உள்ளடக்கத்துக்குச் செல்

கருங்கடல்

ஆள்கூறுகள்: 44°N 35°E / 44°N 35°E / 44; 35
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருங்கடல்
கருங்கடலின் அமைவிடம்
கருங்கடலின் வரைபடம் ஆழ்கடல் அளவியல் மற்றும் சுற்றியுள்ளவைவையின் வரைபடம்.
அமைவிடம்ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா
ஆள்கூறுகள்44°N 35°E / 44°N 35°E / 44; 35
வகைகடல்
முதன்மை வரத்துதன்யூபு, நிப்ரோ, தொன், தைனிசுடர், குபன், பொசுபோரசு (ஆழமான அலைகள்)
முதன்மை வெளியேற்றம்பொசுபோரசு
வடிநில நாடுகள்பல்காரியா, சியார்சியா, உருமேனியா, உருசியா, துருக்கி, உக்ரைன்
திக எண்ணிக்கையிலான நாடுகள் உள்வரும் ஆறுகளுக்கான வடிகால் படுகைகளில் சேர்க்கப்பட்டுள்ளன
அதிகபட்ச நீளம்1,175 km (730 mi)
மேற்பரப்பளவு436,402 km2 (168,500 sq mi)[1]
சராசரி ஆழம்1,253 m (4,111 அடி)
அதிகபட்ச ஆழம்2,212 m (7,257 அடி)
நீர்க் கனவளவு547,000 km3 (131,200 cu mi)
Islands10+

கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவுக்கும், அனதோலியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது மத்தியதரைக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது. இது பொஸ்போரஸ், மற்றும் மர்மாரா கடல் ஊடாக மத்தியதரைக் கடலுடனும், கேர்ச் நீரிணையூடாக அஸோவ் கடலுடனும் தொடுக்கப்பட்டுள்ளது.

கருங்கடல் 422,000 கிமீ3 பரப்பளவும், 2210 மீட்டர் அதிகூடிய ஆழமும் கொண்டது. பொஸ்போரஸ் ஊடாக கடல் நீர் உள்வரத்து ஆண்டுக்கு 200 கிமீ3 ஆகும். சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து, சிறப்பாக, மத்திய மற்றும் மைய-கிழக்கு ஐரோப்பா பகுதிகளிலிருந்து, 320 கிமீ3 நன்னீர் கருங்கடலினுள் சேருகின்றது. இக் கடலுட் கலக்கும் முக்கியமான ஆறு தன்யூப் (Danube) ஆறு ஆகும்.

கருங்கடலைச் சூழவுள்ள நாடுகள், துருக்கி, பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், ரஷ்யா, ஜோர்ஜியா என்பனவாகும். கிரீமியன் தீவக்குறை ஒரு உக்ரைனியன் தன்னாட்சிக் குடியரசு ஆகும்.

இஸ்தான்புல், பர்காஸ், வர்னா, கொன்ஸ்தாண்டா, யால்ட்டா, ஒடெஸ்ஸா, செவாஸ்தாபோல், கேர்ச், நொவோரோஸ்ஸிஸ்க், சோச்சி, சுக்குமி, பொட்டி, பட்டுமி, டிராப்சன், சாம்சுன், ஸொன்குல்டாக் என்பன கருங்கடற் கரையிலுள்ள முக்கிய நகரங்களாகும்.

கருங்கடல் (அசோவ் கடல் சேர்க்காமல்) 436,400 சதுர கிமீ (168,500 சதுர மைல்) பரப்பளவு, 2,212 மீ (7,257 அடி) [2] அதிகபட்ச ஆழம்,[3] மற்றும் 547.000 கிமீ 3 (131,000 மைல்). [[4] கொள்ளவு கொண்டுள்ளது. இது தெற்கில் போண்டிக் மலைகள் மற்றும் கிழக்கில் காகசஸ் மலைத்தொடரால் சூழப்பட்டு இருக்கிறது. இதன் நெடிய கிழக்கு - மேற்கு அளவு 1,175 கிமீ (730 மைல்) ஆகும்.

கடந்த காலத்தில், நீர் மட்டம் கணிசமாக வேறுபட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகள் சில நேரங்களில் நில இருந்துள்ளன . சில முக்கியமான நீர் மட்டங்களில், சுற்றியுள்ள நீர் நிலைகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற இணைப்புகளால் தான் கருங்கடல் உலக கடலுடன் இணைகிறது. இந்த நீரியல் இணைப்பு இல்லாத போது, கருங்கடல் உலக கடல் அமைப்புடன் தொடர்பில்லாத ஒரு ஏரியாக இருக்கிறது . தற்போது கருங்கடல் நீர் மட்டம் ஒப்பீட்டளவில் உயர்வாக உள்ளதால், மத்தியதரைக்கடல் பகுதியுடன் நீர் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

பாதுமி ஜார்ஜியாவில் கருங்கடல்.
கருங்கடலில் சூரிய அஸ்தமனம்.

