உள்ளடக்கத்துக்குச் செல்

கார்த்திக் ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்த்திக்
பிறப்புகார்த்திகேயன்
21 சனவரி 1988 (1988-01-21) (அகவை 36)
சென்னை, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
கல்விபி.எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2011-இன்று வரை

கார்த்திக் ராஜ் என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் (2013-2015) என்ற தொடரிலும் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஆனார்.

2017 ஆம் ஆண்டில் சென்னை டைம்ஸ் செய்தித்தாளில் மிகவும் விரும்பத்தக்க 15 தொலைக்காட்சி ஆண்களில் கார்த்திக் ராஜ் 14 வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[1]. இவரின் நடிப்புத்திறனுக்காக 2014ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி விருதுககளில் சிறந்த ஜோடிக்கான விருதை ஆபீஸ் தொடரில் நடித்த நடிகை ஸ்ருதி ராஜ் உடன் இணைத்தும், 2018ஆம் ஆண்டு 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த நடிகர் போன்ற விருதுகளை வென்றுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

கார்த்திகேயன் ஜனவரி 21, 1988 தமிழ் நாட்டில் இல் பிறந்தார். இவர் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் முடித்துள்ளார். அவரது தந்தை 30 ஆண்டுகளாக தயாரிப்பு துறையில் இருந்தமையால் இவர் திரைப்படத்துறைக்கு வர காரணமாக இருந்தது. இவர் தனது கல்லூரி தோழியான யாஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர் ஒரு இந்து மற்றும் இவரின் மனைவி ஒரு முஸ்லிம் ஆவார்.

நடிப்புத் துறை

[தொகு]

இவர் 2011ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற தொடருக்கான நடிகர்களின் தேர்வு மூலம் தெரிவாகி அந்த தொடரில் கார்த்திக் என்ற முன்னணி காதாபாத்திரத்தில் நடித்தார் இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் 2011ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை சாய் பிரமோதித்தா நடித்துள்ளார். இதை அடுத்து அதே தொலைக்காட்சியில் 2013ஆம் ஆண்டு பணி சார்ந்த நகைச்சுவை தொடரான ஆபீஸ் (2013-2015) தொடரில் கார்த்திகேயன் என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ராஜ் நடித்துள்ளார். இந்த தொடரில் இவருடன் விஷ்ணு, மதுமிலா. உதய் மகேஷ் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த தொடரில் இவர்களின் காதல் காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது மற்றும் தொடரும் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றது.

2014ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் பகுதி 8[2] என்ற நடைபோட்டி நிகழ்ச்சியில் நடிகை ஜெனிபருடன் ஜோடியாக பங்குபெற்றார். 2017ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி என்ற தொடரில் ஆதித்யா என்ற காதாபாத்திரத்தில் நடிகை பிரியா ராமன் மற்றும் ஷபானா ஷாஜஹான் இணைத்து நடித்து வருகின்றார்கள். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த தொடரில் நடித்ததற்காக 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள், மைலாப்பூர் அகாடமி விருதுகள், 2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் போன்ற பல பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளார். இதே ஆண்டில் 465[3][4] என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதை அடுத்து நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல[5] என்ற திரைப்படத்தில் அனில் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்கள்

[தொகு]
ஆண்டு பெயர் கதாபாத்திரம் அலைவரிசை
2011-2012 கனா காணும் காலங்கள் கார்த்திக் விஜய் தொலைக்காட்சி
2013-2015 ஆபீஸ் கார்த்திகேயன்
2014 ஜோடி நம்பர் ஒன் பகுதி 8
2017-2020 செம்பருத்தி ஆதித்யா ஜீ தமிழ்

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு பெயர் கதாபாத்திரம்
2017 465 ஜெய்
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல அனில்

விருதுகள்

[தொகு]
ஆண்டு விருது பரிந்துரை தொடர் கதாபாத்திரம் முடிவு
2014 விஜய் தொலைக்காட்சி விருதுகள் விருப்பமான நடிகர் ஆபீஸ் கார்த்திகேயன் பரிந்துரை
விருப்பமான ஜோடி கார்த்திகேயன் & ராஜி வெற்றி
2015 விருப்பமான நடிகர் கார்த்திகேயன் பரிந்துரை
விருப்பமான ஜோடி கார்த்திகேயன் & ராஜி வெற்றி
2018 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் சிறந்த நடிகர் செம்பருத்தி ஆதித்யா பரிந்துரை
1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[6] விருப்பமான கதாநாயகன் ஆதித்யா வெற்றி
சிறந்த நடிகர் ஆதித்யா பரிந்துரை
சிறந்த ஜோடி ஆதித்யா & பார்வதி (ஷபானா ஷாஜஹான்) பரிந்துரை
மைலாப்பூர் அகாடமி விருதுகள் சிறந்த நடிகர் ஆதித்யா பரிந்துரை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chennai Times 15 Most Desirable Men on Television 2017". Times of India.
  2. "Sembaruthi Behind The Scenes". ஆனந்த விகடன்.
  3. "Karthik Raj: A horror thriller with very little dialogue". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  4. "465 Movie Press Meet". Cineulagam.com.
  5. "Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla Movie Teaser". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  6. "ஜீ தமிழ் நடத்தும் ‘குடும்ப விருது’ தேர்தல்" (in ta). tamil.thehindu.com. https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25066022.ece.