குரங்கின் இதயம் (தந்திரக்கதை)
குரங்கின் இதயம் என்பது சுவாகிலி கதைகளில் எட்வர்ட் ஸ்டீயரால் சேகரிக்கப்பட்ட ஒரு சுவாகிலி விசித்திரக் கதையாகும் . [1] ஆண்ட்ரூ லாங் அதை லிலாக் தேவதை புத்தகத்தில் சேர்த்தார் . நாட்டுப்புற கதை பட்டியல் குறியீடான ஆர்னே-தாம்சன் இல் 91 குறியீட்டை கொண்டுள்ளது. [2]
சுருக்கம்
[தொகு]கடலுக்கு அருகில் வசித்து வந்த ஒரு குரங்கும் கடலுக்குள் வசித்து வந்த ஒரு சுறாவும் நட்பாக இருந்தது. நட்பை வளர்க்கும் வகையில் அந்த குரங்கு தனது நண்பரான சுறாவிற்கு கடலுக்கு மேலாக வளர்ந்த ஒரு பெரிய அத்தி (mku yu) மரத்தின் பழங்களை வீசியது. அதை உண்ட சுறா சிறிது நேரம் கழித்து, குரங்கு தன்னுடன் வீட்டிற்கு வந்தால், அதற்க்கு ஒரு பரிசைத் தருவதாகச் சொன்னது ஆனால் தனது வீட்டிற்கு வர வேண்டும் என்றும் தானே குரங்கினை கூட்டிக்கொண்டு சென்று பரிசினை அளித்து பின்பு கூட்டிக்கொண்டு வந்து கரையிலேயே விட்டுவிடுவதாகவும் சொன்னது. சுறாவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட குரங்கும் அதன் முதுகில் ஏறி சென்றது. ஆனால் பாதி வழியில், தனது கடல் நாட்டின் அரசனுக்கு மரணம் வரக்கூடிய கொடிய நோய் ஒன்று இருப்பதாகவும், அவரை குணப்படுத்த எதாவது ஒரு குரங்கின் இதயம் தேவை என்பதால் தான் இந்த குரங்கை அழைத்து செல்வதாக சுறா கூறியது . சுதாகரித்து கொண்ட குரங்கு '''ஐயையோ, பாவம் உங்கள் மன்னர் , இது தான் காரணம் என முன்னரே தெரிந்திருந்தால் நான் வரும் போதே என் இதயத்தைக் கொண்டு வந்திருக்கலாம், இப்போது நான் மட்டும் தானே வருகிறேன் என் இதயம் என் வீட்டிலேயே இருக்கிறதே''' என கூறியது. குரங்கு கூறியதை நம்பிய சுறா அதனை மீண்டும் கரைக்கு அழைத்து வந்தது. கரைக்கு வந்ததுமே குரங்கு மரத்தில் ஏறிக்கொண்டு சுறாவோடு மறுபடி வர மறுத்தது. அப்போது தான் தான் ஏமாந்ததை அறிந்த சுறாவோ, மறுபடியும் வெகுமதி அளிப்பதாக கூறி குரங்கினை அழைத்தது . அப்போது அந்த குரங்கு சலவைக்காரனின் கழுதை என்ற கதையை கூறியதோடு அந்த கழுதை போல நான் இரண்டாம் முறை ஏமாந்து எனது உயிரை இழக்கமாட்டேன் ஏனெனில் நான் ஒரு குரங்கு, சலவைக்காரனின் முட்டாள் கழுதை அல்ல என்றது.
வெவ்வேறு மொழிகளில்
[தொகு]இந்தியா
[தொகு]இந்த கதைக்கு முன்னதாகவே , ஒரு சுறாவிற்குப் பதிலாக முதலையுடன், பஞ்சதந்திரத்தின் நான்காவது புத்தகத்திற்கான சட்டக் கதையாக இக்கதை கூறப்பட்டுள்ளது . இந்த பதிப்பில், குரங்கு தனது கணவனுக்கு கொடுத்த அத்திப்பழத்தை ரசித்து, குரங்கின் இதயத்தை உண்ண விரும்புவது முதலையின் மனைவி. [3] சுவாஹிலி பதிப்பில் ஒரே ஒரு உட்பொதிக்கப்பட்ட கதை மட்டுமே உள்ளது, பஞ்சதந்திர பதிப்பில் குரங்கு மற்றும் முதலை ஒருவருக்கொருவர் தங்கள் கதையின் நியாயத்திற்காக ஏராளமான கதைகளைச் சொல்கிறது, அதிலும் ஒரு கதை சலவைக்காரனின் கழுதையின் கதைக்கு ஒத்திருக்கிறது.
ஜப்பான்
[தொகு]நாட்டுப்புறவியலாளரான கெய்கோ செகி ஜப்பானில் இந்தக் கதை 11 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு பழங்கால கொன்ஜாகு மோனோகாதாரி எனப்படும் ஜப்பானிய நாட்டுப்புற கதைகளில் இக்கதை பிரபலமானது என்று கூறியுள்ளார் [4]
வர்ணனை
[தொகு]ஜே.ஆர்.ஆர். டோல்கீன் தனது தேவதை-கதைகளில் இந்தக் கதையை உண்மையில் விசித்திரக் கதை அல்ல என்பதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார், ஏனெனில் பிரிக்கப்பட்ட இதயம் ஒரு பொதுவான விசித்திரக் கதையின் மையக்கருவைப் போல இருந்தாலும், குரங்கின் தந்திர உபாயத்தை மட்டுமே கருவாக கொண்டுள்ளது என்று கருத்து கூறியுள்ளார். [5]
குறிப்புகள்
[தொகு]- ↑ Edward Steere (1870), Swahili Tales, "The Story of the Washerman's Donkey".
- ↑ D. L. Ashliman, The Monkey's Heart: folktales of Aarne-Thompson type 91.
- ↑ Jai, Kun (19 July 2017). "Panchatantra version of The Heart of a Monkey". Babygogo. Archived from the original on 29 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Seki, Keigo. Folktales of Japan. Translated by Robert J. Adams. University of Chicago Press. 1963. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226746142.
- ↑ J. R. R. Tolkien, "On Fairy-Stories", The Tolkien Reader, p. 15.