மக்கள் தொகை

[தொகு]

கருங்கடலைச்சுற்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 நகரங்களில் மிக அதிக அளவிலான மக்கள் வசிக்கிறார்கள்.

கருங்கடலைச் சுற்றியுள்ள அதிக மக்கட்தொகை கொண்ட நகரங்கள்

Istanbul
இசுத்தான்புல்
ஒடேசா
Odessa

தரம் நகரம் நாடு மாவட்டம்/மாகாணம் மக்கட்தொகை (நகரம்)


Samsun
சாம்சன்
Varna
வர்னா

1 இசுத்தான்புல் துருக்கி இசுத்தான்புல் மாகாணம் 14,324,240[5]
2 ஒடேசா உக்ரைன் ஒடேசா ஒபலாஸ்து 1,003,705
3 சாம்சன் துருக்கி சாம்சன் மாகாணம் 535,401[6]
4 வர்னா பல்கேரியா வர்னா மாகாணம் 474,076
5 செவாசுத்தோபோல் ரசியா [7] கிரிமியன் தீபகற்பத்தின் தேசிய நகராட்சி 379,200
6 சோச்சி ரசியா க்ரசநோனடர் க்ராய் 343,334
7 த்ரப்சான் துருக்கி த்ரப்சான் மாகாணம் 305,231[8]
8 கன்சுடான்டா ரொமேனியா கன்சுடான்டா மாவட்டம் 283,872[9]
9 நொவொரோசிய்சிக் ரசியா கிராஸ்னதார் க்ராய் 241,952
10 புர்காசு பல்கேரியா புர்காசு மாகானம் 223,902[10]
11 பத்துமி சார்சியா இதார்சா தன்னாட்சி குடியரசு 190,405[11]

பெயர்

[தொகு]

தற்காலப் பெயர்கள்

[தொகு]

தற்போதைய வழக்கமாக ஆங்கில பெயரான "Black Sea" க்கு நிகரான அர்த்தத்தை கொடுக்கும் பல பெயர்கள் கருங்கடல் எல்லைக்குட்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன[12].

இத்தகைய பெயர்கள் 12 வது மற்றும் 13 வது நூற்றாண்டிற்கு முன்னர் வரை புழக்கத்தில் காணமுடியவில்லை என்றாலும் இவை கனிசமாக பழமையானவை. ஆயினும் கிரெக்க மொழியில் வேறு பொருள் படக்கூடிய பெயரில் கருங்கடலானது அழைக்கப்படுகிறது.

  • கிரேக்க மொழி: Eúxeinos Póntos (Eύξεινος Πόντος);நிலையான பயன்பாடு Mavri Thalassa (Μαύρη Θάλασσα) பேச்சு வழக்கில் குறைவான பயன்பாடு.

நிறங்களின் அடிப்படையில் பெயரிடப்பட்ட நான்கு கடல்களில் கருங்கடல் ஒன்றாகும். மற்றவை செங்கடல், வெள்ளை கடல் மற்றும் மஞ்சள் கடல் ஆகும்.

நீர் வள இயல்

[தொகு]

கருங்கடல் ஒரு குறு கடல் ஆகும்.[13] வளிமண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை பெறும் கடலின் மேல் அடுக்குகளுடன் ஆழமான கடல் நீர் கலப்பதில்லை. இதன் விளைவாக, 90% ஆழமான கருங்கடல் தொகுதியில் உயிரைத்தாங்கும் தண்ணீர் இல்லை.[14]

சூழலியல்

[தொகு]

கருங்கடல் உப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த கடல் சுற்றுச்சூழலில் வாழக்கூடிய உயிரினங்களை ஆதரிக்கிறது. அனைத்து கடல் உணவு வலைகளுக்குள் போல, கருங்கடல் இரு கசை உயிர்கள் உட்பட தான்வளரி பாசிகளை முதன்மை தயாரிப்பாளர்களாக கொண்டுள்ளது.

