கியூபப் புரட்சி
கியூபப் புரட்சி | |||||||
---|---|---|---|---|---|---|---|
புரட்சித் தலைவர்கள் சே குவேரா (இடது), பிடல் காஸ்ட்ரோ (வலது), 1961 |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
சூலை 26 இயக்கம் | கியூபா குடியரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பிடல் காஸ்ட்ரோ ராவுல் காஸ்ட்ரோ சே குவேரா யுவான் அல்மெய்டா | புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா யூலோஜியோ சான்டிலோ ஒசே கிவேதோ ஆல்பெர்ட்டோ சாவியானோ யோக்கின் காசிலாசு கோர்னேலியோ ரோஜாசு பெர்னாண்டசு சுவேரோ |
||||||
இழப்புகள் | |||||||
5,000+ கியூபப் போர்வீரர்கள் பலி[1][2][3] |
கியூபப் புரட்சி என்பது பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான ஆயுதப் படைகள் கொரில்லா போரில் ஈடுப்ட்டு வென்ற நிகழ்வு ஆகும்.
புரட்சியின் பின்னணி
[தொகு]கியூப இராணுவத் தளபதி புல்கேன்சியோ பாடிஸ்டா, அந்நாட்டு அதிபர் கார்லோஸ் ப்ரியோ சொக்கர்ராஸ் என்பவரை மார்ச் 10, 1952 இல் பதவி நீக்கம் செய்து, நடக்கவிருந்த தேர்தல்களை ரத்து செய்தார். இதனால் ஆத்திரமடைந்த இளம் வழக்கறிஞரான ஃபிடெல் கேஸ்ட்ரோ இராணுவத் தளபதியின் ஆட்சியை முடிவுக்குக் கொணர ஏழு முறை முயன்று தோற்றார். சான்டியாகோவின் இராணுவ குடியிருப்புகளின் மீது சூலை 26, 1953 இல் அவர் நடத்திய தாக்குதலும் தோல்வியில் முடிந்தது; காஸ்ட்ரோ கைதானார்.
பதினைந்து வருட சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டபோதும், 1955 ஆம் ஆண்டே ஃபிடெல் விடுதலையானார். தனது திட்டத்திலிருந்து தளராத காஸ்ட்ரோ, மெக்ஸிகோவில் ஒரு புதிய கிளர்ச்சிப் படையைத் திரட்டினார். டிசம்பர் 2,1956 இல் மீண்டும் தோற்று, ஸியாரா மெய்ஸ்ட்ரோவுக்கு ஓடினார். இதன் பிறகே நேரடியான மோதல்களைத் தவிர்த்து கொரில்லா போர் முறையைக் கையில் எடுத்தார் ஃபிடெல்; கியூபாவெங்கும் பரவலாக இருந்த வெவ்வேறு எதிர்ப்பு சக்திகளின் உதவியையும் கேட்டுப் பெற்றார். இவரது விடா முயற்சியின் பயனாக, இறுதியில் பாடிஸ்டா பதவி விலகி 1959 புத்தாண்டு தினத்தன்று நாட்டைவிட்டே வெளியேறினார்; காஸ்ட்ரோ பிப்ரவரி 1959 இல் நாட்டின் அதிபரானார். முந்திய ஆட்சியாளர்களில் பலரும் கொல்லப்பட்டனர். தேர்தல் ரத்து செய்யப்பட்டது; கியூபாவின் நிரந்தர வாழ்நாள் அதிபராக தன்னைத்தானே பிரகடனம் செய்து கொண்டார் ஃபிடெல்.
புரட்சிக்கு பின்
[தொகு]எதிர் புரட்சி செய்தவர்கள் சிறைவாசம் அல்லது மரண தண்டனை பெற்றனர். கம்யூனிச ஆட்சி முறையைக் கொண்டு வந்து, அமெரிக்காவின் எதிர்ப்பை ஞம்பாதித்தார் எனினும் சோவியத்துடனான நட்புறவு மறைமுக எதிர்ப்புகளை நீக்க உதவியது. வெனிசுலா, கௌதமாலா, பொலிவியா, ஆகிய நாடுகளில் இவர் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு கிளர்ச்சிகள் தோல்வியில் முடிந்தன; இதன் காரணமாக, கியூபா அப்பகுதி நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டது.
கியூபாவின் தோழமை, அமேரிக்காவுடனான தனது பனிப்போரில் அமேரிக்காவிற்கு அருகாமையில், வலுசேர்க்கும் ஒரு உறவை ரஷ்யாவுக்குத் தந்ததால், அணு ஆயுதப் போர் சாத்தியக்கூறுகள் உச்சத்தை எட்டின.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jacob Bercovitch and Richard Jackson (1997). International Conflict: A Chronological Encyclopedia of Conflicts and Their Management, 1945–1995. Congressional Quarterly.
- ↑ Singer, Joel David and Small, Melvin (1974). The Wages of War, 1816–1965. Inter-University Consortium for Political Research.
- ↑ Eckhardt, William, in Sivard, Ruth Leger (1987). World Military and Social Expenditures, 1987–88 (12th edition). World Priorities.
- ↑ மனோரமா இயர்புக் 2016 தொகுத்தவர்: மாம்மன் மாத்யூ (பக்கம் எண்: 428)