உள்ளடக்கத்துக்குச் செல்

கர்னி காற்று எக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்னி காற்று எக்கி (Kearny air pump) என்பது, தங்குமிடத்தில் காற்றோட்டம் வர பயன்படுத்தப்படும் ஒரு பயனுள்ள காற்று எக்கியாகும். இதன் வடிவமைப்பை ஒரு நபரால் சாதாரண இயந்திர திறன்களை கொண்டு வடிவமைத்து இயக்க முடியும். இது பொதுவாக மனிதனால் இயங்குவதாகவும், நெருக்கடியான நேரத்தில் வேலை செய்யக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது படிமக்காப்புகொண்ட தங்கும் இடங்களில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சூறாவளிக்குப் பிறகு காற்றோட்டம் தேவைப்படுகிற எந்த சூழ்நிலையிலும் இந்த காற்று எக்கியைப் பயன்படுத்தலாம்.[1]

இது ஓக் ரிட்ஜ் நேஷனல் லேபரட்டரியில் கிரெஸ்ஸன் கியர்னி என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியினால் உருவாக்கப்பட்டது. மேலும் இது நியூக்ளியர் வார் சர்வைவர் ஸ்கில்சில் வெளியிடப்பட்டது.[2]

காற்று எக்கியின் அடிப்படை கொள்கையானது, ஒரு தட்டையான மேற்பரப்பு இறகுகள் கொண்டு உருவாக்கப்பட்டு, இயங்கும் காற்று வரும் போது மட்டும் திறந்து கொள்ளும், மற்ற நேரங்களில் மூடியிருக்கும். இந்த வடிவமைப்பு பன்காவில் இருந்து பெறப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kearny, Cresson H (1986). Nuclear War Survival Skills. Oak Ridge, Tennessee: Oak Ridge National Laboratory. pp. 194–213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-942487-01-X.
  2. 2.0 2.1 Kearny, Cresson H (1986). Nuclear War Survival Skills. Oak Ridge, Tennessee: Oak Ridge National Laboratory. pp. 51–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-942487-01-X. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)

வெளி இணைப்பு

[தொகு]