உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டுமன்னார்கோயில்

ஆள்கூறுகள்: 11°16′22″N 79°33′20″E / 11.272693110431502°N 79.5555038441671°E / 11.272693110431502; 79.5555038441671
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காட்டு மன்னார் கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காட்டுமன்னார்கோயில்
காட்டுமன்னார்கோயில்
அமைவிடம்: காட்டுமன்னார்கோயில், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°16′22″N 79°33′20″E / 11.272693110431502°N 79.5555038441671°E / 11.272693110431502; 79.5555038441671
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி காட்டுமன்னார்கோயில்
சட்டமன்ற உறுப்பினர்

சிந்தனை செல்வன் (விசிக)

மக்கள் தொகை

அடர்த்தி

27,294 (2011)

1,407/km2 (3,644/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 19.4 சதுர கிலோமீட்டர்கள் (7.5 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/kattumannarkoil

காட்டுமன்னார்கோயில் (Kattumannarkoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டம் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். காட்டுமன்னார்கோயில் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

[தொகு]

சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியிலிருந்து கடலூர் 75 கிமீ; கிழக்கே சிதம்பரம் 25 கிமீ; வடக்கே பண்ருட்டி 100 கிமீ; மேற்கே ‌ஸ்ரீமுஷ்ணம் 25 கிமீ விருத்தாசலம் 45 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

19.4 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 157 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,664 வீடுகளும், 27,294 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 86% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,589 மற்றும் 277 ஆகவுள்ளனர். [5]

வரலாறு

[தொகு]

காட்டுமன்னார்கோயில் வைணவத் தலமாகும். வைணவப் பெரியார்களான நாதமுனிகளும், அவரது மூதாதையரான ஆளவந்தாரும் தோன்றிய தலமாகும். வைணவர்கள் இதனை வீரநாராயணபுரம் எனக்குறிப்பிடுவர். இது கல்வெட்டுக்களில் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. வீராநாராயணன் என்ற விருதுப் பெயர் கொண்ட முதலாம் பராந்தகனால் இவ்வூர் அமைக்கப்பட்டது என்பர். இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில், கங்கை கொண்டசோழபுரத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

பள்ளிகள்

[தொகு]
  1. பருவதராஜ குருகுலம் மேல்நிலைப்பள்ளி
  2. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  3. அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  4. கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  5. ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  6. கலைமகள் (உதவிபெறும்) நடுநிலைப்பள்ளி
  7. கிழக்குப்பள்ளி
  8. ஆர்.சி.உயர்நிலைப்பள்ளி

வீராணம் ஏரி

[தொகு]

காட்டுமன்னார்கோயில் நகரத்திற்கு அருகில் சோழர்களால் உருவாக்க பட்ட வீராணம் ஏரி உள்ளது. காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள அணைக்கரை என்னும் கீழ்அணையிலிருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் இவ்வேரியின் கரையிலிருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரியை வீரநாராயண ஏரி என குறிப்பிடப்பட்டிருக்கும்.

அருகில் உள்ள பேரூராட்சிகள் & ஊராட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியின் இணையதளம்
  5. Kattumannarkoil Population Census 2011