உள்ளடக்கத்துக்குச் செல்

கொனசீமா மாவட்டப் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொனசீமா மாவட்டப் போராட்டம் (Konaseema district protest) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற ஒரு போராட்டமாகும்.[1] ஆந்திராவிலுள்ள கொனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி.ஆர் அம்பேத்கார் கொனசீமா மாவட்டம் என மாற்றி அரசு அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து கொனசீமா மாவட்டப் போராட்டம் நடந்து வருகிறது.[2] கொனசீமா சாதனா சமிதி, கொனசீமா பரிரக்சனா சமிதி மற்றும் பிற அமைப்புகளின் உறுப்பினர்களால் போராட்டம் முதன்மையாக நடத்தப்பட்டது.[3]

போராட்டங்களும் சம்பவங்களும்

[தொகு]

அரசின் இந்த பெயர் மாற்ற முடிவை எதிர்த்து 2022 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதியன்று பல இளைஞர்கள் ஒன்று திரண்டு அமலாபுரத்தில் "சலோ கொனசீமா" என்ற பேரணியைத் தொடங்கினர். பேரணியின் போது, ​​காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கல்லுாரி பேருந்து, ஓர் அரசுப் பேருந்து ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உட்பட 20 காவலர்களுக்கும், போராட்டக்காரர்களில் 40 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.[4] இதனால் கொனசீமா மாவட்டம் முழுதும் பதற்றம் நிலவுகிறது.[5][6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mob Goes on a Rampage Over Renaming Konaseema after Dr BR Ambedkar". Sakshi Post (in ஆங்கிலம்). 2022-05-24. பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
  2. "ஆந்திரா: அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் வெடித்த கலவரம்; அமைச்சர், எம்.எல்.ஏ இல்லங்களுக்கு தீ வைப்பு". பார்க்கப்பட்ட நாள் 25 May 2022.
  3. Today, Telangana (2022-05-24). "AP: Konaseema district name change protests lead to lathicharge in Amalapuram". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
  4. "மாவட்டத்தின் பெயரை மாற்றியதால் பதற்றம் : ஆந்திராவில் அமைச்சர் வீட்டுக்கு தீ". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=3037716. பார்த்த நாள்: 25 May 2022. 
  5. "అమలాపురంలో తీవ్ర ఉద్రిక్తతలు.. పోలీసులపై రాళ్ల దాడి, బస్సుకు నిప్పు". Samayam Telugu (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
  6. Reporter, Staff (2022-05-24). "Dozens of protesters, policemen injured in clash over renaming Konaseema district in Andhra Pradesh" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-dozens-of-protesters-policemen-injured-in-clash-over-renaming-konaseema-district/article65456885.ece. 
  7. Staff, Scroll. "Homes of Andhra minister, MLA set on fire during protests against renaming of Konaseema district". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.