உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணிமைமுடிச் சாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஸ்காராவும் தூரிகையும்

கண்ணிமைமுடிச் சாயம் (அல்லது) மஸ்காரா (Mascara) ஒரு ஒப்பனைப் பொருள்[1]. பொதுவாக இது கண்களை மேம்படுத்த உதவும். இது கண்ணிமை முடிகளை (eyelashes) நீளமாக்கவோ, கருப்பாகவோ, தடிப்பாகவோ காட்டும். பொதுவாக இது திரவ வடிவில், அணிச்சல் அல்லது களிம்பு வடிவில் இருக்கும். இது நிறமிகள் ( pigments), எண்ணெய் பொருள்கள் (oils), மெழுகுகள் (waxes) மற்றும் காப்பீட்டு வேதிப்பொருள்கள் (preservatives) ஆகியவற்றினால் ஆனது.

சொற்பிறப்பியல்

[தொகு]

“மஸ்காரா” என்ற வார்த்தை எங்கிருந்து வந்ததென என்பதில் தெளிவில்லை. இருந்தபொதிலும் 'திரை (mask)' அல்லது 'சாயம் (stain)' எனப்பொருள்படும், ஸ்பானிஷ் வார்த்தையான மஸ்காரா(mascara)விலிருந்து வந்திருக்கலாம் மற்றும் 'திரை' எனப்பொருள் கொடுக்கும் இத்தாலிய வார்த்தையான மஸ்சேரா (maschera)விலிருந்தும் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது[2].

கண்ணிமைமுடியில் மஸ்காரா ஒப்பனையிடப்படுகிறது
கண்ணிமைமுடியில் மஸ்காரா ஒப்பனையிட்டபிறகு

சான்றுகள்

[தொகு]
  1. "மஸ்காரா". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 11, 2015.
  2. Harper, Douglas. “Mascara.”