பெயர் விளக்கம்
மலாக்கா பல்கலைக்கழகம்
Universiti Melaka (UniMEL)
இசுலாமிய அறிவியல், உளவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கவனம் செலுத்தும் மாநில அரசின் தனியார் கல்லூரி; 1996-இல் மலாக்கா பன்னாட்டு இசுலாமிய தொழில்நுட்பக் கல்லூரியாக நிறுவப்பட்டது; 2000-இல் மலேசியக் கல்வி அமைச்சினால் மலாக்கா இசுலாமிய பல்கலைக்கழகக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது; 8 ஏப்ரல் 2021-இல் முழுமையான பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டது.[3]
மலேசிய கடல்சார் கல்விக்கழகம்
(Malaysian Maritime Academy)
மலேசியாவில் ஒரு கடல்சார் பயிற்சி கல்விக்கழகம்; மலேசிய பன்னாட்டு கப்பல் கழகத்திற்கு சொந்தமானது; கோலா சுங்கை பாரு நகரத்தில் 30 எக்டேர் வளாகத்தைக் கொண்டது; கடல் துறையில் பயிற்சி அளிக்கிறது.[4]

உள்கட்டமைப்புகள்

[தொகு]
படம் பெயர் விளக்கம்
கோலா சுங்கை லிங்கி துறைமுகம்
(Port of Kuala Sungai Linggi)
திரவப் பொருள்களை மொத்தமாக ஏற்றுமதி செய்யும் துறைமுகம்; மலாக்கா நீரிணையில், லிங்கி ஆறு கடற்கரையில் அமைந்துள்ளது.[5][6]

சுற்றுலா இடங்கள்

[தொகு]
படம் பெயர் விளக்கம்
கோனட் தீவு
(Pulau Konet)
கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு தீவு; ஒரு கடல் மேல் நடைபாதை மூலம் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது; குறைந்த அலைகள் இருக்கும் போது தீவிற்கு நடந்து செல்ல முடியும்.
கோலா லிங்கி சதுப்புநில பொழுதுபோக்கு காடு
(Kuala Linggi Mangrove Recreational Forest)
மலாக்கா - நெகிரி செம்பிலான் எல்லைக்கு அருகில் லிங்கி ஆறு முகப்பில் உள்ள சதுப்புநில பொழுதுபோக்கு காடு.[7]
கோத்தா லிங்கி கோட்டை
(Kuala Linggi Fort)
கம்போங் கோலா லிங்கி சிப்பாய் மலையின் மேல் உள்ள கோட்டை; 1756 முதல் 1757 வரையிலான போருக்குப் பிறகு டச்சு மற்றும் பூகிஸ் வீரர்களால் கட்டப்பட்டது; பிலிப்பினா கோட்டை என்றும் அறியப்பட்டது; அப்போதைய டச்சு ஆளுநரின் மகளின் பெயரால் பிலிப்பினா கோட்டை என பெயர்; டச்சு மற்றும் பூகிஸ் வீரர்களுக்கு இடையே 1 சனவரி 1758 அன்று ஒப்பந்தம் நடந்தது; இந்த ஒப்பந்தம் லிங்கி பகுதியில் ஈய வர்த்தகத்தின் மீது டச்சுக்காரர்களுக்கு அதிகாரம் அளித்தது. இது ஒரு சதுர வடிவ கோட்டை; சுண்ணாம்பு கற்களால் அமைக்கப்பட்டது.[8]
ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம்
(Cape Rachado Lighthouse)
தஞ்சோங் துவான் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம்; இந்தக் கலங்கரை விளக்கம் நாட்டிலேயே மிகப் பழமையானது; 16-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய மலாக்கா ஆட்சிக்கு முன்பாக இதன் வரலாறு தொடங்கி இருக்கலாம் என்று கூறப் படுகிறது; இந்த இடத்திற்கு உடைபட்ட முனை (Broken Cape) என்று போர்த்துகீசியர்கள் பெயர் வைத்து இருக்கிறார்கள். மலாக்கா நீரிணையை எதிர்கொள்ளும் இந்த கலங்கரை விளக்கம் மலேசிய வரலாற்றில் புகழ்பெற்ற இடமாகும்.[9][10]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kuala Sungai Baru, Melaka Postcode List - Page 1 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
  2. SUFFIAN ABU BAKAR. "Tender Empangan Air Sungai Jernih dibuka". Utusan Online.
  3. "University College of Islam Melaka".
  4. "Malaysia Maritime Academy".
  5. GAC Logistics "Linggi International Floating Transshipment HUB", 26 April 2007 பரணிடப்பட்டது 12 ஆகத்து 2014 at the வந்தவழி இயந்திரம்
  6. Utusan Malaysia "Kuala Linggi New Maritime HUB in Malacca Straits", 05 April 2012 பரணிடப்பட்டது 13 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம்
  7. "Taman Eko Rimba Paya Laut Tinggi" [Paya Laut Linggi Jungle Eco Park]. Jabatan Perhutanan Semenanjung Malaysia (in மலாய்). பார்க்கப்பட்ட நாள் 28 May 2021.
  8. "Kuala Linggi Fort".
  9. "Cape Rachado, also known as Tanjung Tuan, is an 80-hectare nature reserve 18km south from Port Dickson town. This hilly cape is a gazetted wildlife sanctuary that features a historical lighthouse on its summit". www.portdickson.info. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.
  10. "Cape Rachado Forest Reserves was gazetted as a wildlife sanctuary since 1971 and has been designated as an important Bird Life Area, supposedly oldest lighthouse in Malaysia. It was allegedly built between 1528 and 1529 by the Portuguese to guide its ships in the Straits of Malacca". AspirantSG - Food, Travel, Lifestyle & Social Media. 9 October 2013. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]