உள்ளடக்கத்துக்குச் செல்

கறுப்புச் சாவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு கறுப்புச் சாவு. "The Chronicles of Gilles Li Muisis" (1272-1352), abbot of the monastery of St. Martin of the Righteous. Bibliothèque royale de Belgique, MS 13076-77, f. 24v

கறுப்புச் சாவு (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவிய ஒரு தொற்று நோய். இது மனித வரலாற்றிலே மிகவும் கெடுதியாக அமைந்த தொற்று நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பாக்டீரியாத் தொற்றினால் ஏற்பட்ட பிளேக் என்றே பரவலாக நம்பப்படுகிறது. இது சீனாவில் தோன்றி பட்டுப்பாதை வழியாக கிரிமியாவை சுமார் 1346 இல் அடைந்து, பின்னர் அங்கிருந்து இலண்டன் மற்றும் நண்ணிலப் பகுதிகளுக்கு பயணிக்கும் கப்பல்களில் மறைந்திருந்த கறுப்பு எலிகள் தொற்றுநோய் காவிகளாக செயற்பட்டமையால் ஐரோப்பாவில் உருப்பெறத் தொடங்கிற்று.

கறுப்புச் சாவு ஐரோப்பிய மக்கள்தொகையில் 30 விழுக்காட்டிற்கும் 60 விழுக்காட்டிற்கும் இடைப்பட்ட மக்களைக் கொன்றுள்ளது. ஐரோப்பிய வரலாற்றை சமூக, சமய, பொருளியல் தளங்களை மற்றியமைத்ததில் இக்கறுப்புச் சாவுக்கு பெரும் பங்கு உண்டு. இச்சாவிலிருந்து தேற 150 ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. மீளவும் இது அவ்வப்போது தலையெடுத்த போதும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் முற்றாக அழிக்கப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lawton, Graham (25 May 2022). Wilson, Emily (ed.). "Plague: Black death bacteria persists and could cause a pandemic". New Scientist. London. பன்னாட்டுத் தர தொடர் எண் 0262-4079. Archived from the original on 30 May 2022. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  2. "Economic life after Covid-19: Lessons from the Black Death". The Economic Times. 29 March 2020 இம் மூலத்தில் இருந்து 21 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200621020454/https://economictimes.indiatimes.com/markets/stocks/news/economic-life-after-covid-19-lessons-from-the-black-death/articleshow/74870296.cms?from=mdr. 
  3. "Plague". World Health Organization. October 2017. Archived from the original on 24 April 2015. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்புச்_சாவு&oldid=3889922" இலிருந்து மீள்விக்கப்பட்டது