மிதவை தாவர உயிரிகள்

[தொகு]

அழியக்கூடிய நிலையில் உள்ள விலங்கு இனங்கள்

[தொகு]

நவீன பயன்பாடு

[தொகு]

வர்த்தக பயன்பாடு

[தொகு]

துறைமுகங்கள் மற்றும் படகு இல்லங்கள்

[தொகு]

சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் 2013 ஆய்வின்படி, கருங்கடல் பகுதியில் குறைந்தது 30 வணிக துறைமுகங்கள் இருந்தன. (உக்ரைனில் 12 உட்பட).[15]

வணிக கப்பல் போக்குவரத்து

[தொகு]

மீன்பிடித்தல்

[தொகு]

எரிவாயு ஆராய்ச்சி பணிகள்

[தொகு]

1980 களில் இருந்து, சோவியத் ஒன்றியம் கடலின் மேற்கு பகுதியில் (உக்ரைன் கடற்கரை பக்கத்தில்) பெட்ரோலிய அகழ்வாராய்ச்சியை தொடங்கியது .

விடுமுறை தளம்

[தொகு]
கருங்கடலின் முக்கிய நகரங்கள்

பனிப்போரின் முடிவை தொடர்ந்து, ஒரு சுற்றுலாதலமாக கருங்கடலின் புகழ் அதிகரித்துள்ளது. கருங்கடலின் சுற்றுலா இப்பகுதியின் வளர்ச்சி துறைகளில் ஒன்றாக மாறியது[16].

கருங்கடலின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பெயர்கள்
[தொகு]

நவீன இராணுவ பயன்பாடு

[தொகு]

ஸ்ட்ரெய்ட்ஸ் சர்வதேச மற்றும் இராணுவ பயன்பாடு [தொகு] 1936 மான்ட்ரியக்ஸ் மாநாடு கருங்கடல் மற்றும் மத்தியதர கடல்களின் சர்வதேச எல்லைக்கிடையே கப்பல்கள் சென்று வர அனுமதி வழங்குகிறது . எனினும் இந்த இரண்டு கடல்களையும் இணைக்கும் ஜலசந்தி தனி ஒரு நாட்டின் ( துருக்கி ) முழு கட்டுப்பாட்டில் உள்ளது. 1982 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் துருக்கி அதன் விருப்பப்படி அந்த ஜலசந்தியை மூட அனுமதிக்கின்றன.[17]

குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்

[தொகு]

தகவல் குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Black Sea NGO Network | Our Black Sea". www.bsnn.org.
  2. Surface Area—"Black Sea Geography". University of Delaware College of Marine Studies. 2003. Archived from the original on 29 ஏப்ரல் 2007. பார்க்கப்பட்ட நாள் 23 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Maximum Depth—"Europa – Gateway of the European Union Website". Environment and Enlargement – The Black Sea: Facts and Figures. Archived from the original on 2008-11-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-23.
  4. "Unexpected changes in the oxic/anoxic interface in the Black Sea". Nature Publishing Group. March 30, 1989. பார்க்கப்பட்ட நாள் 23 December 2013.
  5. "Turkish Statistical Institute". Rapor.tuik.gov.tr. Archived from the original on 3 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.
  6. "Turkish Statistical Institute". Rapor.tuik.gov.tr. Archived from the original on 16 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Annexation of Crimea by the Russian Federation, Wikipedia.
  8. "Turkish Statistical Institute". Rapor.tuik.gov.tr. Archived from the original on 16 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. Stiati.ca. "Cele mai mari orase din Romania". Stiati.ca. Archived from the original on 11 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Turkish Statistical Institute". Rapor.tuik.gov.tr. Archived from the original on 18 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Batumi City Hall website". http://www.batumi.ge. பார்க்கப்பட்ட நாள் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  12. Özhan Öztürk (2005). Karadeniz Ansiklopedik Sözlük. İstanbul: Heyamola Yayınları. pp. 617–620. Archived from the original on 2012-10-15. பார்க்கப்பட்ட நாள் 2017-05-19.
  13. [Descriptive Physical Oceanography. Talley, Pickard, Emery, Swift. Retrieved 4 November 2013.]
  14. Exploring Ancient Mysteries: A Black Sea Journey. Retrieved 4 November 2013.
  15. "Черное море признано одним из самых неблагоприятных мест для моряков". International Transport Workers' Federation. BlackSeaNews. 2013-05-27. http://www.blackseanews.net/read/64439. பார்த்த நாள்: 20 September 2013. 
  16. "Bulgarian Sea Resorts". Archived from the original on ஏப்ரல் 27, 2020. பார்க்கப்பட்ட நாள் 2 February 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "Montreaux and The Bosphorus Problem". Archived from the original on 2014-07-09. பார்க்கப்பட்ட நாள் 2013-12-23. (துருக்கி மொழி)

பொது நூல் பட்டியல்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கருங்கடல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கடல்&oldid=3928583" இலிருந்து மீள்விக்கப்பட்டது